உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ. இலட்சுமணசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. இலட்சுமணசுவாமி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1887-10-14)14 அக்டோபர் 1887
கர்னூல், சென்னை மாகாணம்
இறப்பு15 ஏப்ரல் 1974(1974-04-15) (அகவை 86)[1]
சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பெற்றோர்ஆற்காடு குப்புசாமி
சிதம்மா
உறவினர்ஆற்காடு ராமசாமி (சகோதரன்)
முன்னாள் கல்லூரிசென்னை கிருத்துவக் கல்லூரி
விருதுகள்பத்ம பூசண் (1954)
பத்ம விபூசண் (1963)
சென்னைப் பல்கலைக்கழகம், பேரவை இல்லத்தில் ஏ. இலட்சுமணசுவாமியின் உருவச் சிலை

ஏ. இலட்சுமணசுவாமி (A. Lakshmanaswami Mudaliar, அக்டோபர் 14, 1887 - ஏப்ரல் 15, 1974)என்பவர் சிறந்த கல்வியாளரும் மருத்துவரும் ஆவார்.

விளக்கம்

[தொகு]

மருத்துவர் ஆற்காடு இலட்சுமணசுவாமி முதலியார் சிறந்த கல்வியாளர் ஆவார். இவர் எழுதிய மகப்பேறு மருத்துவப் புத்தகம் இன்றளவும் தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆற்காடு இராமசாமி முதலியாரும் இவரும் இரட்டையர்கள். இவரே மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் துணைவேந்தராகவும் (27 ஆண்டுகள்)[2] மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் முதல்வராகவும் பணியாற்றியவர்.

உலக சுகாதார மையத்தின் செயற்குழுத் தலைவராக இவர் 1949 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் செயல்பட்டார். எட்டாவது உலக சுகாதாரக் கூடுகையின் துணைத் தலைவராக 1955 ஆம் ஆண்டிலும் 14 ஆவது உலக சுகாதாரக் கூடுகையின் தலைவராக 1955 ஆம் ஆண்டிலும் செயற்பட்டார்.

கிராமப்புற மருத்துவ சேவை வரலாற்றில் 1959 ஆம் ஆண்டில் முதலியார் தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரைகள் குறிப்பிடத்தக்கவை.[3]

இந்திய அரசு இவருக்கு, 1963 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.[4]

ஆற்காடு சகோதரர்கள்

[தொகு]

ஆற்காடு சகோதரர்கள் என்பவர்கள் சர். இராமசாமி முதலியாரும் சர். இலட்சுமணசாமி முதலியாரும் ஆவர். பிறப்பால் இரட்டையர்கள். இவர்கள் 1887 அக்டோபர் 14 அன்று கர்னூலில், துளுவ வேளாளர் குடும்பத்தில் ஆற்காடு குப்புசாமி, சிதம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தனர்.[5] இவர்களது ஆரம்பக் கல்வி கர்னூலிலுள்ள நகராட்சிப்பள்ளியிலும் பின்னர் மேற்படிப்பு சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் தொடர்ந்தது. அதன்பிறகு முன்னவர் சட்டக்கல்லூரியிலும், பின்னவர் மருத்துவக் கல்லூரியிலும் தங்களது கல்வியைத் தொடர்ந்தனர். அவரவர்களது துறையில் பல்வேறு பரிமாணங்களில் சிறப்பாகப் பணியாற்றிய இவர்களது 125 ஆவது பிறந்த நாள் அக்டோபர் 14, 2013 என்பது நினைவுகூரத் தக்கது.

பாடநூல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Indian Journal of Medical Education (in ஆங்கிலம்). The Association. 1974. p. 84. பார்க்கப்பட்ட நாள் 18 April 2019. Sir Arcot, a distinguished obstetrician and gynaecologist, an international public health worker, an outstanding medical statesman and an internationally recognised medical educationist passed away on 15th April, 1974, at Madras...
  2. "The Vice Chancellors". சென்னைப் பல்கலைக்கழகம்.
  3. https://indianculture.gov.in/report-health-survey-and-planning-committee-august-1959-october-1961
  4. "List of Past General Presidents". Indian Science Congress Association. பார்க்கப்பட்ட நாள் 28 February 2018.
  5. "The twin stars of Arcot". The Hindu. 14 October 2012. http://www.thehindu.com/news/national/tamil-nadu/the-twin-stars-of-arcot/article3995071.ece. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._இலட்சுமணசுவாமி&oldid=4044119" இலிருந்து மீள்விக்கப்பட்டது