வெ. கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெங்கடராமன் கிருஷ்ணமூர்த்தி
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 14, 1925(1925-01-14)
இறப்பு 26 சூன் 2022(2022-06-26) (அகவை 97)

டாக்டர். வெங்கடராமன் கிருஷ்ணமூர்த்தி (V. Krishnamurthy ), தமிழ்நாட்டில் பிறந்த இந்திய ஆட்சிப் பணியாளர் ஆவார்.[1] அவர் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான பொதுத்துறை நிறுவனங்களுக்கு தலைமை வகித்தார்.

வெ. கிருஷ்ணமூர்த்தி இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார். பி.ஹச்.இ.எல், மாருதி உத்யோக் லிமிடெட், எஸ்.ஏ.ஐ.எல். மற்றும் ஜி.ஏ.ஐ.எல். ஆகியவற்றை இந்தியா மற்றும் உலகெங்கிலும் மிக அதிக லாபம் ஈட்டும் தொழில் நிறுவனமாக மாற்றுவதில் அவரது தலைமையையும் வெற்றிகரமான பங்களிப்பையும் தந்துள்ளார்.

இவர், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் , மாருதி உத்யோக் லிமிடெட், ஸ்டீல் ஆணையம் இந்தியா லிமிடெட் மற்றும் கெயில் (இந்தியா) லிமிடெட் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். அவர் பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஐஐஎம் தலைவராக இருந்தார்; ஐஐடி தில்லி; சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், புவனேஸ்வர்; மற்றும் ஹைதராபாத் அமைப்பின் வளர்ச்சி மையம் ஆகியவற்றின் உறுப்பினராக இருந்தார். அவர் தகவல் தொழில்நுட்பம், தொலைநோக்கு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் தலைவர்.

அவர் 2004முதல் 2008 வரை தேசிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார். மற்ற பதவிகளில், அவர் தொழில், அமைச்சகத்தின் உறுப்பினர், திட்ட ஆணையம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் செயலாளராக இருந்தார். அவர் 2014 ஆம் ஆண்டு வரை ஒரு அமைச்சர் அந்தஸ்துடன் கூடிய, தேசிய உற்பத்தி போட்டித்திறன் கவுன்சிலின் தலைவராக இருந்தார். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சோனியா காந்தி தலைமையிலான ராஜீவ் காந்தி அறக்கட்டளையின், அறங்காவலர்களில் ஒருவராக இருந்தார்.

1944 இல் அவர் பின்னர் சென்னை மின்சார வாரியத்தில் பணிபுரிந்தார். பின்னர், 1954 இல், இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவுடன் நேரடியாகப் பணிபுரிந்தார். மேலும், இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், மின்சார உற்பத்திக்கு பொறுப்பேற்றார். இவர், முதல் பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் போன்றவர்களுடன் இந்திய அரசின் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

வெ. கிருஷ்ணமூர்த்தி 1925 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ம் தேதி பிறந்தார். இவரது தந்தையின் பெயர் வெங்கடராமன் என்பதாகும். இவருக்கு சுப்பிரமணியன் மற்றும் வைத்தியநாதன் என்ற இரண்டு சகோதரர்கள் இருந்தனர். இவர் ராஜம் என்பவரை மணந்தார். இவர்களுக்கு, ஜெயகர் மற்றும் சந்திரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

மரியாதைகள்[தொகு]

1973 ஆம் ஆண்டில் இந்திய அரசால் வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம ஸ்ரீ .விருது இந்திய குடியாட்சி பிரிவில் இவருக்கு வழங்கப்பட்டது.[2]

1986 ஆம் ஆண்டில் இந்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷண் விருது இந்திய குடியாட்சி பிரிவில் இவருக்கு வழங்கப்பட்டது.[3]

2007 ஆம் ஆண்டில் இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது இந்திய குடியாட்சி பிரிவில் இவருக்கு வழங்கப்பட்டது.[4]

குறிப்புகள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  2. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  3. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  4. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._கிருஷ்ணமூர்த்தி&oldid=3572192" இருந்து மீள்விக்கப்பட்டது