எம். ஆர். கந்தசாமி முதலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். ஆர். கந்தசாமி முதலியார் (M. R. Kandasamy Mudaliar, பிறப்பு : 2, அக்டோபர், 1913) என்பவர் இந்திய அரசியல்வாதியும், துணி வணிகரும் ஆவார். இவர் 1957 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக வீரபாண்டி தொகுதியிலிருந்து மதறாசு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சேலம் மாவட்டத்தின், ஆட்டயம்பட்டி வட்டத்தில் உள்ள வெள்ளநத்தத்தில் செங்குந்தர் குடும்பத்தில் பிறந்தவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Madras, 1957". Election Commission of India. Archived from the original on 20 September 2019. Retrieved 2 May 2020.