எம். எல். வசந்தகுமாரி
எம். எல். வசந்தகுமாரி M. L. Vasanthakumari | |
---|---|
1940களின் இறுதியில் எம். எல். வசந்தகுமாரி | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி |
பிற பெயர்கள் | எம்.எல்.வி , ராகங்களின் அரசி |
பிறப்பு | 3 சூலை 1928 |
பிறப்பிடம் | சென்னை, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 31 அக்டோபர் 1990 சென்னை, தமிழ்நாடு | (அகவை 62)
இசை வடிவங்கள் | கருநாடக இசை, பின்னணிப் பாடகர் |
தொழில்(கள்) | பாடகர் |
இசைத்துறையில் | 1942–1990 |
எம். எல். வசந்தகுமாரி (M. L. Vasanthakumari, 03 சூலை 1928 - 31 அக்டோபர் 1990) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். நேயர்களால் எம். எல். வீ என அன்புடன் அழைக்கப்பட்டவர். பல இந்திய மொழிகளில் வெளிவந்த பாடல்களுக்குப் பின்னணிப் பாடகராக இருந்துள்ளார். இவர் "ராகங்களின் அரசி" என்று அழைக்கப்படுகிறார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட எம். எல். வசந்தகுமாரி, குத்தனூர் அய்யா சுவாமி ஐயருக்கும் லலிதாங்கிக்கும் மகளாகப் பிறந்தார். தாய் தந்தை இருவரும் இசைக் கலைஞர் ஆவர். சென்னையில் ஆங்கிலப்பள்ளியில் படித்து மருத்துவத்துறையில் நுழைய இருந்தவர், பிரபல பாடகர் ஜி. என். பாலசுப்பிரமணியம் முயற்சியால் இசைத்துறைக்கு வந்துவிட்டார்.
ஆக்கங்கள்
[தொகு]தெலுங்கு பாடல்கள்
[தொகு]ஆண்டு | படம் | பாடல் | இசை | துணைப்பாடகர் |
---|---|---|---|---|
1958 | பூகாளிதாசு | 1. தேவா மகாதேவா 2. முன்னீட்ட பவலிஞ்சு நாகசயனா |
சுதர்சனம் & கோவர்த்தனம் |
தமிழ்ப் பாடல்கள்
[தொகு]ஆண்டு | படம் | பாடல் | இசை | துணைப் பாடகர் |
---|---|---|---|---|
1948 | ராஜ முக்தி | 1. குலக்கொடி தழைக்க 2. ஆராரோ நீ ஆராரோ 3. இங்கும் அங்கும் எங்கும் இன்பமே 4. என்ன ஆனந்தம் 5. சந்தோசமாய் அன்பர் வருவாரடி |
சுப்புராமன் | 3. தியாகராஜ பாகவதர் 4. தியாகராஜ பாகவதர் 5. பானுமதி |
1948 | கிருஷ்ண பக்தி | ராதா சமேதா கிருஷ்ணா | வெங்கட்ராமன் & குன்னக்குடி வெங்கட்ராம ஐயர் |
|
1949 | நல்லதம்பி | கானலோலன் மதனகோபாலன் | சுப்பையா நாயுடு & சுப்புராமன் |
|
1949 | வாழ்க்கை | கோபாலனோடு நான் ஆடுவேனே | சுதர்சனம் | |
1949 | 1. புவி ராஜா 2. காண்பன யாவும் காவியம் போலே |
சுப்பையா நாயுடு & சுப்புராமன் |
1. திருச்சி லோகநாதன் | |
1950 | மந்திரி குமாரி | 1. இசைக் கலையே 2. காதல் பலியாகினிலும் 3. ஆகாஆகா வாழ்விலே 4. எண்ணும் பொழுதில் இன்பம் 5. மனம் போலே வாழ்வு பெறுவோமே |
ராமனாதன் | 5.ஜிக்கி |
1950 | ஏழை படும் பாடு | 1. யௌவனமே இன்ப கீதம் 2. கண்ணன் மன நிலையே |
சுப்பையா நாயுடு | |
1951 | ஓர் இரவு | அய்யா சாமி ஆவோஜி சாமி | சுதர்சனம் | |
1951 | மணமகள் | 1. எல்லாம் இன்பமயம் 2. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா 3.பாவியினும் படுபாவி 4. திறந்த கூட்டை |
சுப்புராமன் | 1. லீலா 2. சுந்தரம் 3. சுந்தரம் |
1951 | ராஜாம்பாள் | 1. ஆகாஆகா மனைவியாவேன் | ஞான மூர்த்தி | |
