சியாம் பெனகல்
சியாம் பெனகல் | |
---|---|
![]() 2010இல் சியாம் பெனகல் | |
பிறப்பு | திருமலைகிரி, ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா (தற்போது தெலங்காணா, இந்தியா) | 14 திசம்பர் 1934
இறப்பு | 23 திசம்பர் 2024 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 90)
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் |
வாழ்க்கைத் துணை | நீரா |
பிள்ளைகள் | 1 |
உறவினர்கள் | குரு தத் (உறவினர்) |
விருதுகள் | 1976 பத்மசிறீ 1991 பத்ம பூசண் 2005 தாதாசாகெப் பால்கே விருது 2013 ஏஎன்ஆர் தேசிய விருது |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 16 பெப்பிரவரி 2006 – 15 பெப்பிரவரி 2012 | |
சியாம் பெனகல் (Shyam Benegal, பிறப்பு: 14 திசம்பர் 1934-23 திசம்பர் 2023) ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர், 1970களில் “மத்திய திரைப்படங்கள்” (middle cinema) என்ற புதிய பதம் உருவாகக் காரணமானவர். ஆனால் இவர் இந்த பதத்தை விரும்பவில்லை. இவர் புதிய அல்லது மாற்று என்ற பதத்தையே விரும்பினார்.[1] மேலும் இவர் , 16-06-2006 முதல் 15-06-2012 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையின் நியமன உறுப்பினராவும் நியமிக்கப்பட்டார். இவர் பதினெட்டு முறை தேசிய திரைப்பட விருதுகள், பிலிம்பேர் விருது மற்றும் நந்தி விருது உட்பட பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார். 2005 ஆம் ஆண்டில், திரைப்படத் துறையினருக்கு வழஙப்படும் இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாகெப் பால்கே விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டில், இவரை இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது. மேலும் 1991 இல் இவருக்கு பத்மபூசண் விருது வழங்கப்பட்டது.[2]
திரைப்படங்கள்
[தொகு]மந்தன்
[தொகு]1978ம் ஆண்டில் சியாம் பெனகல் "மந்தன்" என்ற திரைப்படத்தை தயாரித்தார். இந்த திரைப்படத்தின் கதையை இவரும், இந்திய வெண்மைப்புரட்சியின் தந்தை என்று கூறப்படும் வர்கீஸ் குரியனும் இணைந்து எழுதினர். படத்தை பெனகல் இயக்கினார். கூட்டு இயக்கங்கள் எத்தகைய வெற்றியை தரும் என்பதை வர்கீஸ் குரியன் நடத்திய வெண்மைப் புரட்சி இயக்கம் நடைமுறையில் காட்டியது. இந்திய மக்கள் பாலுக்கு அலைந்த நிலை மாறி பால் ஏராளமாக கிடைக்கும் நிலை இந்த புரட்சியின் மூலம் உருவானது. திரைப்படத்தை தயாரிக்க குஜராத் பால் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் ஐந்து லட்சம் பேரும் தலா இரண்டு ரூபாயை நன்கொடையாக வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.[3]
சம்விதான்
[தொகு]"இந்திய அரசமைப்புச்சட்டம் உருவான வரலாறு - சம்விதான்" திரைப்படம் பத்து தொடர் கொண்ட திரைப்படமாகும். இத்தயாரிப்புக்கு மாநிலங்களவை தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். இத்திரைப்பம் 1947 முதல் 1949 வரையிலான காலகட்டத்தைச் சார்ந்தது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஏழு அல்லது எட்டு மாதங்களுக்கு முன்னதாக திரைப்படம் தொடங்குகிறது. அதற்குப்பின் அது குடியரசாக அறிவிக்கப்படுவதுடன் திரைப்படம் முடிகிறது. இக்கால கட்டத்தில் பல சம்பவங்கள் நடந்து விடுகின்றன. இந்தியா துண்டாடப்பட்டு இரண்டு நாடுகள் உருவாக்கப்பட்ட துயரமான சம்பவம் அக்காலகட்டத்தில் நடந்தது.[3]
பெனகல்@ஒர்க் திருவிழா
[தொகு]இவரின் திரைப்படங்களை தொலைக்காட்சியில் வெளியிட ஜீ கிளாசிக் அலைவரிசை தீர்மானித்துள்ளது. இவருடைய திரைப்படங்களை ஒரு மாத காலத்திற்கு திரையிட இந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இத்திருவிழாவுக்கு அந்நிறுவனம் “பெனகல்@ஒர்க்” என்று பெயர் சூட்டியுள்ளது. ஜீ கிளாசிக் அலைவரிசை ஜனவரி 11 முதல் பெனகலின் திரைப்படங்களை திரையிடத் தொடங்கும்.[3]
