ந. முத்துசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ந. முத்துசாமி
பிறப்பு1936
இறப்பு24 அக்டோபர் 2018

Na.Muthusamy (மே 25, 1936 - அக்டோபர் 24, 2018)[1] என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்த இவர் 2000 ஆண்டின் சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களுள் இவரும் ஒருவர். இவரது "கூத்துப்பட்டறை" என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. "கசடதபற", "நடை" போன்ற இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நீர்மை உட்பட 5 நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய "ந. முத்துசாமி கட்டுரைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 2012 ஆம் ஆண்டில் இவரது கலைச்சேவையை பாராட்டும் வண்ணம் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி பெருமைப்படுத்தியது.[2]

ஆக்கங்கள்[தொகு]

சிறுகதைத் தொகுப்பு[தொகு]

 • நீர்மை

நாடகங்கள்[தொகு]

 • காலம் காலமாக
 • அப்பாவும் பிள்ளையும்
 • நாற்காலிக்காரர்
 • சுவரொட்டிகள்
 • படுகளம்
 • உந்திச்சுழி
 • கட்டியக்காரன்
 • நற்றுணையப்பன்

கட்டுரைத் தொகுப்பு[தொகு]

 • அன்று பூட்டியவண்டி ( தெருக்கூத்துக் கலை பற்றிய கட்டுரைகள்)

மேற்கோள்கள்[தொகு]

 1. "முன்னோடி நாடக ஆளுமை ந.முத்துசாமி காலமானார்". தமிழ் இந்து. 24-10-2018. 24-10-2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)
 2. தமிழகத்தில் 7 பேருக்கு பத்ம விருதுகள் புதுவை விவசாயிக்கு பத்மஸ்ரீ[தொடர்பிழந்த இணைப்பு] தினமணி, சனவரி 26,2012

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._முத்துசாமி&oldid=3349259" இருந்து மீள்விக்கப்பட்டது