உள்ளடக்கத்துக்குச் செல்

கபிலா வாத்ஸ்யாயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2006இல் கபிலா வாத்ஸ்யாயன்
பிறப்பு25 திசம்பர் 1928 (1928-12-25) (அகவை 95)
தில்லி
இறப்பு16 செப்டம்பர் 2020(2020-09-16) (அகவை 91)
படித்த கல்வி நிறுவனங்கள்தில்லி பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம், பனாரசு இந்து பல்கலைக்கழகம்
பணிஅறிஞர், கலை வரலாற்றாளர்
வாழ்க்கைத்
துணை
அக்ஞேய

கபிலா வாத்ஸ்யாயன் (Kapila Vatsyayan, திசம்பர் 25, 1928 - செப்டம்பர் 16, 2020) இந்திய பாரம்பரிய நடனம், கலை, கட்டிடக்கலை மற்றும் கலை வரலாறு ஆகியவற்றின் முன்னணி அறிஞர் ஆவார். இவர் முன்னர் இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அதிகாரத்துவமாகவும் இருந்தார். மேலும் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் நிறுவன இயக்குநராகவும் பணியாற்றியுள்ளர்.

1970 ஆம் ஆண்டில், இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான இந்தியாவின் தேசிய அகாதமியான சங்கீத நாடக அகாதமி வழங்கிய சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் என்ற மிக உயர்ந்த கௌரவத்தை வாத்ஸ்யாயன் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து 1995 ஆம் ஆண்டில் இந்தியாவின் நுண்கலைகளுக்கான தேசிய அகாதமியான லலித் கலா அகாதமி வழங்கிய நுண்கலைகளில் மிக உயர்ந்த கௌரவமான லலித் கலா அகாடமி கூட்டாளர் கௌரவத்தையும் பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டில், இந்தியாவின் இரண்டாவது உயர்ந்த குடிமை கௌரவமான பத்ம விபூசண் விருது இந்திய அரசு வழங்கியது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி

[தொகு]

இவர் தில்லியில் ராம் லால் மற்றும் சத்தியவதி மாலிக் ஆகியோருக்கு பிறந்தார்.[1] தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பயின்றார்.[2] அதன்பிறகு, மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆன் ஆர்பரில் கல்வியில் இரண்டாவது முதுகலை மற்றும் பனாரஸ் இந்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

கவிஞரும் கலை விமர்சகருமான கேசவ் மாலிக் என்பவர் இவரது மூத்த சகோதரர் ஆவார். மேலும் இவர் இந்தி எழுத்தாளர் அக்ஞேய என்ற புகழ் பெற்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட சச்சிதானந்த ஹீரானந்த் வாத்ஸ்யாயன் (1911-1987) என்பவரை மணந்தார். இவர்கள் 1956 இல் திருமணம் செய்து 1969 இல் பிரிந்தனர்.

தொழில்

[தொகு]

வாத்ஸ்யாயன் , தி ஸ்கொயர் அண்ட் தி சர்க்கிள் ஆஃப் இந்தியன் ஆர்ட்ஸ் (1997), பாரத்: தி நாட்டிய சாஸ்திரா (1996), மற்றும் மாட்ரலட்சனம் (1988) உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.[3]

1987 ஆம் ஆண்டில், தில்லியில் இந்தியாவின் முதன்மை கலை அமைப்பான இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் (இந்திரா காலகேந்திரா) நிறுவனர் அறங்காவலர் மற்றும் உறுப்பினர் செயலாளரானார்.[3][4] அதன்பிறகு, 1993 ஆம் ஆண்டில், இவர் அதன் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு வரை இவர் பதவியில் இருந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான ஆட்சியின்போது அப்பதவியிலிருந்து வெளியேறி, 2005 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசு தலைமையிலான அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, அந்நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[5] இவர் கல்வி அமைச்சகத்தில் இந்திய அரசாங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றினா. அங்கு ஏராளமான தேசிய உயர் கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கு இவர் பொறுப்பேற்றார். புதுதில்லியின் இந்தியா சர்வதேச மையத்தில் ஆசியா திட்டத்தின் தலைவராக உள்ளார்.

