சிவக்குமார் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பண்டிட் சிவக்குமார் சர்மா
Pandit Shivkumar Sharma Santoor.jpg
சூலை 2016, போபாலின் பாரத் பவனில் நடந்த முதல் சந்தூர் கச்சேரி நிகழ்ச்சிக்குப் பின்னர் பண்டிட் சிவகுமார் சர்மா
பின்னணித் தகவல்கள்
பிறப்பு13 சனவரி 1938 (1938-01-13) (அகவை 83)[1]
சம்மு, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போதைய ஜம்மு காஷ்மீர், இந்தியா)
பிறப்பிடம்ஜம்மு, இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)இசை அமைப்பாளர், இசைக்கலைஞர்
இசைக்கருவி(கள்)சந்தூர், கைம்முரசு இணை
இசைத்துறையில்1955– தற்போது வரை
இணைந்த செயற்பாடுகள்இராகுல் சர்மா (மகன்)
ஹரிபிரசாத் சௌரசியா
இணையதளம்santoor.com

பண்டிட் சிவக்குமார் சர்மா (பிறப்பு 13 சனவரி 1938 [2] ) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய இசையமைப்பாளரும், சந்தூர் இசைக்கலைஞருமாவார். [3] . [4] சாந்தூர் ஒரு நாட்டுப்புற இசைக்கருவியாகும். [5]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் சம்முவில் உமா தத் சர்மா என்ற பாடகருக்கு பிறந்தார்.[6] தோக்ரி இவரது தாய்மொழியாகும். இவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது இவரது தந்தை இவருக்கு குரலிசையிலும், கைம்முரசு இணையிலும் கற்பிக்கத் தொடங்கினார். சிவக்குமார் தனது பதின்மூன்று வயதில் சந்தூர் கற்கத் தொடங்கினார். 1955 இல் மும்பையில் தனது முதல் பொது நிகழ்ச்சியை வழங்கினார்.

தொழில்[தொகு]

1988 இல் சர்மா

சந்தூரை ஒரு பிரபலமான இசைக் கருவியாக மாற்றிய பெருமை இவருக்குண்டு. [7] 1956 இல் சாந்தாராமின் ஜனக் ஜனக் பாயல் பாஜே என்ற படத்தில் ஒரு காட்சிக்கு பின்னணி இசையமைத்தார். இவர் தனது முதல் தனி இசைத் தொகுப்பை 1960 இல் பதிவு செய்தார்.

1967 ஆம் ஆண்டில், இவர் புல்லாங்குழல் கலைஞர் ஹரிபிரசாத் சௌராசியா மற்றும் கிதார் கலைஞர் பிரிஜ் பூசண் கப்ரா ஆகியோருடன் இணைந்து கால் ஆஃப் தி வேலி (1967) என்ற ஒரு இசைத் தொகுப்பை தயாரித்தார். இது இந்திய பாரம்பரிய இசையின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக மாறியது. [8] சில்சிலா [9] (1980) தொடங்கி ஹரிபிரசாத் சவுராசியாவுடன் [10] இணைந்து பல இந்திப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர்கள் சிவ்-ஹரி இசை இரட்டையர் என்று அறியப்பட்டனர். பாசில் (1985), சாந்தினி (1989), லாம்ஹே (1991) மற்றும் டார் (1993) போன்ற பெரிய இசை வெற்றிகளாக இவர்கள் இசையமைத்த சில திரைப்படங்கள் இருந்தன.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர், மனோரமா என்பவரை மணந்தார் [11] [12] இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். [13] இவரது மகன், இராகுலும், [14] [15] ஒரு சந்தூர் இசைக்கலைஞராவார். [16] [17] மேலும் இவர்கள் 1996 முதல் ஒன்றாக இணைந்து செயல்பட்டனர். 1999 இல் rediff.com என்ற இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், சிவக்குமார், "கடவுளின் பரிசு" இருப்பதாக நினைத்ததால், தனது மகன் இராகுலை தனது சீடனாகத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார்.

