பல்லே ராமராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லே ராமராவ்
பிறப்பு1937
வாழிடம்ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம்
தேசியம்இந்தியன்
துறைஇயற்பியல் மற்றும் இயந்திரவியல் உலோகவியல்
கல்வி கற்ற இடங்கள்இந்திய அறிவியல் கழகம், தொழில்நுட்ப நிறுவனம், பனாரசு இந்து பல்கலைக்கழகம் (தற்போது இந்திய தொழில்நுட்பக் கழகம் (பிஎச்யூ) வாரணாசி)

பல்லே ராமராவ் (Palle RamaRao) [1] இவர் ஓர் இந்திய விஞ்ஞானி ஆவார். இவர் இயற்பியல் மற்றும் இயந்திர உலோகவியல் துறையில் தனது பங்களிப்பால் குறிப்பிடத்தக்கவர். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல பல்கலைக்கழகங்களிலும் சங்கங்களிலும் இவர் இணைந்து ஆராய்ச்சி நடவடிக்கைகளை நடத்தியுள்ளார். விஞ்ஞான சமூகத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2011 ஆம் ஆண்டில் பத்ம விபூசண் பட்டம் வழங்கி கௌரவித்தது. ஐதராபாத்திலுள்ள தூள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும், அதன் நிர்வாக சபையின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

கல்வி[தொகு]

பல்லே ராமராவ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலையும் (இயற்பியல்), ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் ( அணுக்கரு இயற்பியல் ) பட்டமும் பெற்றார். மேலும் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் கழகத்திலிருந்து முனைவர் பட்டமும் ( உலோகம் ) (இப்போதைய வாரணாசி, இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ) ) பெற்றார். 1966-67 காலப்பகுதியில், இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கூட்டாளராக இருந்தார். 1960 ஆம் ஆண்டில் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் உலோகவியல் துறையில் ஆசிரியராகச் சேர்ந்தார். 1962இல் வாரணாசி, இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் விரிவுரையாளராக சேர்ந்தார். பின்னர் அங்கு தொடர்ந்து உடல் உலோகவியல் பேராசிரியராக (1975–82) பணியாற்றினார். அதன்பிறகு இவர் இந்தியப் பாதுகாப்புத் துறை உலோகவியல் ஆய்வுக்கூட, இயக்குநராகவும், இந்திய அரசின் செயலாளராகவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் பெருங்கடல் மேம்பாட்டுத் துறை மற்றும் அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். [2]

பணிகள்[தொகு]

இவர் இந்தியா முழுவதிலும் உள்ள ஏராளமான கல்வி நிறுவனங்களுடன் பரந்த அளவிலான பாடங்களில் தொடர்பு கொண்டிருந்தாலும், இவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் உலோக நடத்தை மற்றும் இயந்திர அலாய் மேம்பாட்டை மையமாகக் கொண்டிருந்தன.

சாதனைகள்[தொகு]

பல்லே ராமராவ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு முக்கிய பங்களிப்புகளில் ஒருவராவார். ஐதராபாத்தில் "டி.ஆர்.அனந்தராமன் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை" என்ற நிறுவனத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது ஐந்து தசாப்த கால அயராத முயற்சிகளால், வேதியியல் துறையில் இந்தியா முன்னணியில் வந்துள்ளது.

இவர் நிறுவிய நிறுவனங்கள் பின்வருமாறு:

  • கனரக அலாய் ஊடுருவல் ஆலை (திருச்சி, தமிழ்நாடு)
  • தூள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையம், ஐதராபாத்
  • இரும்பு அல்லாத பொருள் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம், ஐதராபாத்
  • தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை
  • பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம், கல்பாக்கம்
  • தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், புது தில்லி

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்[தொகு]

ஏறக்குறைய ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக, இவர் 240 ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்துள்ளார். இவர் தனது சிறந்த பணிகளுக்காக பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்.

