உள்ளடக்கத்துக்குச் செல்

கிஷோரி அமோன்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஞான சரஸ்வதி
கிஷோரி தாய் அமோன்கர்
இயற்பெயர்किशोरी आमोणकर
பிறப்பு10 ஏப்ரல் 1931[1]
மும்பை, இந்தியா
இறப்பு3 ஏப்ரல் 2017(2017-04-03) (அகவை 84)
மும்பை, இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
இசைக்கருவி(கள்)பாடுதல்
இணைந்த செயற்பாடுகள்மோகுபாய் குர்டிகார்

கிஷோரி ரவீந்திர அமோன்கர் (Kishori Ravindra Amonkar) [2]}} ஒரு முன்னணி இந்திய பாரம்பரிய பாடகியாவார்,[3] ஜெய்ப்பூர் "கரானா" அல்லது இசைக்கலைஞர்களின் சமூகம் ஆகியவற்றை போல தனித்துவமான இசை பாணியை பகிர்ந்துகொள்கின்றன.[4] இவர் பாரம்பரிய இசையான "க்யால்" , "தும்ரி" மற்றும் "பஜனைகள்" ஆகியவற்றைப் பாடுபவராக இருந்தார். அமோன்கர் தனது தாயாரும் பாரம்பரிய இசைக் கலைஞருமான "மோகுபாய் குர்டிகார்" என்ற பாடகரிடம் ஜெய்ப்பூர் "கரானா" வை பயின்றார், ஆனாலும் அவரது தொழில் வாழ்க்கையில் பல்வேறு குரல் பாணிகளை பரிசோதித்தார்

தொழில்

[தொகு]

பயிற்சி

[தொகு]

கிஷோரியின் ஆரம்ப இசைப் பயிற்சிகளை அவரது தாயார் "மோகுபாய் குர்டிகார்" இவருக்கு பயிற்றுவித்தார், அவர் பாரம்பரிய பாடல்களைப் பாடும் வாய்ப்பாடகர் ஆவார்.[5] அவர் ஒரு பேட்டியில் தனது தாயார் ஒரு கடினமான ஆசிரியராக இருந்ததாகவும் துவக்கத்தில் தனது தாய் உள்ளீடில்லாத வெறுஞ்சொற்றொடர்களைப் பாடியாதாகவும் தானும் அதனைப் பின்தொடர்ந்து பாடியதாகவும் தெரிவித்துள்ளார். தனது தாயாருடன் மேடைக் கச்சேரிகளின் போது தம்புரா இசைத்ததாகவும் கூறியுள்ளார்.


பாரம்பரிய பாடகி

[தொகு]

1960 களில் 70 களில் பாரம்பரிய பாடலாசிரியராக அமோன்கரின் வாழ்க்கை வளர்ந்தது. அதற்கு முன்னர், அவருக்கு உடல் நலம் குறந்த காரணத்தால் பாடுவதை குறைத்துக்கொண்டார். தனது சொந்த பாணியிலான பாடல்களைக் கற்றுக் கொள்வதற்காகவும், பாரம்பரிய பாடல்களான "குரானா" வகை பாடல்களைப் படிப்பதற்கும் தனது தொழில் வாழ்க்கையில் இந்த இடைவெளியைப் பயன்படுத்தியதாக அமோன்கர் கூறியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இறப்பு

[தொகு]

1992 ல் பள்ளி ஆசிரியரான ரவீந்திர அமோன்கரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியர்களுக்கு பிபாஸ் மற்றும் நிஹார் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். கிஷோரி அமோன்கர் பம்பாயில் 1932 ஏப்ரல் 10இல் பிறந்தார்.

விருதுகள்

[தொகு]

1987 ஆம் ஆண்டில் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பத்ம பூசண் மற்றும் 2002 ஆம் ஆண்டில் பத்ம விபூசண் உட்பட இந்தியாவின் பல தேசிய விருதுகளையும் இவர் பெற்றார்.[6] 1985 ஆம் ஆண்டுக்கான "சங்கீத நாடக அகாதமி விருது" மற்றும் 2009 ஆம் ஆண்டுக்கான "சங்கீத நாடக அகாதமி கூட்டாளர்" விருது வழங்கப்பட்டது.[7][8] 1991 ஆம் ஆண்டில் கௌரவ டாக்டர் டி. எம். ஏ. பாய் முதன்மையான கொங்கனி விருது வழங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில், பாரம்பரிய இசைக்கு வழங்கப்படும் எம். எஸ். சுப்புலட்சுமி விருது பெறும் ஏழு பெறுநர்களில் ஒருவராக இருந்தார்.[9]

குறிப்புகள்

[தொகு]
Citations
  1. "Semiosis in Hindustani music". Encyclopædia Britannica Online.
  2. Martinez, José Luiz (2001) [1997]. Semiosis in Hindustani music. Delhi: Motilal Banarsidass Publishers Pvt. Ltd. p. 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1801-6.
  3. "Kishori Amonkar, Leading Indian Classical Vocalist, Dies At Age 85" (in en). NPR.org. https://www.npr.org/sections/therecord/2017/04/03/522475920/kishori-amonkar-leading-indian-classical-vocalist-dies-at-age-84. 
  4. "Kishori Amonkar: Indian vocalist". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 4 April 2017.
  5. "The loneliness of Kishori Amonkar" (in en-US). The Indian Express. 2016-12-11. http://indianexpress.com/article/lifestyle/art-and-culture/the-loneliness-of-kishori-amonkar/. 
  6. "Padma Awards". மத்திய தகவல் தொடர்புத் துறை. பார்க்கப்பட்ட நாள் 28 March 2010.
  7. "SNA: List of Akademi Awardees: Music [Vocal]". சங்கீத நாடக அகாதமி. Archived from the original on 31 March 2016. பார்க்கப்பட்ட நாள் 28 March 2010.
  8. "SNA: List of Akademi Fellows". Sangeet Natak Akademi. Archived from the original on 6 December 2014. பார்க்கப்பட்ட நாள் 28 March 2010.
  9. "7 women get M.S. Subbulakshmi Awards" (in en). The Hindu. http://www.thehindu.com/news/national/7-women-get-M.S.-Subbulakshmi-Awards/article14636767.ece. 

வெளி இணைப்புகள்

[தொகு]
வெளி ஒளிதங்கள்
யூடியூபில் Art Talk with Kishori Amonkar on NewsX
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிஷோரி_அமோன்கர்&oldid=4052593" இலிருந்து மீள்விக்கப்பட்டது