நான்காம் ஆகா கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்காம் ஆகா கான்
தேசியம்பிரித்தானிய குடிமகன், போர்ச்சுகல்
பட்டம்ஷா கரிம் அல்-உசைனி

இளவரசர் ஷா கரீம் அல்-உசைனி ( Prince Shāh Karim al-Husayni; பிறப்பு 13 திசம்பர் 1936),[1] இஸ்மாயிலி சியா பிரிவுகளில் மௌலானா அசார் இமாம் என்ற மதத் தலைப்பாலும், பிற இடங்களில் நான்காம் ஆகா கான் எனவும் அறியப்படுகிறார்.[2] மேலும், சியா இசுலாமின் நிசாரி இஸ்மாயிலியின் 49வது இமாமாக இருக்கிறார். தனது 20 வயதில், தனது தாத்தா சர் சுல்தான் முகம்மது ஷா என்கிற மூன்றாம் ஆகா கானுக்குப் பிறகு இவர் ஜூலை 11, 1957 முதல் இமாமாக இருக்கிறார்.[3] இசுலாமிய தீர்க்கதரிசி முகம்மது நபியின் உறவினரும் மருமகனுமான அலீ,[4] [5] அலீயின் மனைவி பாத்திமா , முகம்மது நபியின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகள் ஆகியோரின் நேரடி வம்சாவளியாக தான் இருப்பதாக ஆகா கான் கூறுகிறார்.

பின்னணி[தொகு]

ஆகா கானின் நிகர சொத்து மதிப்பு 13 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.[6] போர்ப்ஸ் இதழ் இவரை உலகின் பதினைந்து பணக்கார அரசர்களில் ஒன்றாக வர்ணிக்கிறது. கூடுதலாக, இவர் ஒரு நாட்டை ஆளாததால் பணக்கார அரசர்களில் தனித்துவமானவர். உலகளாவிய வறுமையை ஒழிப்பதும், பெண்களின் நிலையின் முன்னேற்றம் காண்பதும், இஸ்லாமிய கலையையும் இஸ்லாமியக் கட்டிடக்கலையையும் வளர்த்தெடுப்பதும், மத பன்மைத்துவத்தை மேம்படுத்துதலும், அதை செயல்படுத்துதலும் தனது குறிக்கோள் என்று இவர் கூறுகிறார்.[7] [8] [9] [10] [11]

ஆகா கான் மேம்பாட்டு வலையமைப்பு[தொகு]

உலகின் மிகப்பெரிய தனியார் மேம்பாட்டு வலையமைப்புகளில் ஒன்றான ஆகா கான் மேம்பாட்டு வலையமைப்பின் நிறுவனராகவும் தலைவராகவும் இருக்கிறார். சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, கட்டிடக்கலை, கலாச்சாரம், சிறுநிதி, கிராமப்புற மேம்பாடு, பேரழிவை குறைத்தல், தனியார் துறை நிறுவனங்களை மேம்படுத்துதல், வரலாற்று நகரங்களுக்கு புத்துயிர் அளித்தல் ஆகியவற்றில் இந்த அமைப்பு செயல்படுகிறது.[8] [11] [12] [13]

பணிகள்[தொகு]

1957 ஆம் ஆண்டில் நிசாரி இஸ்மாயிலின் இமாமாக இவர் பதவியேற்றதிலிருந்து, சிக்கலான அரசியலிலும் பொருளாதார மாற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார். இது இவரை பின்பற்றுபவர்களை பாதித்துள்ளது. இவரது பணிகளில் காலனித்துவ ஆட்சியில் இருந்து ஆப்பிரிக்க நாடுகளின் சுதந்திரம், உகாண்டாவிலிருந்து ஆசியர்களை வெளியேற்றுவது, தஜிகிஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளுக்கு முன்னாள் சோவியத் ஒன்றியத்திலிருந்து சுதந்திரம், ஆப்கானித்தான் , பாக்கித்தான் ஆகிய நாடுகளில் நடக்கும் தொடர்ச்சியான கொந்தளிப்பு உள்ளிட்டவை அடங்கும். 27 பிப்ரவரி 2014 அன்று கனடா நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய முதல் தலைவராக இவர் இருந்தார். [14]

1964 ஒலிம்பிக்கில் ஆகா கான்
ஆகா கான் 1959 இல் லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகத்திற்கு வருகை தந்தபோது, முதல் அணு குண்டு வெடிப்பிலிருந்து எஞ்சியிருந்த டிரினிட்டி அணுகுண்டைப் பரிசாகப் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Aga Khan IV". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 16 December 2019.
 2. "His Highness the Aga Khan". Archived from the original on 6 November 2011. பார்க்கப்பட்ட நாள் 26 November 2011.
 3. "World View – Aga Khan". Archived from the original on 24 July 2011. பார்க்கப்பட்ட நாள் 15 September 2010.
 4. Morris, H. S. (1958). "The Divine Kingship of the Aga Khan: A Study of Theocracy in East Africa". Southwestern Journal of Anthropology 14 (4): 454–472. doi:10.1086/soutjanth.14.4.3628938. 
 5. "The Aga Khan's Direct Descent From Prophet Muhammad: Historical Proof". Ismaili Gnosis Research Team. பார்க்கப்பட்ட நாள் 9 July 2016.
 6. Reginato, James. "How the Fourth Aga Khan Balances Spiritual Muslim Leadership with a Multi-billionaire Lifestyle". Vanity Fair (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 January 2020.
 7. Aga Khan joins prime minister's neighbourhood பரணிடப்பட்டது 27 ஆகத்து 2012 at the வந்தவழி இயந்திரம்.
 8. 8.0 8.1 (23 November 2008) Aga Khan holds up Canada as model for the world பரணிடப்பட்டது 14 பெப்பிரவரி 2016 at the வந்தவழி இயந்திரம்.
 9. Pakistan Poverty Alleviation Fund பரணிடப்பட்டது 1 பெப்பிரவரி 2016 at the வந்தவழி இயந்திரம்.
 10. Husan, Ishrat. "Lessons for Poverty Reduction" (PDF). Archived from the original (PDF) on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
 11. 11.0 11.1 Aga Khan Development Network பரணிடப்பட்டது 15 நவம்பர் 2006 at the வந்தவழி இயந்திரம்.
 12. The Aga Khan, Leader of a Global Network of Cultural, Educational and.
 13. Blooming in Cairo பரணிடப்பட்டது 20 ஏப்பிரல் 2012 at the வந்தவழி இயந்திரம்.
 14. Rizwan Mawani (3 March 2014). "A Relationship of Mutual Respect and Admiration: His Highness the Aga Khan Becomes First Faith Leader to Address Joint Session of Canadian Parliament". Huffington Post. http://www.huffingtonpost.com/rizwan-mawani/mutual-respect-and-admiration_b_4875038.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_ஆகா_கான்&oldid=3614022" இலிருந்து மீள்விக்கப்பட்டது