உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்
பிறப்புபிரான் கிருஷண் சிக்கந்து
பெப்ரவரி 12, 1920 (1920-02-12) (அகவை 105)
புது தில்லி, இந்தியா [1]
இறப்புமும்பை, ஜூலை 12, 2013
இருப்பிடம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
மற்ற பெயர்கள்பிரான் சகாப்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1940–2007
வாழ்க்கைத்
துணை
சுக்லா சிக்கந்து (1945–இன்றுவரை)
பிள்ளைகள்அரவிந்த் சிக்கந்து
சுனில் சிக்கந்து
பிங்கி சிக்கந்து
வலைத்தளம்
http://www.pransikand.com

பிரான் (பிறப்பு பிரான் கிருஷண் சிக்கந்து, பெப்ரவரி 12, 1920 - ஜூலை 12, 2013) பல பிலிம்பேர் விருதுகளையும் வங்காள திரை இதழாளர்களின் விருதுகளையும் வென்றுள்ள இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். 1940களிலிருந்து 1990கள் வரையில் இவரது எதிர்மறை வேடங்களுக்காகவும் குணச்சித்திர வேடங்களுக்காகவும் இந்தித் திரையுலகில் நன்கு அறியப்பட்டவர்.[2] 1940இல் இலாகூரில் தயாரிக்கப்பட்ட எம்லா ஜாட் என்ற பஞ்சாபி திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். 1940 முதல் 1947 வரை கதாநாயக வேடங்களிலும் 1942 முதல் 1991 வரை எதிர்மறை வேடங்களிலும் நடித்துள்ளார். 1948 முதல் 2007 வரை துணைநடிகராகவும் நடித்துள்ளார். தமது பல்லாண்டு பரவிய திரைவாழ்வில் 350 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். 2000ஆம் ஆண்டில் இசுடார்டசுட்டு இதழால் 'ஆயிரவாண்டின் வில்லன்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.[3][4] 2010இல் சிஎன்என் அனைத்துக்கால முதல் 25 ஆசிய நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.[5][6]

2013ஆம் ஆண்டில் இந்திய திரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது இவருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.[7]

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 ஜூன் மாதம் அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டார். 2103 ஜூலை 12-ம் தேதி அவர் காலமானார்.[8]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Pran as a person (Official biography)". Retrieved 14 December 2011.
  2. Encyclopaedia of Hindi cinema, by Encyclopaedia Britannica (India) Pvt. Ltd, Gulzar, Govind Nihalani, Saibal Chatterjee. Published by Encyclopaedia Britannica (India) Pvt. Ltd., 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7991-066-0.
  3. "Pran, Bollywood's black gold". Archived from the original on 2013-02-17. Retrieved 2013-04-13.
  4. Top 10 Villains of Bollywood! | MissMalini
  5. "Big B in CNN's top 25 Asian actors list". New York: ஹிந்துஸ்தான் டைம்ஸ். 5 March 2010. Archived from the original on 1 நவம்பர் 2011. Retrieved 14 December 2011. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  6. "Asia's Best Actors". இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 26 ஜனவரி 2013. Retrieved 14 December 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  7. "பாலிவுட் நடிகர் பிராணுக்கு தாதா சாகேப் பால்கே விருது". தினமணி. ஏப்ரல் 13, 2013. Retrieved ஏப்ரல் 13, 2013.
  8. இந்தி நடிகர் பிரான் காலமானார்

வாழ்க்கை வரலாற்று நூல்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


விக்கிமீடியா பொதுவகத்தில்,
பிராண்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்&oldid=3792622" இலிருந்து மீள்விக்கப்பட்டது