உள்ளடக்கத்துக்குச் செல்

பி. ஜி. கெர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலாசாகிப் கங்காதர் கெர் (Balasaheb Gangadhar Kher, பரவலாக B. G. Kher) (மராத்தி:बाळासाहेब गंगाधर खेर) (ஆகத்து 24, 1888 - மார்ச் 8, 1957[1],[2] ) இந்தியாவின் தற்போதைய மகாராட்டிரம் மற்றும் குசராத்தை உள்ளடக்கிய பம்பாய் மாகாணத்தின் முதல் பிரதம மந்திரியாக (அக்காலத்தில் மாநில முதல்வர்கள் அவ்வாறு அழைக்கப்பட்டனர்) இருந்தவர். 1954ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்ம விபூசண் விருது வழங்கியது. வழக்கறிஞராகவும் சமூகசேவகராகவும் அரசியல்வாதியாகவும் விளங்கிய கெர் பழகுவதற்கு இனியவர் என்று பெயர் பெற்றவர்.

பாலாசாகிப் கங்காதர் கெர்
பாலாசாகிப் கங்காதர் கெர்

இளமை வாழ்வு

[தொகு]

பாலாசாகிப் கங்காதர் கெர் ஓர் நடுத்தரக் குடும்பத்தில் ஆகத்து 24, 1888இல் இரத்னகிரியில் பிறந்தார்.புனேயில் பள்ளிப்படிப்பும் மும்பை வில்சன் கல்லூரியில் 1908ஆம் ஆண்டு இளங்கலைப் படிப்பும் முடித்தார். வடமொழியில் சிறந்த தேர்ச்சி பெற்றதற்கு பரிசுகளும் பெற்றுள்ளார்.[3]

அரசியல் வாழ்வு

[தொகு]

1922ஆம் ஆண்டு சுவராஜ் கட்சியின் மும்பை செயலாளராக தமது அரசியல் வாழ்வைத் தொடங்கினார்.[1] ஒத்துழையாமை இயக்கத்தின்போது 1930ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு எட்டு மாதங்கள் கடுங்காவல் தண்டனை பெற்றார். மீண்டும் 1932ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்க பெற்றார். 19[[37ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் பம்பாய் மாகாணத்தின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றார். 1940ஆம் ஆண்டு மீண்டும் சிறை சென்றார்.வெள்ளையனே வெளியேறு இயக்கம்|வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது]] 1942ஆம் ஆண்டு மீண்டும் சிறை சென்று சூலை14,1944 அன்று விடுதலையானார். மார்ச் 30,1946 மீண்டும் பம்பாய் மாகாண பிரதமராக பொறுப்பேற்றார். ஏப்ரல் 21,1952 வரை இப்பதவியில்இருந்தார்.மார்ச் 8, 1957ஆம் ஆண்டு புனேயில் இயற்கை எய்தினார்.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "This Day That Age". த இந்து. March 9, 2007. Archived from the original on மார்ச் 2, 2012. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 26, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Indian autographers - Bal Gangadhar Kher".
  3. "B.G. Kher". Indian Post website.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஜி._கெர்&oldid=3745737" இலிருந்து மீள்விக்கப்பட்டது