நாராயண் கார்த்திகேயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாராயண் காரத்திகேயன்
2011 மலேசியன் கிராண்ட் பிரிக்ஸ் இல் கார்த்திகேயன்.
பிறப்பு14 சனவரி 1977 (1977-01-14) (அகவை 47)
பார்முலா ஒன் உலக போட்டித்தொடர் வாழ்வழி
நாடுஇந்தியா இந்தியன்
தானுந்து #22
பந்தயங்கள்27 (26 starts)
பெருவெற்றிகள்0
வெற்றிகள்0
உயர்மேடை முடிவுகள்0
மொத்த புள்ளிகள்5
துருவநிலை தொடக்கங்கள்0
அதிவேக சுற்றுகள்0
முதல் பந்தயம்2005 ஆஸ்திரேசியன் கிராண்ட் பிரிக்ஸ்
கடைசி பந்தயம்2011 யூரோப்பியன் கிராண்ட் பிரிக்ஸ்
2005 நிலை18th (5 பாய்ன்டுகள்)

நாராயண் காரத்திகேயன் (பிறப்பு: ஜனவரி 14, 1977, சில சமயங்களில் தவறாக நரேன் கார்த்திகேயன் என்றும் அழைக்கப்படுகிறார்) ஒரு கார் பந்தய வீரராவார். சென்னையில் பிறந்தவரும் கோயம்புத்தூரைச் சேரந்தவருமான இவர், உலக மோட்டர் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல், மற்றும் ஒரே இந்தியர் ஆவார்[1] . இவர் தற்போதைய வருடத்திய எஃப் 1 போட்டிகளில் ஜோர்டான் அணியின் சார்பாக பங்கு கொண்டு வருகிறார். 2010-ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம ஸ்ரீ விருது விளையாட்டு பிரிவில் வழங்கப்பட்டது.

ஆரம்ப நாட்கள்[தொகு]

நாராயண் கார்த்திகேயனின் தந்தை ஜி. கார்த்திகேயனும் ஒரு கார் பந்தய வீரராவார். தன் தந்தையின் பாதிப்பில் பந்தயங்களில் கலந்து கொள்ளும் ஆவல் இளமையிலேயே பெறப்பட்ட நாராயண், இந்திய ராலி பந்தயங்களில் பங்கு கொள்ளத் தொடங்கினார். ஸ்ரீபெரும்புதூரில் நடந்த முதல் போட்டியிலேயே முதல் மூன்று வீரர்களுள் ஒருவராக வெற்றி பெற்றார். அதன் பிறகு பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அங்கிருந்த எல்ஃப் வின்பீல்ட் பந்தயப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். 1992இல் அங்கு நடந்த பார்முலா ரெனால்ட் கார்களுக்கான பைலட் எல்ப் போட்டிகளில் அரை இறுதிச் சுற்று வரை வந்தார். பின்னர் 1993ல் இந்தியாவில் பார்முலா மாருதி பந்தயங்களிலும், பிரிட்டனில் பார்முலா வாக்ஸ்ஹால் இளைஞர் பந்தயங்களிலும் கலந்து கொண்டார். 1994ல் பார்முலா ஜீடெக் பந்தயங்களில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் ஓட்டினார். அதன் பிறகு பிரிட்டிஷ் பார்முலா போர்டு குளிர்கால பந்தயங்களில் கலந்து கொண்டு ஐரோப்பாவில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். 1995ல் பார்முலா ஆசியா பந்தயங்களில் கலந்து கொண்ட நாராயண் கார்த்திகேயன், மலேசியாவில் நடந்த போட்டியில் இரண்டாமிடத்தில் முடித்தார். 1996ல் பார்முலா ஆசியா பந்தயங்களிலேயே முதல் வீரராக வந்து இப் பந்தயங்களிலேயே முதலில் வந்த முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார். 1997இல் பிரிட்டிஷ் பார்முலா ஓபல் பந்தயங்களில் கலந்து கொண்டு ஆறாம் இடத்தில் முடித்தார்.

