உள்ளடக்கத்துக்குச் செல்

குமுதம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமுதம்  
துறை பல்சுவை
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: பிரியா கல்யாணராமன் (எ) ராமச்சந்திரன்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் குமுதம் பப்ளிகேசன்ஸ் (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி: வார இதழ்

குமுதம் (Kumudam) தமிழ்நாட்டில் வெளியாகும் பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். இது எஸ்.ஏ.பி. அண்ணாமலை மற்றும் அவரது நெருங்கிய நண்பரும் நம்பிக்கைக்குரியவருமான பி.வி. பார்த்தசாரதி ஆகியோரால் 1948 இல் தொடங்கப்பட்டது.[1] குமுதம் குழுமத்தினால் குமுதம் ரிப்போட்டர், குமுதம் தீராநதி, குமுதம் சினேகிதி, குமுதம் பக்தி, குமுதம் ஜோதிடம், குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் போன்ற இதழ்கள் வெளியிடப்படுகின்றன. 1986 இல் 620,000 பிரதிகள் புழக்கத்தில் இருந்தது.[2][3] 2001, 2002 காலப்பகுதியில் குமுதம் யாழ்மணம் என்ற இணைய இதழும் வெளியானது. இதில் புலம்பெயர்ந்த ஈழத்தவர்களின் படைப்புகளும், இந்தியத் தமிழர்களின் படைப்புகளும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன.

சர்ச்சை[தொகு]

செப்டம்பர் 2015 இல், குமுதம் ரிப்போர்ட்டர் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில், "லெக்கிங்ஸ்" அணியும் பெண்களை விமர்சித்தபோது, குமுதம் விமர்சனத்திற்கு உள்ளானது. கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள பெண்களின் படங்கள் அனுமதியின்றி அச்சிடப்பட்டதாக கூறப்படுகிறது.[4]

முக்கிய நபர்கள்[தொகு]

  • நிறுவிய ஆசிரியர் - எஸ்.ஏ.பி. அண்ணாமலை
  • நிறுவிய பதிப்பாளர் - பி.வி.பார்த்தசாரதி
  • அச்சிட்டு வெளியிடுபவர் - பா.வரதராசன்
  • ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் (எ) ராமசந்திரன்

சான்றுகள்[தொகு]

  1. Latha Srinivasan (24 September 2015). "Now, a petition filed against Tamil magazine Kumudam Reporter for its 'obscene story' on leggings". Chennai. http://www.dnaindia.com/india/report-now-a-petition-filed-against-tamil-magazine-kumudam-reporter-for-its-obscene-story-on-leggings-2128186. 
  2. Hutchinson Encyclopedia 8th edition, 1988, p.745
  3. "Site Analytics". Archived from the original on 2017-03-01. பார்க்கப்பட்ட நாள் 2023-03-26.
  4. "Plea against mag's take on leggings gathers momentum". The Times of India. 25 September 2015.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமுதம்_(இதழ்)&oldid=3701101" இலிருந்து மீள்விக்கப்பட்டது