உள்ளடக்கத்துக்குச் செல்

ஓபைடு சித்திக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Obaid Siddiqi
பத்ம விபூசண் விருது பெறும்போது
பிறப்பு7 January 1932 (1932-01-07)
உத்தரப் பிரதேசம்
இறப்பு26 சூலை 2013(2013-07-26) (அகவை 81)
துறைஉயிரியல்; மரபணுவியல்
தாக்கம் 
செலுத்தியோர்
ஹோமி பாபா
விருதுகள்
பத்ம பூசண் (1984)

பத்ம விபூசண் (2006) FRS (1984)

ஓபைடு சித்திக்கி[1] (7 January 1932 – 26 July 2013) ஓர் இந்திய மரபியலறிஞரும் மூலக்கூறு உயிரியலாளரும் ஆவார். டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தின் தேசிய உயிரிஅறிவியல் மையத்தின் நிறுவுநராகவும் முதல் இயக்குனராகவும் இருந்துள்ளார்[2]. மரபணு அமைப்பு, மரபியல் மீள்சேர்க்கை, புரதத் தொகுப்பின் மரபியல் கட்டுப்படுத்தல் ஆகிய புலங்களில் முக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார். சுவை, மணம் ஆகிய உணர்ச்சிகளின் நரம்புமண்டல மரபியல் கூறுகளை ஆய்வு செய்தார். 2006இல் பத்ம விபூசண் விருதினைப் பெற்றார்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. ஒலிப்புதவி -- Renowned Scientist Obaid Siddiqi no more (DD News) [1]
  2. "NCBS news - Catalyst of a Culture of Creativity". பார்க்கப்பட்ட நாள் 26 Jan 2022.
  3. "Padma Vibhushan to Prof. Obaid Siddiqi, an eminent scientist". பார்க்கப்பட்ட நாள் 26 Jan 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓபைடு_சித்திக்கி&oldid=3379939" இலிருந்து மீள்விக்கப்பட்டது