மு. அனந்தகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மு. அனந்தகிருஷ்ணன்
Anandakrishnan.jpg
பிறப்பு12 சூலை 1928 (அகவை 92)
வாணியம்பாடி
பணிகுடிசார் பொறியாளர்

மு. அனந்தகிருஷ்ணன் (Munirathna Anandakrishnan, பிறப்பு: ஜூலை 12, 1928) கணினியிலும், இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதில் முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற்றவர்களில் ஒருவர். பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை எளிதாக்கிய ஒற்றைச் சாளர முறை நடைமுறைக்குக் காரணமானவர்.[1] இவருக்கு 2002 இல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

வாழ்க்கை[தொகு]

பிறந்த ஊர் வாணியம்பாடி. பெற்றோர் முனிரத்தின முதலியார், ரங்கநாயகி அம்மாள். வாணியம்பாடி பெரியபேட்டை நகராட்சி ஆரம்பப் பள்ளி, இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்து, கிண்டி பொறியியல் கல்லூரியில் கட்டட பொறியியல் பட்டம், அமெரிக்கா மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பொறியியல், முனைவர் பட்டங்கள் பெற்றவர்.

பணிகள்[தொகு]

இந்தியா திரும்பியதும், புதுதில்லியில் உள்ள மத்திய சாலை ஆராய்ச்சிக் கழகத்தின் முதுநிலை அறிவியல் அலுவலராகவும், கான்பூர் ஐஐடியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். பின்னர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் அறிவியல் ஆலோசகர், ஐ.நா வின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் துணை இயக்குநர், இம்மையத்துக்கான ஐ.நா. ஆலோசனைக் குழுவின் செயலர் ஆகிய உயர் பதவிகளை வகித்தார். பின்னர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியையும் வகித்தார். 4 புத்தகங்களையும் 90 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.iitk.ac.in/infocell/iitk/newhtml/Chairman-page.pdf
  2. தினமணி தீபாவளி மலர், 1999, தலைசிறந்த தமிழர்கள். பக்கம்34

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._அனந்தகிருஷ்ணன்&oldid=2961598" இருந்து மீள்விக்கப்பட்டது