உள்ளடக்கத்துக்குச் செல்

இரும்புத்திரை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இரும்புத்திரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரும்புத்திரை
இயக்கம்எஸ். எஸ். வாசன்
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
ஜெமினி பிலிம்ஸ்
கதைகொத்தமங்கலம் சுப்பு
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புசிவாஜி கணேசன்
வைஜெயந்திமாலா
எஸ். வி. சுப்பைய்யா
எஸ். வி. ரங்கராவ்
டி. பாலசுப்பிரமணியன்
கே. ஏ. தங்கவேலு
வசுந்தரா தேவி
பி. சரோஜா தேவி
பண்டரிபாய்
வனஜா
ஒளிப்பதிவுபி. எல்லப்பன், என். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புஎம். உமாநாத்
வெளியீடுசனவரி 14, 1960
நீளம்18396 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இரும்புத்திரை (Irumbu Thirai) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். வாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா, எஸ். வி. சுப்பையா, சரோஜாதேவி, எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இது வாசனின் சொந்த இந்தித் திரைப்படமான பைகம் (1959) படத்தின் மறு ஆக்கமாகும்.

கொத்தமங்கலம் சுப்பு, பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கான இசையை எஸ். வி. வெங்கட்ராமன் வழங்கியிருந்தார். இந்தப் படம் 1960 சனவரி 14 அன்று வெளியிடப்பட்டு, திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடியது.

திரைக்கதை

[தொகு]

திரைக்கதை கதை மாணிக்கம் (சிவாஜி கணேசன்), சரவணன் (எஸ். வி. சுப்பையா) என்ற இரண்டு சகோதரர்களையும் அவர்களின் நெசவாலை உரிமையாளரையும் (எஸ். வி. ரங்கராவ்) சுற்றி வருகிறது.

நடிகர்கள்

[தொகு]
நடிகர் வேடம்
வைஜெயந்திமாலா மஞ்சு
பி. சரோஜாதேவி மாலதி
சிவாஜி கணேசன் மாணிக்கம்
கே. ஏ. தங்கவேலு கொண்டமுத்து
எஸ். வி. ரங்கராவ் ஆலை அதிபர்
பண்டரிபாய் மாணிக்கம், சரவணன் ஆகியோரின் தாய்
வசுந்தரா தேவி மஞ்சுவின் தாய்

தயாரிப்பு விபரம்

[தொகு]

1959 ஆம் ஆண்டில் ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரு படத்தைத் தயாரிக்கத் தொடங்கினார். இந்தித் திரைப்படத்துக்கு பைகாம் (Paigham) எனப் பெயரிப்பட்டது. தமிழ்ப் படத்திற்குப் பெயரிடப்படவில்லை. படத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என ஊழியர்களிடம் ஆலோசனை கேட்டார். 2500 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றைப் பரிசீலித்து இரும்புத் திரை என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தார். எல்லா ஊழியர்களையும் அழைத்து ஒரு விருந்து வைத்ததுடன் பெயரை முன்மொழிந்த பையனுக்கு பரிசாக ஒரு தொகையும் அளித்தார் வாசன்.

நிஜ வாழ்வில் தாயும் மகளுமான வசுந்தரா தேவியும் வைஜெயந்திமாலாவும் இந்தப் படத்திலும் தாயும் மகளுமாக நடித்துள்ளனர்.

பாடல்கள்

[தொகு]
எண். பாடல் பாடியவர்/கள்' ' கால அளவு (நி:செக்)' பாடலாசிரியர்
1 என்ன செய்தாலும் ராதா ஜெயலட்சுமி 02:52 பாபநாசம் சிவன்
2 நெஞ்சில் குடியிருக்கும் டி. எம். சௌந்தரராஜன் & பி. லீலா 03:57 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
3 ஆசை கொண்ட நெஞ்சிரண்டு பி. லீலா 04:27
4 மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய் சீர்காழி கோவிந்தராஜன் 02:40
5 கையில வாங்கினேன் பையில போடலே திருச்சி லோகநாதன் 03:00
6 டப்பா டப்பா டப்பா சீர்காழி கோவிந்தராஜன் 03:12
7 நன்றி கெட்ட மனிதருக்கு சீர்காழி கோவிந்தராஜன் 03:22
8 படிப்பிற்கொரு கும்பிடு பி. லீலா & ஜிக்கி 02:47 கொத்தமங்கலம் சுப்பு
9 ஏரை புடிச்சவனும் இங்கிலிசு படிச்சவனும் திருச்சி லோகநாதன் 03:19
10 போட்டுக்கிட்டா திருச்சி லோகநாதன் & எல். ஆர். ஈஸ்வரி 03:32

வெளியீடு

[தொகு]

இரும்புத்திரை 1960 சனவரி 14 அன்று வெளியிடப்பட்டது.[2] கல்கி இதழில் காந்தன், "இரும்புத்திரை உண்மையில் ஓர் இரும்புத் திரைரையல்ல; கருத்து நிறைந்த கதையும், சுவை நிறைந்த சம்பவங்களும் கொண்டு கணுவுக்குக் கணி இனிக்கும் கரும்புத் திரை" என எழுதியுள்ளார்.[3] படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது, திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழாப் படமாக மாறியது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1960 – இரும்புத் திரை". lakshmansruthi.com. Archived from the original on 2018-09-27. Retrieved 2016-10-07.
  2. "இரும்புத்திரை - இது சிவாஜி படம்" [Irumbu Thirai – This is a Sivaji film]. காமதேனு. 9 May 2018. Archived from the original on 26 July 2018. Retrieved 27 September 2018.
  3. காந்தன் (24 January 1960). "இரும்புத்திரை". கல்கி. pp. 14–15. Archived from the original on 2 March 2023. Retrieved 10 March 2023.
  4. Selvaraj, N. (20 March 2017). "வெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்" [Tamil films that completed silver jubilees]. Thinnai (in Tamil). Archived from the original on 29 March 2017. Retrieved 27 September 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)