உள்ளடக்கத்துக்குச் செல்

பத்திரப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்திரப்பன்
பிறப்பு(1936-04-16)16 ஏப்ரல் 1936
மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்
பணிகிராமிய கலைஞர்
வாழ்க்கைத்
துணை
மாதம்மாள்

பத்திரப்பன் (ஆங்கில மொழி: Badrappan M) (பிறப்பு: ஏப்ரல் 16, 1936) என்பவர் கோயம்புத்தூர் மாவட்ட மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மியாட்ட நடன ஆசிரியரும் பத்மஸ்ரீ விருதாளருமாவார்.[1] தனது ஆட்டத்தின் மூலம் இந்திய வரலாறும் சமூகப் பிரச்சினையும் பற்றி எடுத்துரைத்து வருகிறார். கும்மி ஆட்டத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்குச் சிறப்பான பயிற்சி அளித்ததற்காகவும் கலைப்பிரிவில் 2024 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.[2]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இவர் மேட்டுப்பாளையம் அருகே தாசனூர் என்ற தாசம்பாளையத்தில் மாரன்ன கவுடர், ரங்கம்மாள் தம்பதியினருக்கு மகனாக 1936 ஏப்ரல் 16 ஆம் நாள் பிறந்தார்.[1] எட்டாம் வகுப்பு வரை படித்தார் பின்னர் கிராமிய கலைமீது கொண்ட ஆர்வத்தால் வள்ளி கும்மியாட்டம் நடத்தத்தொடங்கினார். இவருடைய மனைவி மாதம்மாளும் மகன் நக்கீரனும் இறந்துவிட்டனர். மகள் முத்தம்மாள் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

விருதுகள்

[தொகு]
  1. கலைமாமணி விருது 2019
  2. பத்மஸ்ரீ விருது 2024

மேற்கோள்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்திரப்பன்&oldid=3876913" இலிருந்து மீள்விக்கப்பட்டது