உள்ளடக்கத்துக்குச் செல்

இருசிகேசு முகர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இருசிகேசு முகர்ச்சி
பிறப்பு (1922-09-30)30 செப்டம்பர் 1922
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்காலத்தில், கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா)
இறப்பு 27 ஆகத்து 2006(2006-08-27) (அகவை 83)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணி திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்

இருசிகேசு முகர்ச்சி (Hrishikesh Mukherjee, கிரந்த ஒலிப்பு:ரிஷிகேஷ் முகர்ஜி) (30 செப்டம்பர் 1922 – 27 ஆகத்து 2006) புகழ்பெற்ற இந்தித் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது முதன்மையான திரைப்படங்களாக சத்தியகாம், இச்சுப்கே இச்சுப்கே, அனுபமா, ஆனந்த், அபிமான், குஃட்ஃடி, கோல் மால், ஆசீர்வாத், பவார்ச்சி, கிசி சே ந கேஹ்னா, நமக் அராம் அமைந்திருந்தன.

இருசி-டா எனப் பரவலாக அறியப்பட்டவரின் நாற்பதாண்டுத் திரைவாழ்வில் 42 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமது சமூகத் திரைப்படங்களுக்காக புகழ்பெற்றிருந்த இருசி-டா இந்திய திரைப்படத்துறையின் பகட்டான மசாலா படங்களுக்கும் மெய்நிகரான கலைப்படங்களுக்கும் இடைப்பட்ட மத்திய சினிமாவின் முன்னோடி என அறியப்பட்டார்.[1][2][3][4]

He also remained the chairman of the இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவின் (CBFC) தலைவராகவும் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் (NFDC) தலைவராகவும் விளங்கினார்.[5] 1999இல் இவருக்கு இந்திய அரசு தாதாசாகெப் பால்கே விருது வழங்கியது; 2001இல் பத்ம விபூசண் விருது பெற்றார். எட்டு பிலிம்பேர் விருதுகள் பெற்ற இருசி-டாவிற்கு 2001இல் என்டிஆர் தேசிய விருது வழங்கப்பட்டது.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Gulzar; Nihalani, Govind; Chatterjee, Saibal (2003). Encyclopaedia of Hindi Cinema. Encyclopaedia Britannica (India) Pvt Ltd. p. 592. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7991-066-0.
  2. The common man lure of Hrishikesh Mukherjee's films ரெடிப்.காம்.
  3. Hrishikesh Mukherjee's best films Special Photo feature, ரெடிப்.காம், 28 August 2006.
  4. Duara, Ajit (3 September 2006). "A touch of realism". தி இந்து இம் மூலத்தில் இருந்து 10 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110161843/http://www.hindu.com/mag/2006/09/03/stories/2006090300310500.htm. பார்த்த நாள்: 19 September 2011. 
  5. Remembering Hrishikesh Mukherjee பரணிடப்பட்டது 5 செப்டெம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம் ஹிந்துஸ்தான் டைம்ஸ், 26 August 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருசிகேசு_முகர்ச்சி&oldid=3773091" இலிருந்து மீள்விக்கப்பட்டது