விருதுகள்[தொகு]

குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்பட்ட சங்கீத நாடக அகாதமி கூட்டாளர், சங்கீத நாடக அகாதமி விருதுகள் -2011 விழாவில் பண்டிட் சிவக்குமார் சர்மாவுக்கு பிரணாப் முகர்ஜி விருதினை வழங்குகிறார்

சிவக்குமார் 1985இல் அமெரிக்காவின் பால்ட்டிமோர் நகரத்தின் கௌரவ குடியுரிமை உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார். [18] 1986 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருது,[19] 1991 ல் பத்மசிறீ, 2001இல் பத்ம விபூசண் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். [20]

குறிப்புகள்[தொகு]

 1. "A dream fulfilled". Indian Express (30 April 2000). மூல முகவரியிலிருந்து 3 October 2012 அன்று பரணிடப்பட்டது.
 2. "A dream fulfilled". Indian Express (30 April 2000). மூல முகவரியிலிருந்து 3 October 2012 அன்று பரணிடப்பட்டது.
 3. {{cite HIMANSH IS THE BEST web|url=http://cities.expressindia.com/fullstory.php?newsid=156422|title=Santoor strains music to ears of unborn too|publisher=Indian Express|accessdate=7 February 2009|date=10 November 2005|archive-url=https://web.archive.org/web/20111125110025/http://cities.expressindia.com/fullstory.php?newsid=156422|archive-date=25 November 2011|url-status=dead|df=dmy-all}}
 4. . 27 February 2005. 
 5. "Santoor comes of age, courtesy Pandit Shivkumar Sharma". Indian Express (8 January 2009). மூல முகவரியிலிருந்து 3 October 2012 அன்று பரணிடப்பட்டது.
 6. "Music is an expression of human emotions" (20 August 1999). மூல முகவரியிலிருந்து 7 ஜூன் 2011 அன்று பரணிடப்பட்டது.
 7. "Santoor comes of age, courtesy Pandit Shivkumar Sharma". Indian Express (8 January 2009). மூல முகவரியிலிருந்து 3 October 2012 அன்று பரணிடப்பட்டது."Santoor comes of age, courtesy Pandit Shivkumar Sharma". Indian Express. 8 January 2009. Archived from the original on 3 October 2012. Retrieved 7 February 2009.
 8. The Dawn of Indian Music in the West. Continuum International Publishing Group. https://books.google.com/books?id=OSZKCXtx-wEC. Lavezzoli, Peter (2006). The Dawn of Indian Music in the West. Continuum International Publishing Group. p. 32. ISBN 0-8264-1815-5.
 9. "Enchantment from Eden valley". 6 April 2000. http://www.hindu.com/thehindu/2000/04/06/stories/09060701.htm. "Enchantment from Eden valley". The Hindu. Chennai, India. 6 April 2000. Retrieved 15 February 2009.
 10. "I just pick up the flute and feel the urge to play". Financial Express (19 February 2000). மூல முகவரியிலிருந்து 30 July 2012 அன்று பரணிடப்பட்டது.
 11. "Note by note". 13 October 2002. http://timesofindia.indiatimes.com/articleshow/24965752.cms. "Note by note". The Times of India. 13 October 2002. Retrieved 7 February 2009.
 12. "Sultan of strings: Shivakumar Sharma". DNA (18 August 2006).
 13. "Music is an expression of human emotions" (20 August 1999). மூல முகவரியிலிருந்து 7 ஜூன் 2011 அன்று பரணிடப்பட்டது."Music is an expression of human emotions" பரணிடப்பட்டது 2011-06-07 at the வந்தவழி இயந்திரம். rediff.com. 20 August 1999. Retrieved 7 February 2009.
 14. "Santoor notes that bind: father- son 'Jugalbandi'". livemint.com (1 July 2007).
 15. "Inner Melodies". Indian Express (29 July 2008). மூல முகவரியிலிருந்து 3 October 2012 அன்று பரணிடப்பட்டது.
 16. "Virasaat" (18 March 1998). மூல முகவரியிலிருந்து 16 May 2008 அன்று பரணிடப்பட்டது.
 17. "What's Rahul Sharma's Dalai Lama connection?". Times of India. 3 July 2006. http://timesofindia.indiatimes.com/pune-times/whats-rahul-sharmas-dalai-lama-connection/articleshow/1702443.cms. 
 18. "Profile". India Today. மூல முகவரியிலிருந்து 27 April 2009 அன்று பரணிடப்பட்டது.
 19. "Sangeet Natak Akademi Awards – Hindustani Music – Instrumental". Sangeet Natak Akademi. மூல முகவரியிலிருந்து 16 August 2007 அன்று பரணிடப்பட்டது.
 20. "Padma Awards". Ministry of Communications and Information Technology (India).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவக்குமார்_சர்மா&oldid=3272392" இருந்து மீள்விக்கப்பட்டது