இவை பின்வருமாறு:

  • பொறியியலுக்கான இலண்டன் இராயல் அகாதமி விருது
  • மூன்றாம் உலக நாடுகளின் அறிவியல் அகாதமியின் (இத்தாலி) சக கூட்டாளர் அங்கீகாரம்
  • உக்ரைன் அறிவியல் கழகத்தின் சக கூட்டாளர் அங்கீகாரம்
  • இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் சக கூட்டாளர் அங்கீகாரம்
  • இந்திய அறிவியல் கழகத்தின் சக கூட்டாளர் அங்கீகாரம்
  • தேசிய அறிவியல் கழகத்தின் சக கூட்டாளர் அங்கீகாரம்
  • தலைவர், இந்திய அறிவியல் கழகம்
  • தலைவர், இந்திய தேசிய பொறியியல் கழகம்
  • தலைவர், இந்திய அறிவியல் காங்கிரசு (1997-98)
  • தலைவர், இந்திய உலோக நிறுவனம் (1990-91)
  • தலைவர், இந்திய பொருள் ஆராய்ச்சி சங்கம் (1992-94)
  • தலைவர், இந்திய அணுசக்தி நிறுவனம்
  • துணைத் தலைவர், பொருட்கள் ஆராய்ச்சி சங்கங்களின் சர்வதேச ஒன்றியம் (2002-03)
  • சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருது [2] (1979)
  • இந்திய அரசிடமிருந்து பத்மசிறீ விருது (1989)
  • இந்திய அரசிடமிருந்து பத்ம பூசண் விருது (2001)
  • இந்திய அரசிடமிருந்து பத்ம விபூசண் விருது (2011) [3]
  • இந்திய எஃகு அமைச்சகம், "வாழ்நாள் சாதனையாளர் விருது" (2009)
  • குஜார் மால் மோடி அறக்கட்டளையின் ஜிஎம் மோடி புதுமையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருது
  • இந்திய உலோக நிறுவனத்தின் பிளாட்டினப் பதக்கம் (1994)
  • டாடா தங்கப் பதக்கம் (1992)
  • ஓமி பாபா விருது (1986)
  • இந்திய தேசிய அறிவியல் கழகம் (1996) "பொருள் அறிவியல்" விருது
  • இந்திய தேசிய எஃகு அமைச்சகம், "தேசிய உலோகவியலாளர்" விருது
  • இந்திய அறிவியல் காங்கிரசின் “மில்லினியம் பிளாக் ஆப் ஹானர்” என்ற கௌரவம்
  • இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் "மேக்னாத் சாகா பதக்கம்" (2004)
  • அமெரிக்க உலோகங்கள் சமூகத்தின் "சிறப்பு வாழ்நாள் உறுப்பினர்" விருது
  • இந்திய அறிவியல் காங்கிரசின், "அசுதோஷ் முகர்ஜி நினைவு விருது"
  • கடப்பா, யோகி வேமன்னா பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம் (2012) [4]

குடும்பம்[தொகு]

பல்லே ராமராவிற்கு ரேகா என்ற மனைவியும், நரேந்திரன் என்ற ஒரு மகனும் மற்றும் சுமன் என்ற ஒரு மகளும் உள்ளனர்.

குறிப்புகள்[தொகு]

  1. "List of Fellows". 2016-06-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-06-04 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Prof. P Ramarao – n80-0615". INSA India. 8 அக்டோபர் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. విలేకరి (2011). "128 మందికి ‘పద్మ’ పురస్కారాలు". సూర్య దినపత్రిక. http://www.suryaa.com/entertainment/article.asp?subCategory=3&contentId=14375. பார்த்த நாள்: 14 November 2016. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. విలేకరి (14 November 2016). "ఆచార్య రామారావుకు డాక్టరేట్". ఆంధ్రభూమి దినపత్రిక. Archived from the original on 14 நவம்பர் 2016. https://web.archive.org/web/20161114071304/http://archive.andhrabhoomi.net/content/a-959. பார்த்த நாள்: 5 November 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லே_ராமராவ்&oldid=3668005" இருந்து மீள்விக்கப்பட்டது