உள்ளடக்கத்துக்குச் செல்

சு. முருகையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சு. முருகையன்
S.MURUGAIYAN MP
சு. முருகையன்
பிறப்பு(1920-08-23)23 ஆகத்து 1920
திருப்பத்தூர், தமிழ்நாடு, பிரித்தானிய இந்தியா
இறப்பு6 சனவரி 2003(2003-01-06) (அகவை 82)
திருவண்ணாமலை, தமிழ்நாடு, இந்தியா
பணிஅரசியல்வாதி
அரசியல் கட்சிதிமுக
சமயம்இந்து
பெற்றோர்சுப்பிரமணியம் முதலியார்
வள்ளியம்மாள்
வாழ்க்கைத்
துணை
அமராவதி முருகையன்
பிள்ளைகள்ஒரு மகள்
TIRUVANNAMALAI
சு. முருகையன் - அமராவதி முருகையன்

சு. முருகையன் முதலியார் (S. Murugaiyan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். ஒருங்கிணைந்த வடாற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் சுப்ரமணியன் வள்ளியம்மாள் இணையருக்கு மூன்றாவது பிள்ளையாக முருகையன் பிறந்தார். சண்முகம், விசாலாட்சி இருவரும் இவருக்கு மூத்தவர்களாவர். சிவகாமி, புனிதவதி என்ற இருவரும் முருகையனுக்கு இளையவர்களாக குடும்பத்தில் பிறந்தனர்.

இளமைப் பருவம் மற்றும் கல்வி[தொகு]

இவர் பிறந்த சிறிது காலத்திலே தாய் இயற்கையடைந்ததால் பாட்டியே இவரை வளர்த்தார். திருப்பத்தூர் நகராட்சி உயர்நிலை பள்ளியில் தனது பள்ளிப் பட்டிப்பை முடித்தார் தனது இளமைபருவத்தை திருப்பத்தூரிலேயே பெரிதும் கழித்தார். தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம் உருது இந்தி ஆகியமொழிகளையும் சரளமாக முருகையன் பேசுவார்

அரசியல்[தொகு]

பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 1939 ஆம் ஆண்டு நீதிக் கட்சியில் முருகையன் சேர்ந்தார். பின்னர் 1944 ஆம் ஆண்டு பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று செயல்பட்டார். நீதிக்கட்சி பின்னாளில் திராவிட கழகமாக பெயர்மாற்றம் கொண்டபோதும் பகுத்தறிவு கொள்கையால் ஈர்க்கப்பட்டு முருகையன் இயங்கினார். திராவிட முன்னேற்ற கழகம் துவங்கப்பட்டதில் இருந்து கட்சியில் இயங்கியவர் பின்னர் 1993 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1996 ஆம் ஆண்டு மீண்டும் திராவிட முன்னேற்ற கழகத்திற்குத் திரும்பினார்.

முருகையன் 1967, மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், கலசப்பாக்கம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவா் 1980 ஆண்டு திருப்பத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] மேலும் இவர் திருவண்ணாமலை நகரத்தின் நகராட்சித் தலைவராகவும், இந்நகர செங்குந்தர் மகாஜன சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

வகித்த பொறுப்புகள்[தொகு]

 • வட ஆற்காடு மாவட்டத் திராவிட முன்னேற்றக்கழகச் செயலாளர்
 • திருவண்ணாமலை மாவட்டத் திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளர்.
 • திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர்.
 • 1955 முதல் 1964 வரை திருவண்ணாமலை நகராட்சி மன்ற உறுப்பினர்.
 • 1963-ஆம் ஆண்டு உணவு மற்றும் வளர்ச்சிக் குழுவின் உறுப்பினர்.
 • 1965-ஆம் ஆண்டு மாநில தொழில் வளர்ச்சிக் குழுவின் உறுப்பினர்.
 • 1962-1967, 1967-1971, 1971-1976 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர்.
 • 1963 முதல் 1964 வரை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்.
 • 1965 முதல் 1966 வரை சிறப்புரிமைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
 • 1980-ஆம் ஆண்டு முதல் 1985-ஆம் ஆண்டு வரை மக்களவை உறுப்பினர்
 • 1986 முதல் 1991 வரை திருவண்ணாமலை நகர மன்றத்தின் தலைவர்.

தொண்டுகள்[தொகு]

 • 1970-ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் பதினான்காம் நாள் சண்முகா தொழிற்சாலை உயர்நிலைப்பள்ளியைத் திருவண்ணாமலை நகரில் நிறுவினார். இப்பள்ளியானது 1980-ஆம் ஆண்டு சூன் திங்கள் இருபத்தாறாம் நாள் மேல்நிலைப்பள்ளியாக உயர்ந்தது.
 • 1990-ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் ஒன்பதாம் நாள் அமராவதி முருகையன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியைத் திருவண்ணாமலை நகரில் நிறுவினார்.
 • அரசியல் மூலம் பொதுச்சேவைகள் செய்ததோடு மட்டுமல்லாமல் மக்களின் உடல்நலம் கருதி 1995-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் மூன்றாம் நாள் அமராவதி அமராவதி முருகையன் மருத்துவமனையை தொடங்கினார்.
 • முருகையனின் சீரிய முயற்சியால் 1997-1998 ஆம் ஆண்டில் திருவண்ணாமலை நகரில் சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது.
 • சு.முருகையன் நினைவு மாதிரி மேல்நிலைப் பள்ளி என்ற பெயரில் ஒரு கல்வி நிறுவனம் திருவண்ணாமலையில் இயங்கி வருகிறது.[4]

இறுதிக்காலம்[தொகு]

வயது முதுமையும் உடல் நல பாதிப்பும் ஏற்பட்டு முருகையன் தனது 83-ஆம் வயதில் 2003 ஆம் ஆண்டு இயற்கையடைந்தார். .

மேற்கோள்கள்[தொகு]

 1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
 2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
 3. Election commission of India
 4. "about us". Tiruvannamalai. Archived from the original on 2020-07-10. பார்க்கப்பட்ட நாள் 2020-08-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._முருகையன்&oldid=3993033" இலிருந்து மீள்விக்கப்பட்டது