சரோஜினி வரதப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரோஜினி வரதப்பன்
பிறப்பு(1921-09-21)21 செப்டம்பர் 1921
மதராசு, இந்தியா
இறப்பு17 அக்டோபர் 2013(2013-10-17) (அகவை 92)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிசமூக சேவகி
வாழ்க்கைத்
துணை
வரதப்பன்
விருதுகள்பத்ம ஸ்ரீ (1973)
ஜம்னாலால் பஜாஜ் விருது (2004)
பத்ம பூசன் (2009)

சரோஜினி வரதப்பன் (Sarojini Varadappan, செப்டம்பர் 21, 1921 - அக்டோபர் 17, 2013) தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகி ஆவார். இவர் தமிழக முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் மகளாவார்.

இளமைக் காலம்[தொகு]

சரோஜினி செப்டம்பர் 21, 1921 ஆம் ஆண்டு பக்தவத்சலம், ஞானசுந்தராம்பாள் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[1] ஒன்பதாம் வகுப்பு வரை லேடி சிவசாமி பெண்கள் பள்ளியில் படித்த இவர், அதன் பிறகு படிப்பை கைவிட்டார்.[1][2] இவர் தனி ஆசிரியர் மூலமாக இந்தியில் விசாரத் பயின்றார்.[1] இவர் இந்திய தேசிய காங்கிரசு அமைப்பிலும், காங்கிரசு சேவை தளத்திலும் தன்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்தார்.[1]

சிறிய வயதிலேயே தன்னுடைய உறவினரான வரதப்பன் என்பவரை மணந்தார்.[1]

சரோஜினி தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு மைசூர் பல்கலைக்கழகம் வாயிலாக அரசறிவியல் துறையில் முதுகலை பயின்றார்.[1] சென்னைப் பல்கலைக்கழகத்தில் வைஷ்ணவத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார். தன்னுடைய 80-வது அகவையில் "சமூக சேவை மற்றும் நாராயணன் இயக்கம்" என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான முன்மொழிவை வைத்தார்.[1]

இசை[தொகு]

சரோஜினி, பாரூர் சுந்தரம் ஐயர் என்பவரிடம் இசையை முறையாக பயின்றார். இவர் காங்கிரசு கூட்டங்களில் வாழ்த்துப் பாடல்களை பாடியுள்ளார். இவர் சத்ரிய பாடங்களையும், தமிழ்ப் பாடங்களையும் மைலாப்பூர் கவுரி அம்மாவிடமும், பாரதியார் பாடல்களை கிருஷ்ணா ஐயரிடமும், இந்தி பஜன்களை வீனா விசாலாக்‌ஷியிடமும் பயின்றார்.[1]

சமூக சேவை[தொகு]

தன்னுடைய சிறிய வயதிலிருந்தே சமூக சேவையில் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய தாயார் ஞானசுந்தராம்பாள் உமன்ஸ் இந்தியா அசோசியேசன் (Women's India Association (WIA)) என்ற அமைப்பில் இருந்ததால், சரோஜினியும் அவருடன் இணைந்து கொண்டார்.[1] அவ்வமைப்பின் தலைவராக உயர்ந்தார்.[1] சரோஜினியின் தலைமையில், இவ்வமைப்பின் கிளை நான்கிலிருந்து எழுபத்தியாறாக உயர்ந்தது.[1] இவர் மைலாப்பூர் அகாதமியின் தலைவராகவும் இருந்தார்.[1]

சரோஜினி, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தில் 35 வருடத்திற்கு மேலாக இருந்தார்.[1] மாரி சன்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோது இவர் இச்சங்கத்தின் தலைவராக நியமிக்கப்படார்.[1] அதுவரையில் ஆளுநர்களின் மனைவியரே அப்பதவியை ஏற்றுவந்தனர்.[1] சன்னா ரெட்டியின் மனைவியும், சரோஜினிக்கு ஆதரவு தெரிவித்தார்.[1]

விருதுகள்[தொகு]

சரோஜினிக்கு, இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருதான பத்ம ஸ்ரீ விருது, 1973 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[1] பின்னர் இவருக்கு, 2004 ஆம் ஆண்டு ஜம்னாலால் பஜாஜ் விருது[3] மற்றும் 2009 ஆம் ஆண்டு, பத்ம பூசன் ஆகியவை இவருடைய சமூக சேவையை பாராட்டி வழங்கப்பட்டது.[4]

இறப்பு[தொகு]

உடல்நலக்குறைவு காரணமாக தன்னுடைய 92வது அகவையில், 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் இறந்தார்.[5][6][7]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 Suganthy Krishnamachari (March 6, 2009). "Saga of grit and success". தி இந்து இம் மூலத்தில் இருந்து மார்ச் 10, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090310064112/http://www.hindu.com/fr/2009/03/06/stories/2009030651160100.htm. 
  2. T. Chandra (2000). "Chennai Citizen: Sarojini Varadappan". Chennai Online. Archived from the original on 2009-04-01. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.
  3. "Sarojini Varadappan to set up trust with award money". தி இந்து. February 24, 2005 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 24, 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050224131609/http://www.hindu.com/2005/02/24/stories/2005022413730300.htm. 
  4. NDTV Correspondent (January 26, 2009). "List of Padma Bhushan Awardees". என்டிடிவி இம் மூலத்தில் இருந்து ஜனவரி 29, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130129191059/http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20090081397. 
  5. "சமூக சேவகி சரோஜினி வரதப்பன் மரணம்". தினகரன். Archived from the original on 2019-03-09. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 18, 2013.
  6. "சரோஜினி வரதப்பன் மறைவு : தமிழக அமைச்சர் அஞ்சலி". தினமணி. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 18, 2013.
  7. "ஜெயந்தி நடராஜனின் பெரியம்மா சரோஜினி வரதப்பன் மரணம்". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 18, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோஜினி_வரதப்பன்&oldid=3792406" இலிருந்து மீள்விக்கப்பட்டது