எல். சுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எல். சுப்பிரமணியம்
L. Subramaniam
L Subramaniam 3.jpg
கொல்லத்தில் எல். சுப்ரமணியத்தின் கச்சேரி
பின்னணித் தகவல்கள்
பிறப்புசூலை 23, 1947 (1947-07-23) (அகவை 75)
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை, ஜாசு இசைக்கோர்வை
தொழில்(கள்)வயலின் வாசிப்பு
இசைத்துறையில்1973–தற்போதுவரை
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள்
வயலின்

எல். சுப்பிரமணியம் தமிழகத்தைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கேரளத்தைச் சேர்ந்த வி. இலக்சுமிநாராயண ஐயர் எனும் வயலின் இசைக் கலைஞரின் மூன்று மகன்களில் ஒருவர் எல். சுப்பிரமணியம். சுப்பிரமணியம் தனது தந்தையிடமிருந்து வயலின் இசையைக் கற்றுக் கொண்டார். இவரின் அண்ணன் எல். வைத்தியநாதன் என்பவரும், தம்பி சங்கர் என்பவரும் வயலின் இசைக் கலைஞர்களாவர். தந்தை இலக்சுமிநாராயண ஐயர் யாழ்ப்பாணம் இசைக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இவர்களின் குடும்பம் யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் என்னுமிடத்தில் வாழ்ந்து வந்தது. பிறகு சென்னையில் நிலையாக குடியேறிவிட்டனர்.

சுப்ரமணியம் எம். பி. பி. எஸ். எனும் மருத்துவப் படிப்பு தேறியவர். எனினும் அவர் இசையினை தனது தொழிலாகக் கொண்டார்.

சுப்ரமணியத்தின் மனைவி விஜி எனும் பாடகர் ஆவார். அவரின் மறைவுக்குப் பின்னர் கவிதா கிருஷ்ணமூர்த்தி எனும் பின்னணிப் பாடகரை சுப்ரமணியம் மணந்தார். சுப்ரமணியத்தின் மூத்த மகன் நாராயண், இளைய மகன் அம்பி மற்றும் மகள் பிந்து ஆகிய மூவரும் இசைக் கலைஞர்களாக இருக்கின்றனர்.

இசைப் பணி[தொகு]

எல். சுப்ரமணியம், கலிபோர்னியா இன்சிடிடியூட் ஆப் ஆர்ட்சில் சேர்ந்து மேற்கத்திய பாரம்பரிய இசையில் உயர்நிலைப் பட்டம் பெற்றவர்.

பெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Padma Awards Directory (1954–2013), பக்கம் எண்: 87" (PDF). இந்திய அரசின் உள்துறை அமைச்சகம். 2014-11-15 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-07-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Padma Awards Directory (1954–2013), பக்கம் எண்: 113" (PDF). இந்திய அரசின் உள்துறை அமைச்சகம். 2014-11-15 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-07-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._சுப்பிரமணியம்&oldid=3343929" இருந்து மீள்விக்கப்பட்டது