இருசிகேசு முகர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரிசிகேஷ் முகர்ஜி இலிருந்து வழிமாற்றப்பட்டது)


இருசிகேசு முகர்ச்சி
பிறப்பு செப்டம்பர் 30, 1922(1922-09-30)
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்காலத்தில், கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா)
இறப்பு 27 ஆகத்து 2006(2006-08-27) (அகவை 83)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணி திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
Hrishikesh Mukherjee 2013 stamp of India.jpg

இருசிகேசு முகர்ச்சி (Hrishikesh Mukherjee, கிரந்த ஒலிப்பு:ரிஷிகேஷ் முகர்ஜி) (30 செப்டம்பர் 1922 – 27 ஆகத்து 2006) புகழ்பெற்ற இந்தித் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது முதன்மையான திரைப்படங்களாக சத்தியகாம், இச்சுப்கே இச்சுப்கே, அனுபமா, ஆனந்த், அபிமான், குஃட்ஃடி, கோல் மால், ஆசீர்வாத், பவார்ச்சி, கிசி சே ந கேஹ்னா, நமக் அராம் அமைந்திருந்தன.

இருசி-டா எனப் பரவலாக அறியப்பட்டவரின் நாற்பதாண்டுத் திரைவாழ்வில் 42 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமது சமூகத் திரைப்படங்களுக்காக புகழ்பெற்றிருந்த இருசி-டா இந்திய திரைப்படத்துறையின் பகட்டான மசாலா படங்களுக்கும் மெய்நிகரான கலைப்படங்களுக்கும் இடைப்பட்ட மத்திய சினிமாவின் முன்னோடி என அறியப்பட்டார்.[1][2][3][4]

He also remained the chairman of the இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவின் (CBFC) தலைவராகவும் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் (NFDC) தலைவராகவும் விளங்கினார்.[5] 1999இல் இவருக்கு இந்திய அரசு தாதாசாகெப் பால்கே விருது வழங்கியது; 2001இல் பத்ம விபூசண் விருது பெற்றார். எட்டு பிலிம்பேர் விருதுகள் பெற்ற இருசி-டாவிற்கு 2001இல் என்டிஆர் தேசிய விருது வழங்கப்பட்டது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Gulzar; Nihalani, Govind; Chatterjee, Saibal (2003). Encyclopaedia of Hindi Cinema. Encyclopaedia Britannica (India) Pvt Ltd.. பக். 592. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7991-066-0. 
  2. The common man lure of Hrishikesh Mukherjee's films ரெடிப்.காம்.
  3. Hrishikesh Mukherjee's best films Special Photo feature, ரெடிப்.காம், 28 August 2006.
  4. Duara, Ajit (3 September 2006). "A touch of realism". தி இந்து. Archived from the original on 10 நவம்பர் 2012. https://web.archive.org/web/20121110161843/http://www.hindu.com/mag/2006/09/03/stories/2006090300310500.htm. பார்த்த நாள்: 19 September 2011. 
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Hin என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருசிகேசு_முகர்ச்சி&oldid=3262443" இருந்து மீள்விக்கப்பட்டது