ஈ. சிறீதரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஏலாட்டுவளப்பில் சிறீதரன் (பிறப்பு: சூன் 12, 1932) தில்லி மெட்ரோவின் நிர்வாக இயக்குனர்.

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் இவர் பிறந்தார். பொறியாளராகப் படித்த இவர் சிறிது காலம் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் இந்திய இரயில்வேயிலும் பணியாற்றினார்.

Pamban Bridge 2009.jpg

1963-இல் ஏற்பட்ட ஆழிப் பேரலைகளால் ராமேசுவரத்தை இணைத்த பாம்பன் பாலம் பழுதடைந்தது. இப்பாலமானது சிறீதரனுடைய மேலதிகாரியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இதனை சீரமைப்பதற்கு சீறீதரனுடைய மேலதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது. அவர் சிறீதரனுக்கு மூன்று மாத கால அவகாசம் கொடுத்திருந்தார். எனினும் சிறீதரன் இப்பாலத்தினை 46 நாட்களில் சீரமைத்தார். இவருடைய இச்சாதனைக்காக இவருக்கு ரயில்வே அமைச்சரின் விருது கொடுக்கப்பட்டது. மேலும் இந்தியாவின் முதல் விரைவுப் போக்குவரத்தான கொல்கத்தா மெட்ரோவின் திட்டமிடல், வடிவமைப்பிலும் பங்குபெற்றுள்ளார்.

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் 1990-இல் கொங்கண் இருப்புப்பாதை அமைக்கப்படும் போது அதன் தலைமை நிர்வாக இயக்குனராக பணிக்கப்பட்டார். ஏழு ஆண்டு காலத்தில் பண, கால நீட்டிப்பு இன்றி குறித்த காலத்துக்குள் திட்டம் முடிக்கப்பட்டது, பெரும் சாதனையாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும் 2005-இல் தில்லி மெட்ரோவின் நிர்வாக இயக்குனராகப் பொறுப்பேற்று இத்திட்டம் குறித்த காலத்திற்குள் செயல்பாட்டுக்கு வரக் காரணமாக இருந்தார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._சிறீதரன்&oldid=1364866" இருந்து மீள்விக்கப்பட்டது