உள்ளடக்கத்துக்குச் செல்

சொறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொறி
சார்கோப்டெசு இசுகாபீ எனப்படும் அரிப்பு சிற்றுண்ணியின் நுண் ஒளிப்படம்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases
ஐ.சி.டி.-10B86.
ஐ.சி.டி.-9133.0
நோய்களின் தரவுத்தளம்11841
மெரிசின்பிளசு000830
ஈமெடிசின்derm/382 emerg/517 ped/2047
பேசியண்ட் ஐ.இசொறி
ம.பா.தD012532

சொறி (Scabies, பெயர்க்காரணம்:சொறிதல் என்பதிலிருந்து) அல்லது அளவன் ) பொதுவழக்கில் ஏழாண்டு அரிப்பு,[1] ஓர் ஒட்டுவாரொட்டி தோல் தொற்று நோயாகும். இது மாந்தர்களிடத்தும் விலங்குகளிடத்தும் ஏற்படக்கூடும். உலக சுகாதார அமைப்பு இதனை நீர் தொடர்பான நோயாக வகைப்படுத்தி உள்ளது. [2]. இந்நோயானது சார்கோப்டெசு இசுகாபீ என்ற மிகச் சிறிய, பொதுவாக நேரடியாக கண்ணுக்குப் புலப்படாத, ஒட்டுண்ணியால் ஏற்படுகின்றது. இந்த ஒட்டுண்ணி பாதிக்கப்பட்டவர் தோலிற்கு கீழே குழிகளமைப்பதால் ஒவ்வாமை ஏற்பட்டு தீவிர நமைச்சல் ஏற்படுகின்றது. விலங்குகளில் தொடர்புடைய ஆனால் வேறு ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய்த்தொற்று சார்கோப்டிக் மாஞ்சே எனப்படுகிறது.

இந்த நோய்தொற்று பொருட்கள் மூலமாக பரப்பப்படலாம் எனினும் பெரும்பாலும் தோலுடன் தோல் தொடுவதாலேயே தொற்றுகிறது; நீண்ட தொடர்பு கூடுதலான தீவாய்ப்பை ஏற்படுத்துகிறது. முதல்முறை தொற்றுக்கள் மூலமான நோய் அறிகுறிகள் வெளிப்பட நான்கிலிருந்து ஆறு வாரங்கள் ஆகின்றன. மீள்தொற்றில் அறிகுறிகள் 24 மணிக்குள்ளாகவே தெரியக்கூடும். நோய் அறிகுறிகள் ஒவ்வாமையால் ஏற்படுவதால் தோன்றுவதற்கு காலம் கழிவதைப் போலவே ஒட்டுண்ணிகளை முழுமையாக அழித்த பின்னரும் மறைவதற்கு நாட்கள் செல்லும். முன்பு நார்வே சொறி எனப்பட்ட பக்கு உதிர்வு சொறி (Crusted scabies) நோய் எதிர்பாற்றலைக் குறைக்கும் மிகத் தீவிரவகையான நோய்த்தொற்றாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gates, Robert H. (2003). Infectious disease secrets (2. ed.). Philadelphia: Elsevier, Hanley Belfus. p. 355. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56053-543-0.
  2. "WHO -Water-related Disease". World Health Organization. பார்க்கப்பட்ட நாள் 2010-10-10.
  3. CDC web site > DPDx - Laboratory Identification of Parasites of Public Health Concern > Scabies [1]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சொறி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொறி&oldid=3679480" இலிருந்து மீள்விக்கப்பட்டது