மாரி சன்னா ரெட்டி
Jump to navigation
Jump to search
மாரி இச்சன்னா ரெட்டி | |
---|---|
6வது முதலமைச்சர், ஆந்திரப் பிரதேசம் | |
முன்னவர் | ஜாலகம் வெங்கல ராவ் |
பின்வந்தவர் | தங்குதூரி அஞ்சையா |
தொகுதி | விக்காராபாத்து, தந்தூர் |
11வது முதலமைச்சர், ஆந்திரப் பிரதேசம் (2ஆம் முறை) | |
முன்னவர் | என். டி. ராமராவ் |
பின்வந்தவர் | நெதுரமல்லி ஜனார்தன ரெட்டி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 13 சனவரி 1919 பெத்தமங்கலம் சிற்றூர், மொய்னாபாத் மண்டல், ரங்காரெட்டி மாவட்டம், ஐதராபாத்து, ஐதராபாத்து மாநிலம், பிரித்தானிய இந்தியா (தற்போது ஆந்திரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 2 திசம்பர் 1996 (அகவை 77) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
முனைவர். மாரி சன்னா ரெட்டி (Marri Channa Reddy) (1919–1996) இந்தியாவின் பல மாநிலங்களில் முனைப்பாக இயங்கிய இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். உத்திரப் பிரதேசம் (1974–1977), பஞ்சாப் (1982–1983), இராசத்தான் (பெப்ரவரி 1992 - மே 1993) மாநில ஆளுநராகப் பணியாற்றி 1993ஆம் ஆண்டு முதல் தமது மரணம் வரை தமிழக ஆளுநராக பணியாற்றியவர். ஆந்திரப் பிரதேச முதல்வராக 1978 முதல் 1980 வரையும் மீண்டும் 1989 முதல் 1990 வரையும் பணியாற்றியுள்ளார்.[1]
1960களில் ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கானா இயக்கத்தில் பங்கேற்ற முன்னோடிகளில் இவரும் ஒருவர்.