1952 | தாய் உள்ளம் | 1. கொஞ்சும் புறாவே 2. வெள்ளை தாமரை பூவில் 3. கோவில் முழுதும் கண்டேன் 4. கதையைக் கேளடா |
ராமநாதன் | |
1952 | புரட்சி வீரன் | காரணம் தெரியாமல் | ||
1952 | பணம் | 1. ஏழையின் கோயிலை நாடினேன் 2. குடும்பத்தின் விளக்கு |
விசுவனாதன் & ராமமூர்த்தி |
1. வெங்கடேஷ் |
1952 | அந்தமான் கைதி | காணி நிலம் வேண்டும் பராசக்தி | கோவிந்தராஜுலு நாயுடு | ஜெயராமன் |
1953 | மனிதன் | குயிலே உனக்கு | ராமனாதன் | |
1953 | நால்வர் | 1. வானமீதிலே 2. இன்பம் கொள்ளுதே 3. மயிலே 4.இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளி வீசும் நிலவே |
மகாதேவன் | 1. திருச்சி லோகனாதன் |
1953 | மனிதனும் மிருகமும் | 1. இன்பக்குயில் குரலினிமை 2. இமய மலைச் சாரலிலே |
கோவிந்தராஜுலு நாயுடு | 1. ராஜா |
1953 | இன்ஸ்பெக்டர் | 1. வாராய் மனமோகனா 2. மதன சிங்காரா நீ வா 3. மூடி இருந்த என் விழியில் |
ராமனாதன் | 1. சுந்தரம் |
1953 | அன்பு | 1. ஆடவரே நாட்டிலே 2. இசைபாடி |
பாப்பா | 1. ராஜா |
1953 | என் வீடு | 1. பூமியிலே ஒரு 2.கொஞ்சு மொழி 3. ராம ராம |
சித்தூர் நாகையா & ராமா ராவ் |
1. ராதா 2. மோத்தி |
1953 | கண்கள் | இன்ப வீணையை மீட்டுது | வெங்கட்ராமன் | |
1954 | வைர மாலை | 1. வஞ்சம் இதோ வாஞ்சை இதோ 2. கூவாமல் கூவும் கோகிலம் 3. உன்னை எண்ணும் போதே 4. செந்தாமரைக் கண்ணனே |
விஸ்வனாதன் & ராமமூர்த்தி |
1. திருச்சி லோகனாதன் 2. திருச்சி லோகனாதன் |
1954 | ரத்தக் கண்ணீர் | 1. கதவைச் சாத்தடி 2. அலையின் சங்கே நீ ஊதாயோ |
ஜெயராமன் | |
1955 | காவேரி | மஞ்சள் வெயில் மாலையிலே | ராமனாதன் | ஜெயராமன் |
1955 | காவேரி | மனதினிலே நான் கொண்ட | ராமமூர்த்தி & விசுவநாதன் |
|
1955 | கள்வனின் காதலி | தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற | கோவிந்தராஜுலு நாயுடு | ஞானசரசுவதி |
1956 | கண்ணின் மணிகள் | கண்ணின் மணியே வா | வெங்கட்ராமன் | |
1956 | குலதெய்வம் | 1. தாயே யசோதா 2. வாராயோ என்னைப் பாராயோ 3. ஆணும் பெண்ணும் வாழ்விலே |
சுதர்சனம் | |
1956 | மதுரை வீரன் | 1. ஆடல் காணீரோ 2. செந்தமிழா எழுந்து வாராயோ |
ராமனாதன் | |
1956 | தாய்க்குப்பின் தாரம் | நாடு செழித்திட நாளும் உழைத்திடடா | மஹாதேவன் | |
1957 | சக்கரவர்த்தி திருமகள் | எந்தன் உள்ளம் கொள்ளை கொள்ள வந்த நீ யாரோ | ராமனாதன் | |
1957 | இரு சகோதரிகள் | தாயே உன் செயலல்லவோ | ராஜேஷ்வர ராவ் | லீலா |
1957 | வணங்காமுடி | சிரமதில் திகழ்வது | ராமனாதன் | |
1957 | கற்புக்கரசி | 1. கனியோ பாகோ கற்கண்டோ 2. விழியோடு விளையாடும் |
ராமனாதன் | 1. சீனிவாசா 2. லீலா |
1959 | மாமியார் மெச்சிய மருமகள் | 1. மோகன ரங்கா என்னைப் பாரடா 2.கண்ணா வா வா மணிவண்ணா வா வா 3. மைத்துனரே மைத்துனரே 4. விரல் மோதிரம் இங்கே.... 5. இலவு காத்த கிளிபோல் |
சுதர்சனம் | 1. சீர்காழி கோவிந்தராஜன் 3. கோமளா |
1959 | தங்க பதுமை | வருகிறாய் உன்னைத் தேடி | விசுவனாதன் & ராமமூர்த்தி |
சூலமங்கலம் ராஜலட்சுமி |
