சுப்பிரமணியம் சீனிவாசன்
சுப்பிரமணியம் சீனிவாசன் Subramaniam Srinivasan | |
---|---|
இந்திய அஞ்சல் தலை | |
பிறப்பு | திருத்துறைப்பூண்டி, திருவாரூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா | சனவரி 4, 1903
இறப்பு | ஆகத்து 26, 1969 மதராசு, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 66)
சுப்பிரமணியம் சீனிவாசன் பரவலாக எஸ். எஸ். வாசன் (S. S. Vasan, சனவரி 4, 1903 - ஆகத்து 26, 1969) என்று அறியப்படுபவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார் . இவர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பிறந்தார். 1926-இல் பூதூர் வைத்தியநாதய்யர் என்பவரால் தொடங்கப்பட்ட 'ஆனந்த விகடன் ' என்ற இதழை, 1928-ல் விலைக்கு வாங்கினார். ஆனந்த விகடன் இதழுக்கு எஸ் எஸ் வாசனே ஆசிரியராக இருந்து நடத்த ஆரம்பித்தார். அன்று தொடங்கி 90 ஆண்டுகளாக ஆனந்த விகடன் இதழ் வெளியாகி வருகிறது.[1] ஜெமினி திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர். 1964 முதல் அவரது இறப்பு வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார்.
1948-ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா என்ற புகழ்பெற்ற திரைப்படத்தினை இயக்கியவரும் இவரே. அவர் மறைந்த 1969ஆம் ஆண்டு அவருக்கு பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.[2] இந்திய அரசும் தபால் துறையும் இவரது நூற்றாண்டு விழாவான 26 ஆகத்து 2004 அன்று இவரது உருவம் கொண்ட தபால்தலைகளை வெளியிட்டன.[3]
வாசன் இயக்கிய திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | மொழி | நடிகர்கள் | குறிப்புகள் |
1948 | சந்திரலேகா | தமிழ் | ரஞ்சன், டி. ஆர். ராஜகுமாரி | - |
1948 | சந்திரலேகா | இந்தி | ரஞ்சன், டி. ஆர். ராஜகுமாரி | - |
1949 | நிஷான் | இந்தி | பி. பானுமதி, ரஞ்சன் | - |
1951 | சன்சார் | இந்தி | டேவிட் ஏபிரகாம் | |
1952 | மிஸ்டர் சம்பத் | இந்தி | மோதிலால், பத்மினி | - |
1954 | பாகுட் டின் ஹூயே | இந்தி | மதுபாலா | |
1955 | இன்சானியாட் | இந்தி | திலிப் குமார் | - |
1958 | வஞ்சிக்கோட்டை வாலிபன் | தமிழ் | ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, பத்மினி | - |
1958 | ராஜ் திலக் | இந்தி | ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா | - |
1959 | பாயிகம் | இந்தி | திலிப் குமார், வைஜயந்திமாலா | - |
1960 | இரும்புத்திரை | தமிழ் | சிவாஜி கணேசன், வைஜயந்திமாலா | - |
1961 | கர்ணா | இந்தி | ராஜேந்திர குமார், ராஜ் குமார் | - |
1967 | அவுரத் | இந்தி | ராஜேஷ் கண்ணா, பத்மினி | - |
1968 | தீன் பகுரானியன் | இந்தி | பிருத்விராஜ் கபூர் | - |
1969 | சத்ரஞ் | இந்தி | ராஜேந்திர குமார் | - |
வாசன் தயாரித்த திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | மொழி | நடிகர்கள் | குறிப்புகள் |
1953 | ஔவையார் | தமிழ் | கே. பி. சுந்தராம்பாள் | - |
உசாத்துணைகள்
[தொகு]- ↑ "பசுபதிவுகள்: எஸ். எஸ். வாசன் - 2". web.archive.org. 2018-04-10. Archived from the original on 2018-04-10. பார்க்கப்பட்ட நாள் 2022-01-04.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "Stamp on S.S. Vasan released". தி இந்து (Chennai, India). 27 August 2004 இம் மூலத்தில் இருந்து 11 September 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040911165749/http://www.hindu.com/2004/08/27/stories/2004082702091300.htm.
வெளி இணைப்புகள்
[தொகு]- பத்ம பூசண் விருது பெற்றவர்கள்
- இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
- 1903 பிறப்புகள்
- 1969 இறப்புகள்
- தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
- பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள்
- தமிழகத் தொழிலதிபர்கள்
- தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள்
- தமிழ்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- திருவாரூர் மாவட்ட நபர்கள்