முதலியார்
முதலியார் (முதலி) என்பது ஒரு தமிழ் பட்டமும் குடும்பப்பெயரும் ஆகும்.[1] பட்டமாக, இது வரலாற்று ரீதியாக சோழப் பேரரசு ஆட்சியின் போது உயர் பதவியில் இருந்த அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டது.[2][3] இந்த குடும்பப்பெயர் தமிழ்நாடு மற்றும் இலங்கை தமிழர்களிடையே மிகவும் பொதுவானது. தமிழ் குடியேறிகளின் வழித்தோன்றல்களும் தென்னாப்பிரிக்கா, இலங்கை, மலேசியா சிங்கப்பூர் மற்றும் தமிழ் பரவலிலும் இதன் மாற்று வடிவங்கள் காணப்படுகின்றன.[4]
இந்த பட்டத்தை பொதுவாக வேளாளர்- தொண்டைமண்டல வேளாளர், துளுவ வேளாளர் மற்றும் செங்குந்த கைக்கோளர் போன்ற சமூகத்தினர் சோழரின் காலத்தில் அமைச்சர்கள், இராணுவத் தளபதிகள் மற்றும் வீரர்களாக இருந்தபோது பயன்படுத்தினர்.[5]
சொற்பிறப்பு
இந்த பட்டம் தமிழ் வார்த்தையான முதல் அல்லது முதர் என்பதிலிருந்து உருவானது, அதாவது முதல் அல்லது முன்னணி என்பதைக் குறிக்கும். இதனுடன் யார் (மக்கள்) எனும் இறுதிச்சொல் சேர்ந்து முதலியார் என்று உருவானது.[6]
வரலாறு
முதலி அல்லது முதலியார் என்ற சொல்லானது வரலாற்றாக வேளாளர்களுடன் (தொண்டைமண்டல வேளாளர், துளுவ வேளாளர், சைவ வேளாளர், சோழிய வேளாளர்) தொடர்புடையது, அவர்கள் ஒரு முன்னேறிய வகுப்பினர் ஆவர்.[7]
இந்த பட்டம் செங்குந்தர் சமூகத்தினராலும் பயன்படுத்தப்படுகிறது. செங்குந்தர்கள் பாரம்பரியமாக திறமையான நெசவாளர்கள் மற்றும் துணி வணிகர்களாக இருந்தனர்.[8] சோழர் ஆட்சிக்காலத்தில் செங்குந்தர்கள் வீரர்களாகப் பணியாற்றினர்; அவர்களுக்கு “செங்குண்ட முதலியார்” என்ற பட்டம் வழங்கப்பட்டது, இது தொண்டை மண்டலம் சமூகத்தில் அவர்களின் உயர்ந்த நிலையைச் சுட்டிக் காட்டுகிறது.[9][7][10]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ Barnett, Marguerite Ross (2015). The Politics of Cultural Nationalism in South India. Princeton University Press. p. 236. ISBN 9781400867189.
- ↑ Silva, Chandra Richard De (2009). Portuguese Encounters with Sri Lanka and the Maldives: Translated Texts from the Age of Discoveries (in ஆங்கிலம்). Ashgate Publishing, Ltd. p. 225. ISBN 9780754601869.
- ↑ Vidyodaya Journal of Arts, Science, and Letters: Vidyodaya Vidyā Kalā Bhāsāśāstrīya Sangrahaya (in ஆங்கிலம்). Vidyodaya Campus, University of Sri Lanka. 1970. p. 117.
- ↑ Younger, Paul (2010). New Homelands: Hindu Communities in Mauritius, Guyana, Trinidad, South Africa, Fiji, and East Africa (in ஆங்கிலம்). Oxford University Press, USA. p. 135. ISBN 978-0-19-539164-0.
- ↑ {{cite book |last=David |first=Kenneth |url=https://books.google.com/books?id=Vp_la9QMGIQC&q=Senkuntar+India+warriors+given+title+Mutaliyar+their+bravery&pg=PA188
- ↑ {{Cite book|url=https://books.google.com/books?id=YFF9BgAAQBAJ&pg=PA236%7Ctitle=The
- ↑ 7.0 7.1 {{cite book | last1 = Rajadurai | first1 = S. V. | last2 = Geetha | first2 = V. | year = 2004 | title = Response to John Harriss | editor1-last = Wyatt | editor1-first = Andrew | editor2-last = Zavos | editor2-first = John | publisher = Routledge | pages = 115 | isbn = 978-1-13576-169-1 | url = https://books.google.com/books?id=0L6RAgAAQBAJ&pg=PA115
- ↑ Mines 1984, ப. 11.
- ↑ Robb, Peter (1996). Meanings of Agriculture: Essays in South Asian History and Economics. Oxford University Press. p. 349.
- ↑ {{cite book |last=David |first=Kenneth |url=https://books.google.com/books?id=Vp_la9QMGIQC&q=Senkuntar+India+warriors+given+title+Mutaliyar+their+bravery&pg=PA188