இவர் இந்திய நாடாளுமன்றத்தின் 2006இல் மாநிலங்களவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் மார்ச் 2006 இல், இலாப அலுவலகச் சர்ச்சையைத் தொடர்ந்து இவர் பதவி விலகினார்.[6] 2007 ஏப்ரலில், இவர் மாநிலங்களவைக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார். இந்த அவையின் கால அவகாசம் 2012 பிப்ரவரி வரை நீடித்தது.[7]

விருதுகள்

[தொகு]

வாத்ஸ்யாயன் 1970 இல் சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் கௌரவத்தைப் பெற்றார்.[8] அதே ஆண்டில், அமெரிக்கா மற்றும் இந்தோனேசியாவில் கலாச்சார நிறுவனங்கள் மற்றும் சமகால கலை முன்னேற்றங்களை ஆய்வு செய்வதற்காக ஜான் டி. ராக்பெல்லர் 3 வது நிதியிலிருந்து இவருக்கு ஒரு கூட்டுறவு வழங்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டில் இவருக்கு மதிப்புமிக்க ஜவகர்லால் நேரு கூட்டுறவு வழங்கப்பட்டது.[9] 1992 ஆம் ஆண்டில் ஆசிய கலாச்சார அமைப்பு ஜான் டி. ராக்பெல்லர் 3 வது விருதை சிறந்த தொழில்முறை சாதனைகளுக்காகவும், சர்வதேச புரிந்துணர்வு, நடைமுறை மற்றும் இந்தியாவில் நடனம் மற்றும் கலை வரலாறு குறித்த இவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புக்காகவும் கௌரவித்தது.[10] 1998 ஆம் ஆண்டில், நடன ஆராய்ச்சிக்கான அமைப்பு (CORD) வழங்கிய "நடன ஆராய்ச்சிக்கான சிறந்த பங்களிப்பு" விருதைப் பெற்றார்.[11] 2000 ஆம் ஆண்டில், இவர் ராஜீவ் காந்தி தேசிய சத்பவனா விருதைப் பெற்றார்.[12] மேலும், 2011 ஆம் ஆண்டில், இவருக்கு இந்திய அரசு பத்ம விபூசண் வழங்கியது.

நூற்பட்டியல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Members Biodata". Rajya Sabha. Archived from the original on 12 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 8 July 2013.
  2. Uttara Asha Coorlawala (12 January 2000). "Kapila Vatsyayan – Formative Influences". narthaki. பார்க்கப்பட்ட நாள் 8 July 2013.
  3. 3.0 3.1 Bouton, Marshall & Oldenburg, Philip, Eds. (2003). India Briefing: A Transformative Fifty Years, p. 312. Delhi: Aakar Publications.
  4. "About IGNCA". IGNCA. Archived from the original on 6 January 2018. பார்க்கப்பட்ட நாள் 8 July 2013.
  5. "Congress appoints Kapila Vatsyayan as IGNCA chairperson, completes tit-for-tat with NDA". India Today. 31 October 2005. பார்க்கப்பட்ட நாள் 8 July 2013.
  6. "Vatsyayan resigns from RS". Rediff.com India News. 24 March 2006. பார்க்கப்பட்ட நாள் 8 July 2013.
  7. "Swaminathan, Vatsyayan nominated to Rajya Sabha". The Hindu. 11 April 2007. Archived from the original on 1 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 8 July 2013. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  8. "SNA: List of Sangeet Natak Akademi Ratna Puraskar winners (Akademi Fellows)". Official website. Archived from the original on 4 March 2016.
  9. "Official list of Jawaharlal Nehru Fellows (1969-present)". நேரு அருங்காட்சியகமும் கோளகமும்.
  10. "ACC: List of John D. Rockefeller 3rd Awardees". Official website. Archived from the original on 26 July 2014.
  11. "Past Award Recipients". Congress on Research in Dance. பார்க்கப்பட்ட நாள் 13 December 2013.
  12. "Secularism under assault, says Sonia". The Hindu இம் மூலத்தில் இருந்து 2012-11-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110101119/http://www.hindu.com/2001/08/21/stories/02210006.htm. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபிலா_வாத்ஸ்யாயன்&oldid=4028402" இலிருந்து மீள்விக்கப்பட்டது