சுப்பிரமணியம் சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுப்பிரமணியம் சீனிவாசன்
Subramaniam Srinivasan
SS Vasan 2004 stamp of India.jpg
இந்திய அஞ்சல் தலை
பிறப்புசனவரி 4, 1903(1903-01-04)
திருத்துறைப்பூண்டி, திருவாரூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்புஆகத்து 26, 1969(1969-08-26) (அகவை 66)
மதராசு, தமிழ்நாடு, இந்தியா

சுப்பிரமணியம் சீனிவாசன் பரவலாக எஸ். எஸ். வாசன் (சனவரி 4, 1903 - ஆகத்து 26, 1969) என்று அறியப்படுபவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார் . இவர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பிறந்தார். 1926-இல் பூதூர் வைத்தியநாதய்யர் என்பவரால் தொடங்கப்பட்ட 'ஆனந்த விகடன் ' என்ற இதழை, 1928-ல் விலைக்கு வாங்கினார். ஆனந்த விகடன் இதழுக்கு எஸ் எஸ் வாசனே ஆசிரியராக இருந்து நடத்த ஆரம்பித்தார். அன்று தொடங்கி 90 ஆண்டுகளாக ஆனந்த விகடன் இதழ் வெளியாகி வருகிறது. ஜெமினி திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர். 1964 முதல் அவரது இறப்பு வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார்.

1948-ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா என்ற புகழ்பெற்ற திரைப்படத்தினை இயக்கியவரும் இவரே. அவர் மறைந்த 1969ஆம் ஆண்டு அவருக்கு பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.

Gemini Studios - Logo
ஜெமினி ஸ்டுடியோக்கள்

வாசன் இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி நடிகர்கள் குறிப்புகள்
1948 சந்திரலேகா தமிழ் ரஞ்சன், டி. ஆர். ராஜகுமாரி -
1948 சந்திரலேகா இந்தி ரஞ்சன், டி. ஆர். ராஜகுமாரி -
1949 நிஷான் இந்தி பி. பானுமதி, ரஞ்சன் -
1951 சன்சார் இந்தி டேவிட் ஏபிரகாம்
1952 மிஸ்டர் சம்பத் இந்தி மோதிலால், பத்மினி -
1954 பாகுட் டின் ஹூயே இந்தி மதுபாலா
1955 இன்சானியாட் இந்தி திலிப் குமார் -
1958 வஞ்சிக்கோட்டை வாலிபன் தமிழ் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, பத்மினி -
1958 ராஜ் திலக் இந்தி ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா -
1959 பாயிகம் இந்தி திலிப் குமார், வைஜயந்திமாலா -
1960 இரும்புத்திரை தமிழ் சிவாஜி கணேசன், வைஜயந்திமாலா -
1961 கர்ணா இந்தி ராஜேந்திர குமார், ராஜ் குமார் -
1967 அவுரத் இந்தி ராஜேஷ் கண்ணா, பத்மினி -
1968 தீன் பகுரானியன் இந்தி பிருத்விராஜ் கபூர் -
1969 சத்ரஞ் இந்தி ராஜேந்திர குமார் -

வாசன் தயாரித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி நடிகர்கள் குறிப்புகள்
1953 ஔவையார் தமிழ் கே. பி. சுந்தராம்பாள் -

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]