பார்முலா 3 பந்தயங்களில்[தொகு]

1998ல் பிரிட்டிஷ் பார்முலா 3 பந்தயங்களில் கார்லின் அணியின் சார்பாக கலந்து கொண்டார். இப்பந்தயங்களில் இரண்டு முறை மூன்றாம் இடத்தில் முடித்தார். 1999லும் இப்பந்தயங்களில் கலந்து கொண்டு, இரண்டு போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்தார். 2000 வருடத்திலும் இப்பந்தயங்களில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் ஓட்டினார்.

எஃப் 1 பரிசோதனை ஒட்டம்[தொகு]

நாராயண் கார்த்திகேயன்

2001ல் பார்முலா நிப்பான் F3000 பந்தயங்களில் கலந்து கொண்ட நாராயண் கார்த்திகேயன், முதல் பத்து வீரர்களுள் ஒருவராக முடித்தார். அதே வருடத்தில் ஜாகுவார் ரேஸிங் காரை பரிசோதனை ஒட்டம் செய்த அவர் எஃப் 1 கார் ஓட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அதன் பிறகு ஜோர்டான் ஹோண்டா எஃப் 1 காரையும் பரிசோதித்தார்.

2002ல் டாடா RC அணியின் சார்பாக டெலிஃபோனிகா பந்தயங்களிலும், 2003ல் நிஸ்ஸான் பந்தயங்களிலும் கலந்து கொண்டார். அவ்வருடம் இரண்டு போட்டிகளில் முதலிடம் வகித்து பந்தயங்களில் நான்காம் இடத்தைப் பிடித்தார். அவ்வருடம் மினார்டி எஃப் 1 அணிக்கு பரிசோதனை ஓட்டமும் நடத்தினார். 2004ல் எஃப் 1 பந்தயங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால் போதுமான விளம்பரதாரர்கள் இல்லாத காரணத்தால் அவரால் அவ்வருடம் கலந்து கொள்ள முடியவில்லை. எனினும் அவ்வருடம் நிஸ்ஸான் பந்தயங்களில் கலந்து கொண்டு ஸ்பெயினிலும் பிரான்சிலும் வெற்றி பெற்றார்.

2005 எஃப் 1 பந்தயங்களில்[தொகு]

19 ஜூன் 2005 அன்று நடந்த போட்டியில் ஜோர்டான் காரில் நாராயண் கார்த்திகேயன்

1 பிப்ரவரி 2005 அன்று ஜோர்டான் அணியின் சார்பாக அவ்வருட பார்முலா 1 பந்தயங்களில் கலந்து கொள்ளப் போவதாக நாராயண் கார்த்திகேயன் அறிவித்தார். இவ்வருட போட்டிகளில் கலந்து கொண்டு வரும் அவர், இதுவரை ஐந்து புள்ளிகள் பெற்றுள்ளார். இவ்வருட போட்டிகளில் அவர் பெற்ற இடங்கள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

இன்னும் ஆறு போட்டிகள் மீதம் உள்ளன.

+ டயர் சர்ச்சை காரணமாக அமெரிக்கப் போட்டியில் ஜோர்டான் உட்பட மூன்று அணிகள் (அதாவது ஆறு வீரர்கள்) மட்டுமே கலந்து கொண்டனர்

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pande, Vinayak (2011-03-16). "Didn't want to spend my life thinking what if: Narain Karthikeyan". Hindustan Times (New Delhi: HT Media Limited) இம் மூலத்தில் இருந்து 2011-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110320095400/http://www.hindustantimes.com/Didn-t-want-to-spend-my-life-thinking-what-if-Narain-Karthikeyan/Article1-673902.aspx. பார்த்த நாள்: 2011-03-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண்_கார்த்திகேயன்&oldid=3218338" இலிருந்து மீள்விக்கப்பட்டது