உள்ளடக்கத்துக்குச் செல்

கூத்துப்பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூத்துப்பட்டறை என்பது மேடை நாடகக் குழு மற்றும் நவீன நாடகப் பயிற்சிப் பள்ளி. சென்னையில் அமைந்துள்ள இவ்வமைப்பு 1977ஆம் ஆண்டு நாடக ஆசிரியர் ந. முத்துசாமியால் உருவாக்கப்பட்டது. இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், யுனெஸ்கோ, ஃபோர்ட் அறக்கட்டளை, அலயன்ஸ் பிரான்சே, கித்தே போன்ற அமைப்புகளின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற நடிகர்கள் பலர் தமிழ்த் திரைப்படத்துறையிலும் புகழ் பெற்றுள்ளனர். அவர்களில் பசுபதி, குரு சோமசுந்தரம்,கலைராணி, இளங்கோ குமரவேல் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். "அன்று பூட்டிய வண்டி" தெருக்கூத்து குறித்த ஆய்வு நூல். நவீன நாடகத்தின் தந்தை என்றழைக்கும் அளவிற்கு 40 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வந்தவர் ந. முத்துசாமி.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Koothu-P-Pattarai". India9.com. 2005-09-21. பார்க்கப்பட்ட நாள் 2009-02-01.
  2. Santhanam, Kausalya (2005-09-21). "Master of avant-garde theatre". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2008-12-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081202034312/http://www.hindu.com/fr/2008/11/28/stories/2008112850610300.htm. பார்த்த நாள்: 2009-02-01. 
  3. https://web.archive.org/web/19961222223447/http://www.webpage.com/hindu/950701/03/3033a.html

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூத்துப்பட்டறை&oldid=3919800" இலிருந்து மீள்விக்கப்பட்டது