கிரிஜா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரிஜா தேவி
Girija Devi at Bhopal (1).JPG
சூலை 2015இல் போபால் பாரத் பவனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தேவி
பின்னணித் தகவல்கள்
பிறப்பு1929 மே 8
வாரணாசி, காசி நாடு, பிர்த்தானிய இந்தியா
இறப்பு2017 அக்டோபர் 24 (வயது 88)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இசைத்துறையில்1949 முதல் 2017 வரை

கிரிஜா தேவி (Girija Devi) (பிறப்பு: 1929 மே 8 - இறப்பு: 2017 அக்டோபர் 24) வாரணாசி மற்றும் செனியா கரானாக்களின் இந்திய பாரம்பரிய பாடகர் ஆவார். இவர் பாரம்பரிய இசை மற்றும் மெல்லிசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். மேலும் தும்ரியின் சுயவிவரத்தை உயர்த்த உதவினார். இவர் 2017 அக்டோபர் 24 அன்று இறந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கிரிஜா தேவி 1929 மே 8 ஆம் தேதி வாரணாசியில் ஜமீன்தாரான ராம்தியோ ராய் என்பவருக்கு பிறந்தார். [1] இவரது தந்தை ஆர்மோனியம் வாசிப்பவராகவும், இசையை கற்றுக் கொடுப்பவராகவும் இருந்தார். கிரிஜா தேவி தனது ஐந்து வயதில் தொடங்கி பாடகர் மற்றும் சாரங்கி இசைக்கலைஞர் சர்ஜு பிரசாத் மிஸ்ராவிடம் கியால் மற்றும் தப்பா பாடுவதில் பயிற்சி மேற்கொண்டார். பின்னர், இவர் தனது ஒன்பதாவது வயதில் யாத் ரஹே என்றத் திரைப்படத்தில் நடித்தார். மேலும்,சந்த் மிஸ்ராவின் கீழ் பலவிதமான பாணிகளில் தனது பயிற்சினைத் தொடர்ந்தார்.

தொழில்[தொகு]

2006இல் தேவி

கிரிஜா தேவி 1949ஆம் ஆண்டில் அலகாபாத், அகில இந்திய வானொலியில் அறிமுகமானார். ஒரு தொழிலதிபரை மணந்த கொண்டதினால் தனது தாய் மற்றும் பாட்டியின் எதிர்ப்பை எதிர்கொண்டார். அந்த காலகட்டத்தில் ஏனெனில் எந்தவொரு உயர் வர்க்கப் பெண்ணும் பகிரங்கமாக பொது வெளியில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தக்கூடாது என்று பாரம்பரியமாக நம்பப்பட்டது. [1] [2] கிரிஜா தேவி மற்றவர்களுக்காக தனிப்பட்ட முறையில் நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதில்லை என்று ஒப்புக் கொண்டார். ஆனால் 1951இல் பீகாரில் தனது முதல் பொது இசை நிகழ்ச்சியை வழங்கினார். சந்த் மிஸ்ரா 1960களின் முற்பகுதியில் இறக்கும் வரை அவரிடம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். 1980களில் கொல்கத்தாவில் உள்ள ஐ.டி.சி இசை ஆராய்ச்சி அகாதமியின் ஆசிரிய உறுப்பினராகவும், 1990களின் முற்பகுதியில் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் ஆசிரிய உறுப்பினராகவும் பணியாற்றினார். மேலும் இவரது இசை பாரம்பரியத்தை பாதுகாக்க பல மாணவர்களுக்கு கற்பிக்கவும் செய்தார். கிரிஜா தேவி அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து 2009 வரை தொடர்ந்து தனது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். [3]

கிரிஜா தேவி பனாரசு கரானா பாணியில் பாடி, பொதுவான பாரம்பரிய பூராபி ஆங் தும்ரி பாணியை நிகழ்த்தினார். மேலும், அதன் நிலையை உயர்த்தவும் இவர் உதவினார். [4] [5] கஜ்ரி, சைட்டி மற்றும் ஹோலி ஆகிய பாரம்பரிய வகைகள் இவரது தொகுப்பில் உள்ளடங்கியது, மேலும், இவர் கியால், இந்திய நாட்டுப்புற இசை மற்றும் தப்பா ஆகியவற்றையும் பாடினார். [6] நியூ க்ரோவ் அகராதி இசை மற்றும் இசைக்கலைஞர்கள் என்ற அமைப்பு ஒருமுறை இவரது பாரம்பரிய வகைப் பாடல்களை பீகார் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேச பாடல்களின் பிராந்திய பண்புகளுடன் இணைத்தது என்று கூறியது.

விருதுகள்[தொகு]

1972இல் இந்திய அரசு இவருக்குபத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது. அதனைத் தொடர்ந்து 1989இல் பத்ம பூசண் விருது , 2016இல்பத்ம விபூசண் [7] ஆகிய கௌரவங்களை வழங்கி இவரை கௌரவித்தது. 1977இல் சங்கீத நாடக அகாதமி விருதும் பின்னர், சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் கௌரவமும் [8] இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் 2012இல் மகா சங்கீத் சம்மன் விருது , [9] டோவர் லேன் இசை மாநாட்டில் 'இசை சம்மன் விருது', ஜிமா விருதுகள் 2012 (வாழ்நாள் சாதனை) மற்றும் தனரிரி புரசுகார் போன்ற பட்டங்களும் இவர் பெற்றுள்ளார்.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Ramnarayan, Gowri (11 November 2008). "Queen of thumri". தி இந்து. Archived from the original on 16 மே 2011. https://web.archive.org/web/20110516171539/http://www.hindu.com/mp/2008/11/11/stories/2008111150320600.htm. பார்த்த நாள்: 11 April 2009.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "TH081111" defined multiple times with different content
  2. Tandon, Aditi (17 February 2004). "Future of folk music uncertain, warns Girija Devi". The Tribune. http://www.tribuneindia.com/2004/20040218/punjab1.htm#28. பார்த்த நாள்: 11 April 2009. 
  3. Trivedi, Sukumar (5 January 2009). "Pandit Hariprasad Chaurasia works a charm with his magic flute". இந்தியன் எக்சுபிரசு. http://www.indianexpress.com/news/pandit-hariprasad-chaurasia-works-a-charm-with-his-magic-flute/406772/0. பார்த்த நாள்: 11 April 2009. 
  4. Tandon, Aditi. "Future of folk music uncertain, warns Girija Devi". http://www.tribuneindia.com/2004/20040218/punjab1.htm#28. 
  5. Dorian, Frederick; Broughton, Simon; Ellingham, Mark; McConnachie, James; Trillo, Richard; Duane, Orla (2000). World Music: The Rough Guide. Rough Guides. பக். 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85828-636-5. https://books.google.com/books?id=QzX8THIgRjUC&pg=PA91. 
  6. Kumar, Raj (2003). Essays on Indian music. Discovery Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7141-719-3. https://books.google.com/books?id=wwwX6DWfn3gC&pg=PA10. 
  7. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2015). மூல முகவரியிலிருந்து 15 November 2014 அன்று பரணிடப்பட்டது.
  8. "Padma Awards". Ministry of Communications and Information Technology. மூல முகவரியிலிருந்து 17 February 2012 அன்று பரணிடப்பட்டது.
  9. "Sangeet Natak Akademi Awards – Hindustani Music – Vocal". சங்கீத நாடக அகாதமி. மூல முகவரியிலிருந்து 1 February 2016 அன்று பரணிடப்பட்டது.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கிரிஜா தேவி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஜா_தேவி&oldid=3286701" இருந்து மீள்விக்கப்பட்டது