டி. வி. ராஜேஸ்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. வி. ராஜேஸ்வர்
1857 முதல் சுதந்திரப் போரின் 150 வது ஆண்டுகளை நினைவுகூரும் நிகழ்வில் மீரட்டில் உள்ள கிரந்தி நினைவிடத்தில் டி.வி.ராஜேஸ்வர் மலர் அஞ்சலி செலுத்துகிறார், மே 06, 2007
உத்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
8 சூலை 2004 - 27 மே 2009
மேற்கு வங்காள ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
2 மார்ச் 1989 – 6 பிப்ரவை 1990
சிக்கிம் ஆளுநர்
பதவியில்
நவம்பர் 1985 - மார்ச் 1989
அருணாச்சலப் பிரதேச துணைநிலை ஆளுநர்
பதவியில்
10 ஆகஸ்ட் 1983 – 21 நவம்பர் 1985
இந்திய உளவுத்துறையின் தலைவர்
பதவியில்
பிப்ரவரி 1980 - ஆகஸ்ட் 1983
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 28, 1926(1926-08-28)
,85 ஆர் கொமராபாளையம் குருசாமிபாளையம் கிராமம், நாமக்கல் பழைய சேலம் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு 14 சனவரி 2018(2018-01-14) (அகவை 91)
புது தில்லி, இந்தியா

டி. வி. ராஜேஸ்வர் (T.V. Rajeshwar) (ஆகஸ்ட் 28, 1926, சேலம், தமிழ்நாடு - 14 ஜனவரி 2018 புது தில்லி ) [1] தங்கவேலு இராஜேஸ்வர் முதலியார் எனப்படும் இவர் இந்தியக் காவல் பணி அதிகாரியாகவும், இந்திய உளவுத்துறை தலைவராகவும் இருந்தார். மேலும், சிக்கிம், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றினார். இவருக்கு 2012இல் பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது. இவர் 14 ஜனவரி 2018 அன்று இறந்தார் [2]

தொழில்[தொகு]

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இராசிபுரம் வட்டத்தில் குருசாமிபாளையம் என்ற கிராமத்தில் நெசவாளரான மாரிமுத்து முதலியாருக்குப் பிறந்தார். உள்ளூரிலிருக்கும் செங்குந்தர் மகாஜன பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இவர் 1949 இல் இந்தியக் காவல் பணித்தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஐதராபாத்திலுள்ள நிஜாமாபாத், ராய்ச்சூர், குண்டூர் ஆகிய மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றுமாறு இந்திய அரசு இவருக்கு உத்தரவிட்டது. பின்னர் ஐதராபாத்து காவல் துணை ஆணையராக பல ஆண்டுகள் பணியாற்றினார். [3] [4]


ஆளுநர் பணி[தொகு]

1983 ஆகஸ்ட் முதல் 1985 நவம்பர் வரை அருணாச்சல பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக இருந்தார். நவம்பர் 1985 முதல் மார்ச் 1989 வரை சிக்கிமின் ஆளுநராக பணியாற்றினார். இவர் 20 மார்ச் 1989 முதல் 1990 பிப்ரவரி 7 வரை மேற்கு வங்காளத்தின் ஆளுநராகவும், 8 ஜூலை 2004 முதல் 2009 ஜூலை 27 வரை உத்தரப்பிரதேச ஆளுநராகவும் இருந்தார். [5]

குடும்பம்[தொகு]

இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் சுஜாதா சிங் முன்னாள் இந்திய வெளியுறவு அதிகாரியும், ஜெர்மனிக்கான இந்திய தூதரும், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளருமாவார் .

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._வி._ராஜேஸ்வர்&oldid=3752895" இருந்து மீள்விக்கப்பட்டது