மதுரை எஸ். சோமசுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதுரை சோமு
பிறப்புமதுரை ச. சோமசுந்தரம்
பெப்ரவரி 9, 1919(1919-02-09)
தஞ்சாவூர், தமிழ்நாடு
இறப்புதிசம்பர் 9, 1989(1989-12-09) (அகவை 70)
சென்னை
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுகருநாடக வாய்ப்பாட்டுக் கலைஞர்
பெற்றோர்கமலாம்பாள்,
சச்சிதானந்தம் பிள்ளை
வாழ்க்கைத்
துணை
சரோஜா (தி. 1947)
பிள்ளைகள்சண்முகம்,
அரிகரசுதன்,
ராஜராஜேசுவரி முரளிதரன்,
இராமசுப்பிரமணியம்

மதுரை எஸ். சோமசுந்தரம் (பெப்ரவரி 9, 1919 - டிசம்பர் 9, 1989), தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். இவர் மதுரை சோமு என்ற பெயருடன் அழைக்கப்பட்டார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

மதுரை சோமு கலைக்குடும்பம் ஒன்றில் சச்சிதானந்தம் பிள்ளை, கமலாம்பாள ஆகியோருக்குப் பிறந்தார். இவருடைய பாட்டனார் சுந்தரராஜப் பிள்ளை, பாட்டியார் நாகரத்தினம்மாள். தந்தையாருக்கு இவர் 10வது பிள்ளை. பெற்றோர்கள் இவரை பரமசிவம் என்று அழைத்தனர்.[1]

தனது இசைப் பயிற்சியை சேச பாகவதர், அபிராம சாஸ்திரி மற்றும் சித்தூர் சுப்ரமண்யம் பிள்ளை ஆகியோரிடமிருந்து பெற்றார். சித்தூர் சுப்பிரமணியம் பிள்ளை சென்னை, புரசைவாக்கம் வல்லம் பங்காருச் செட்டித் தெருவில் குடியிருந்தார். அவரது வீட்டிலேயே 14 ஆண்டுகள் தங்கி இசைப் பயிற்சி பெற்றார்.[1]

திருமணம்[தொகு]

1947 இல் திருக்கருகாவூர் வித்துவான் குருநாதபிள்ளை என்பவரின் பேத்தியும், சக்திவேல் பிள்ளை என்பவரின் மகளுமான சரோஜா என்பவரைத் திருமணம் புரிந்தார்.[1]

தொழில் வாழ்க்கை[தொகு]

இவர் தனது முதல் கச்சேரியை 1934 ஆம் ஆண்டு திருச்செந்தூரில் நிகழ்த்தினார். இவர் வாய்ப்பாட்டில் மட்டுமல்லாமல், மிருதங்கம், கஞ்சிரா போன்ற இசைக்கருவிகளிலும் சிறந்த பயிற்சி உடையவர்.[1] 1979 ஆம் ஆண்டில் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாகவும், தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும், காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்துவானாகவும் நியமிக்கப்பட்டார்.[1]

மாதுலிகா, ஓம்காளி, வசீகரி, சோமப்பிரியா போன்ற இராகங்களை இவர் உருவாக்கியுள்ளார்.[1]

திரைப்படத்தில் பாடல்[தொகு]

1972 ஆம் ஆண்டில் வெளிவந்த தெய்வம் திரைப்படத்தில் மருதமலை மாமணியே முருகையா.. என்ற பாடலைப் பாடினார். இதனை விட "சஷ்டி விரதம்" என்ற திரைப்படத்திலும் பாடியுள்ளார்.[1]

பட்டங்கள்[தொகு]

  • ரஞ்சித கானமணி 1946 இல் ஆசிரியர் சித்தூர் சுப்பிரமணியம் பிள்ளையின் ஆசியுடன் பெற்றது.[1]
  • சங்கீத சக்கரவர்த்தி 1958 இல் திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியது.[1]
  • காந்தர் கானமணி 1969 இல் காஞ்சிப் புதுப் பெரியவர் வழங்கியது.[1]
  • தெய்வஞான இசைக்கடல் 1988 இல் சென்னை தெய்வத் தமிழ் மன்றம் வழங்கியது.[1]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 இசைப்பேரறிஞர், பத்மஸ்ரீ டாக்டர் மதுரை சோமு. சென்னை: தெய்வத் தமிழ் மன்றம். 1988. http://s-pasupathy.blogspot.com.au/2014/01/25.html. 
  2. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). மூல முகவரியிலிருந்து 2012-02-12 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.
  3. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 23 டிசம்பர் 2018. Archived from the original on 2018-03-16. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018.