1959 | காவேரியின் கணவன் | வண்ணத்தமிழ் சொர்ணக்கிளி | மகாதேவன் | |
1959 | கல்யாணிக்கு கல்யாணம் | ஆனந்தம் இன்று ஆரம்பம் | ஞானசரசுவதி | |
1960 | பார்த்தீபன் கனவு | 1. அந்தி மயங்குதடி 2. வடிவேறி திரிசூலம் தோன்றும் |
வேதா | |
1960 | மீண்ட சொர்க்கம் | ஆடும் அருள் ஜோதி | சலபத்ய் ராவ் | சீர்காழி கோவிந்தராஜன் |
1960 | பெற்ற மனம் | சிந்தனை செய்யடா | ராஜேசுவர ராவ் | சிவாஜி கணேசன் |
1960 | மன்னாதி மன்னன் | 1. கலையோடு கலந்தது உண்மை 2. ஆடாத மனமும் உண்டோ |
விசுவனாதன் & ராமமூர்த்தி |
2. சவுந்தர்ராஜன் |
1960 | ராஜ பக்தி | கற்க கசடற கற்றபின் | கோவிந்தராஜுலு நாயுடு | |
1960 | ராஜா தேசிங்கு | பாற்கடல் அலை மேலே | ராமநாதன் | |
1961 | கொங்கு நாட்டுத் தங்கம் | இருந்தும் இல்லாதவரே | மகாதேவன் | |
1962 | விக்கிரமாதித்தன் | அதிசயம் இவனது | ராஜேஷ்வர ராவு | |
1965 | மகனே கேள் | கலை மங்கை உருவம் கண்டு | சீர்காழி கோவிந்தராஜன் | |
மல்லிய மங்களம் | அவரின்றி நானில்லை | |||
மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே | சீர்காழி கோவிந்தராஜன் |
தொழில் வாழ்க்கை
[தொகு]இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்:
சிறப்புகள்
[தொகு]சங்கீத கலாநிதி விருதினை குறைந்த வயதில் பெற்ற பெண் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு[சான்று தேவை]. தனது 49 ஆவது வயதில் இவ்விருதினைப் பெற்றார்.
விருதுகள்
[தொகு]- சங்கீத நாடக அகாதமி விருது, 1970[2]
- மதிப்புறு முனைவர் பட்டம், 1976. வழங்கியது: மைசூர் பல்கலைக்கழகம்
- சங்கீத கலாநிதி விருது, 1977. வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
- இசைப்பேரறிஞர் விருது, 1978. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[3]
- பத்ம பூஷன் விருது
- சங்கீத கலாசிகாமணி விருது, 1987. வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராகங்களின் அரசி. தினமலர் நாளிதழ். 26 பிப்ரவரி 2017.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ "SNA Awardees list (Carnatic Music - Vocal)". Archived from the original on 2016-03-31. பார்க்கப்பட்ட நாள் 2013-12-28.
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 15 June 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]- திரை இசையின் முதல் நட்சத்திரப் பாடகி எம். எல். வசந்தகுமாரி[தொடர்பிழந்த இணைப்பு] - வாமனன் எழுதிய கட்டுரை
- பத்ம பூசண் விருது பெற்றவர்கள்
- கருநாடக இசைப் பாடகர்கள்
- பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள்
- சங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள்
- இசைப்பேரறிஞர் விருது பெற்றவர்கள்
- 1928 பிறப்புகள்
- 1990 இறப்புகள்
- 20 ஆம் நூற்றாண்டுக் கருநாடக இசைக் கலைஞர்கள்
- சங்கீத கலாசிகாமணி விருது பெற்றவர்கள்
- தமிழ்ப் பெண் இசைக் கலைஞர்கள்
- சென்னை இசைக்கலைஞர்கள்
- சென்னைப் பாடகர்கள்
- தமிழ்நாட்டுப் பெண் இசைக்கலைஞர்கள்