உள்ளடக்கத்துக்குச் செல்

ஜலகண்டபுரம் ராமசுவாமி கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவர். ஜே.ஆர். கிருஷ்ணமூர்த்தி

ஜலகண்டபுரம் ராமசுவாமி கிருஷ்ணமூர்த்தி ஒரு சித்த மருத்துவர். 2010 ஆம் ஆண்டில் இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது பெற்றார். சொறி, சிரங்கு (சோரியாசிஸ்), விட்டிலிகோ, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களுக்குக்கான ஆராய்ச்சியில் ஓரளவு வெற்றி கண்டுள்ளார்.

சித்த மருத்துவத்திற்கு உலகளவில் அங்கீகாரம் கிடைப்பதற்காக செயலாற்றுபவர்; சென்னை யை அடுத்த குன்றத்தூரில் கிராம மக்களின் நலனுக்காக சித்த மருத்தவம் செய்து வருகின்றார். இவரது உடன்பிறப்பு ஜ.ரா.சுந்தரேசன் குமுதம் வார இதழ் ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் பெரிதும் அறியப்பட்டவர்.

வெளியிணைப்பு[தொகு]

Dr.JRK's Siddha Research and Pharmaceuticals (P) Limited. [1] பரணிடப்பட்டது 2010-01-28 at the வந்தவழி இயந்திரம்