வி. சாந்தாராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. சாந்தாராம்
V. Shantaram (1901-1990).jpg
பிறப்புநவம்பர் 18, 1901(1901-11-18)
கோலாப்பூர், மகாராட்டிரம், பிரித்தானிய இந்தியா
இறப்புஅக்டோபர் 30, 1990(1990-10-30) (அகவை 88)
மும்பை, இந்தியா
பணிதிரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், திரைக்கதையமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1921-1987 [1]
சமயம்தந்தை:மராத்திய சமணர்; தாய்:இந்து[2]
விருதுகள்சிறந்த இயக்குனர், பிலிம்பேர் விருது-1957 (திரைப்படம்:ஜனக் ஜனக் பாயல் பாஜே)
சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது -1958 (திரைப்படம்: தோ ஆங்கேன் பாரஹாத்)
தாதாசாகெப் பால்கே விருது -1985
பத்ம விபூஷண் -1992
Dharmatma (1935)

வி. சாந்தாராம் (V. Shantaram / Shantaram Rajaram Vankudre / சாந்தாராம் ராஜாராம் வணகுத்ரே நவம்பர் 18, 1901 – அக்டோபர் 30, 1990) இந்தியத் திரைப்பட்ட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமாவார்[2]. 'ஜனக் ஜனக் பாயல் பாஜே' என்ற இந்தியாவின் முதல் டெக்னிக் கலர் படத்தை இயக்கியவர் இவர்.

பிறப்பு மற்றும் திருமணம்[தொகு]

மராட்டிய மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில் 1901-ல் பிறந்தார். இவரின் முதல் மனைவி நடிகை ஜெயஸ்ரீயை மணந்தார். பின் அவருடன் மனக்கசப்பு ஏற்படவே அவர்களின் திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. பின் ஜனக் ஜனக் பாயல் பாஜே திரைப்படத்தின் கதாநாயகியான சந்தியாவை மறுமணம் செய்துகொண்டார்.

இவரது மகள் ராஜ்யஸ்ரீ ஆவார். இவரும் மிக பெரிய நடிகையாவார். காதல் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டார்.

வெற்றிப் படங்கள்[தொகு]

கோட்னீஸ் என்ற படம் இவருக்கு பேரும் புகழும் சம்பாதித்து கொடுத்தது. இதில் இவர் கதாநாயகனாகவும் நடித்தார். பின் சாந்தாராமுக்கு அகில இந்திய அளவில் புகழை சேர்த்த படங்கள் பர்சாயின், ஆத்மி, சகுந்தலா, தஹேஜ், படோசி, சந்திரசேனா, அமிர்தமந்தன் போன்ற படங்களாகும். 'தோ ஆங்கேன் பாரஹாத்' எனும் இந்தி படம் பல விருதுகளை இவருக்கு வாங்கி தந்தது. 'தீன் பத்தி சார் ரஸ்தா' என்ற இவரது படம் பெரும் வெற்றி கண்டது.[3]

விருதுகளும், சிறப்புகளும்[தொகு]

இறப்பு[தொகு]

அக்டோபர் 30, 1990 இல் மும்பையில் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  • புகழ் பெற்ற 100 சினிமா கலைஞர்கள் புத்தகம், சங்கர் பதிப்பகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._சாந்தாராம்&oldid=2693788" இருந்து மீள்விக்கப்பட்டது