விருதுகள்
[தொகு]இவருக்கு 1976ம் ஆண்டில் பத்மசிறீ விருதும், 1991ம் ஆண்டில் பத்மபூசண் விருதும் வழங்கப்பட்டது. 2007ம் ஆண்டில் இந்திய திரைப்படத்துறையின் மிகப் பெரிய விருதான தாதாசாகெப் பால்கே விருது வழங்கி இந்திய அரசு இவரைக் கௌரவித்தது. இவர் உருவாக்கிய ஆங்கூர், மந்தன், நிஷாந்த், ஜூனோன், ஆரோஹன் உள்ளிட்ட ஏழு இந்தித் திரைப்படங்களுக்கு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். அத்துடன், கான் திரைப்பட விழா|கான்]], பெர்லின், மாஸ்கோ சர்வதேச திரைப்படவிழாக்களிலும் இவர் விருது பெற்றுள்ளார்.[3]
இறப்பு
[தொகு]நாள்பட்ட சிறுநீரக நோயால் சிகிச்சை பெற்று வந்த சியாம் பெனகல் 23 டிசம்பர் 2024 அன்று, தனது 90 வயதில், மும்பையில் உள்ள வொக்கார்ட் மருத்துவமனையில் காலமானார்.[4][5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shyam-e-ghazal". 29 January 2006 இம் மூலத்தில் இருந்து 10 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20211210070518/https://www.tribuneindia.com/2006/20060129/spectrum/main4.htm.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 21 July 2015.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "சியாம் பெனகல் திரைப்படங்களின் திருவிழா". தீக்கதிர்: pp. 8. 11 சனவரி 2014 இம் மூலத்தில் இருந்து 2014-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140118125515/http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 12 சனவரி 2014.
- ↑ "Filmmaker Shyam Benegal passes away at the age of 90". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 December 2024. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/filmmaker-shyam-benegal-passes-away-at-the-age-of-90/articleshow/116604461.cms.
- ↑ "Filmmaker Shyam Benegal passes away at the age of 90". The Economic Times. 23 December 2024.
- ↑ "India's legendary filmmaker Shyam Benegal dies at age 90" (in en). AP News. 24 December 2024. https://apnews.com/article/india-legendary-flimmaker-shyam-bengal-dies-944d5a1866f126364ef0fd5b22c4c149.
மேலும் படிக்க
[தொகு]- Shyam Benegal (BFI World Directors) – Sangeeta Datta. 2003, British Film Institute. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85170-908-7.
- Bollywood Babylon: Interviews with Shyam Benegal, William van der Heide. 2006, Berg Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84520-405-0.
- BBC's Tom Brook interviews Shyam Benegal on 25 August 2006
- Girish Karnad interviews Shyam Benegal, National Film Theatre, 2002
- Sen, Meheli (2011) "Vernacular Modernities and Fitful Globalities in Shyam Benegal's Cinematic Provinces" on manycinemas.org 1, 8-22, Online[தொடர்பிழந்த இணைப்பு], pdf-version பரணிடப்பட்டது 27 அக்டோபர் 2015 at the வந்தவழி இயந்திரம்
- New Indian Cinema in Post-Independence India; The Cultural Work of Shyam Benegal's Films, By Anuradha Dingwaney Needham, 2013
- Shyam Benegal, Philosopher and Filmmaker, By Samir Chopra, 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- Shyam Benegal's Retrospective Abu Dhabi Sept27-30,2012 பரணிடப்பட்டது 30 செப்டெம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம் by Indian Film Society of UAE
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Shyam Benegal
- 'Shyam Benegal: A Life in Pictures' interview at BAFTA
- Shyam Benegal on Upperstall
- Awards & recognition for Shyam Benegal's films