பலராம் சிவராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி.சிவராமன்
B. Sivaraman
பிறப்புஇந்தியா
பணிஆட்சிப் பணி
அறியப்படுவதுபாதுகாப்புத்துறை செயலர்
விருதுகள்பத்ம விபூசன்

பலராம் சிவராமன் (Balaram Sivaraman) ஓர் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஆவார். இவர் ஓர் எழுத்தாளராகவும் இருந்தார். இந்திய பாதுகாப்புத் துறையின் ஆறாவது செயலாளர் ஆகவும் பணிபுரிந்துள்ளார்.[1] 1969 ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தில் அவர் இப் பதவியை ஏற்று 1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 வரை பதவியில் இருந்தார். 1971 ஆம் ஆண்டு இந்திய அரசு நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம விபூசன் விருதினை இவருக்கு வழங்கி சிறப்பித்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cabinet Secretariat-Government of India". cabsec.gov.in (in ஆங்கிலம்). 2018-05-18. பார்க்கப்பட்ட நாள் 2018-05-18.
  2. "Padma Awards". Padma Awards. Government of India. 2018-05-17. Archived from the original on 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலராம்_சிவராமன்&oldid=3564999" இலிருந்து மீள்விக்கப்பட்டது