தமிழ் இசைச் சங்கம்
Jump to navigation
Jump to search
தமிழ் இசைச் சங்கம் என்பது தமிழிசையை வளர்க்கும் நோக்குடன் 1943 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமைப்பு ஆகும். தமிழ்நாட்டில் பிறமொழிப் பாடல்கள் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் தமிழ் இசைக்கு நிலையான அமைப்புசார் ஆதரவை வழங்கும் நோக்குடன் இது தொடங்கப்பட்டது. இதனை அண்ணாமலை செட்டியார் தொடங்கினார். இன்று "தமிழ் இசை வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சிக்கும், இசை மேதைகளை ஒருங்கிணைக்கும் சங்கமாகவும், இசை வல்லுநர்களை உருவாக்கும் கல்லூரியாகவும் தமிழ் இசைச் சங்கமானது விளங்கி வருகின்றது. தமிழ்ப் பண் ஆராய்ச்சியில் பெரும்பங்கினை தான் தம் பெரும் தமிழ்ச் சேவையால் தக்கவைத்துக் கொண்டுள்ளது."[1]