சசீந்திரன் முத்துவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சசீந்திரன் முத்துவேல்
Sasindran Muthuvel
பப்புவா நியூ கினி, மேற்கு நியூ பிரிட்டன் மாகாண ஆளுனர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 சூலை 2012
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
பிரதமர்பீட்டர் ஓ'நீல்
முன்னையவர்பீட்டர் ஹம்பிறீசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசிவகாசி, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்பப்புவா நியூ கினியர்
துணைவர்சுபா அபர்ணா
விருதுகள்பத்மஶ்ரீ
பிரவாசி பாரதீய சம்மான்

சசீந்திரன் முத்துவேல் (Sasindran Muthuvel) பப்புவா நியூ கினியின் அரசியல்வாதியும், தொழிலதிபரும் ஆவார். தமிழ்நாட்டில் பிறந்த இவர் இவர் 2012 ஆம் ஆண்டு முதல் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் ஆளுநராகவும், அம்மாகாணத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தமிழ்நாடு, சிவகாசியில் பிறந்த சசீந்திரன் பெரியகுளம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். மலேசியாவில் சிறிது காலம் பணியாற்றிய பின்னர் 1999 ஆம் ஆண்டில் பப்புவா நியூ கினி சென்று மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத் தலைநகர் கிம்பேயில் உள்ள தனியார் சில்லறை விற்பனைக் கடைகளை நடத்தும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார்.[2] 2000 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் மூடப்படவே, அந்நிறுவனத்தின் ஹமாமாஸ் டிரேடிங் என்ற கடை ஒன்றை இவர் குத்தகைக்கு எடுத்து நடத்தத் தொடங்கி, அதன் உரிமையாளர் ஆனார்.[2]

அரசியலில்[தொகு]

2012 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவர் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கூட்டு சீர்திருத்தக் கட்சியின் சார்பில் மேற்கு நியூ பிரிட்டன் மாகாண வேட்பாளராகப் போட்டியிட்டு[3] 24,853 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.[1] பப்புவா நியூ கினியில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது இந்தியர், மற்றும் முதலாவது தமிழர் என்ற பெருமைகளை இவர் பெற்றார்.[4]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Hon. Sasindran Muthuvel". பப்புவா நியூ கினி நாடாளுமன்றம். Archived from the original on 2015-12-28. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2016.
  2. 2.0 2.1 குலசேகரம் சஞ்சயன் (18 சனவரி 2016). "பப்புவா நியூ கினியில் தமிழ் ஆளுநர்". சிறப்பு ஒலிபரப்புச் சேவை. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Sasindran Muthuvel on Verge of being PNG's First Indian MP". 10 யூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "PNG's first Indian MP grateful for confidence shown by electors". ரேடியோ ஆத்திரேலியா. 31 யூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "2024 பத்ம விருதுகள்". www.livemint.com. மின்ட். பார்க்கப்பட்ட நாள் 26 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "2024 ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு". www.pib.gov.in. பத்திரிகை தகவல் பணியகம். பார்க்கப்பட்ட நாள் 26 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சசீந்திரன்_முத்துவேல்&oldid=3876412" இலிருந்து மீள்விக்கப்பட்டது