நாராயணன் சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாராயணன் சீனிவாசன்
Narayanan Srinivasan
பிறப்புமே 11, 1930(1930-05-11)
தமிழ்நாடு, India
இறப்புமே 18, 2014(2014-05-18) (அகவை 84)
சென்னை, தமிழ்நாடு,இந்தியா
பணிஅணு விஞ்ஞானி
அறியப்படுவதுஇந்தியாவின் அணுசக்தி திட்டம்
விருதுகள்பத்ம பூசண், அணுசக்தி துறையின் வாழ்நாள் சாதனையாளர் விருது

நாராயணன் சீனிவாசன் (Narayanan Srinivasan) இந்தியாவின் அணு விஞ்ஞானியாகவும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் திட்ட இயக்குநராகவும் இருந்தவராவார்.[1][2] 1930 ஆம் ஆண்டு பிறந்த இவர் 2014 ஆம் ஆண்டுவரை வாழ்ந்தார். இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான இவர், டிராம்பேயில் உள்ள புளூட்டோனியம் தொழிற்சாலைக்கான வடிவமைப்பு பொறியாளராகப் பணியாற்றினார்.[3] கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அப்போதைய அணு உலை ஆராய்ச்சி மையத்தின் திட்ட இயக்குநராக இருந்தார். கனநீர் வாரியம் மற்றும் அணு எரிபொருள் வளாகம் ஆகிய அமைப்புகளின் தலைமை நிர்வாகியாகயும் இருந்துள்ளார். 1982 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை இந்திய அணுசக்தி ஆணையத்தில் பணிபுரிந்தார்.[4] இந்திய அரசு இவருக்கு 2003 ஆம் ஆண்டு மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூசண் விருதை வழங்கி சிறப்பித்தது.[5] 2009 ஆம் ஆண்டு அணுசக்தி துறையின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.[6] சீனிவாசன் 2014 ஆம் ஆண்டு சென்னையில் மே மாதம் 18 அன்று தனது 84 வயதில் இறந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் வாசிக்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயணன்_சீனிவாசன்&oldid=3047816" இருந்து மீள்விக்கப்பட்டது