எஸ். சிவராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். சிவராஜ் (S. Sivaraj) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார்.  இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் 1984, 2006-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற  தமிழ்நாடு சட்டமன்றதேர்தலில் இரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2]1996 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் தமிழ் மாநில காங்கிரசு ( மூப்பனார்) அணி வேட்பாளராக இருந்தார்.[3][4]

பிறப்பு[தொகு]

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகரத்தைச் சேர்ந்த சமீன்தார் எம். சுப்பிரமணிய முதலியாருக்கு மகனாக பிப்ரவரி 16, 1955 ஆம் ஆண்டில் செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபில் பிறந்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. "Statistical Report on General Election 1996 to the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 6. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  4. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  5. "களம் காணும் வேட்பாளர்கள்". தினமணி. 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._சிவராஜ்&oldid=3477988" இலிருந்து மீள்விக்கப்பட்டது