ரகுநாத் மகபத்ர
Appearance

ரகுநாத் மகபத்ர (Raghunath Mohapatra, பிறப்பு: 24 மார்ச்சு, 1943) ஒரிசா மாநிலத்தின் பூரியில் பிறந்த[1], கோவில் சிற்பக் கலைஞர் மற்றும் கட்டடக் கலைஞர் ஆவார். கோவில்களின் வடிவமைப்பிலும் கற்சிலைகளின் உருவம், வடிவம், அமைப்பு ஆகியவற்றில் தேர்ந்த அறிவும் அனுபவமும் கொண்டவர்.
பிறப்பு
[தொகு]ரகுநாத் மகபத்ர சிற்பக் கலைஞர்கள் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் கொனாரக் கோவில் மற்றும் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூரி சகன்னாதர் கோவில் போன்றவற்றை நிர்மாணித்தவர்கள் ஆவர்.
உருவாக்கங்கள்
[தொகு]- ஒடிசாவில் உள்ள புகழ் பெற்ற கோவில்கள், சிலைகள், கட்டடங்கள் ஆகியவற்றில் இவருடைய கைவண்ணம் இருக்கிறது.
- 1974 இல் ஆறு அடி உயரத்தில் கற்சிலை ஒன்றை இவர் உருவாக்கினார். நாடாளுமன்ற நடுவில் இச்சிலை வைக்கப்பட்டுள்ளது.
- 18 அடி நீளமும் 15 அடி உயரமும் உடைய கொனாரக் குதிரைச் சிலையை உருவாக்கினார். புவனேசுவரத்தில் மாஸ்டர் கேண்டின் சதுக்கத்தில் உள்ளது.
- 14 அடி உயரத்தில் கொனாரக் சக்கரம் ஒன்று இவரால் செய்யப்பட்டது. இது பன்னாட்டு வரத்தகச் சந்தையில் வைக்கப்பட்டது.
- இவரால் உருவாக்கப்பட்ட 15 அடி கொண்ட இரண்டு புத்தர் சிலைகள் புவனேசுவரத்தில் தாவுலிகிரி சாந்தி ஸ்தூபியில் உள்ளன.
- தில்லி இராசீவ் காந்தி சமாதியில் வைக்கப்பட்டுள்ள பெரிய தாமரை படிமம் ரகுநாத் மகபத்ர செய்த ஒன்று.
- லடாக்கில் 20 அடி உயரத்தில் புத்தர் சிலைகள், அரியானாவில் 15 அடி உயரத்தில் முக்தேசுவர் வாயில் ஆகியனவும் இவருடைய படைப்புகள் ஆகும்.
விருதுகள், சிறப்புகள்
[தொகு]- பத்மசிறீ விருது (1976)
- பத்ம பூசண் விருது (2001)
- பத்ம விபூசண் விருது (2013)
- 1963 முதல் ஒரிசா மாநில அரசின் கைவினைத் துறையின் பயிற்சி மையத்தில் ஆலோசகராகவும் மேற்பார்வையாளராகவும் செயல்படுகிறார்.
- 2000 ஆம் ஆண்டில் இந்திய அரசின் அயலகத் துறையால் ரகுநாத் மகபத்ர இந்தியப் பண்பாட்டு உறவுக் கவுன்சிலில் உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sculptor Raghunath Mohapatra to get Padma Vibhushan". odishanow.in. Archived from the original on 18 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 26 January 2013.
Born in Puri, Mohapatra
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)