கொகினேனி ரங்க நாயுகுலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொகினேனி ரங்க நாயுகுலு

கொகினேனி ரங்க நாயகுலு (என். ஜி. ரங்கா நவம்பர் 7, 1909—சூன் 9, 1995) என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இந்திய விவசாயிகள் இயக்கத்திலும் முக்கியப் பங்காற்றினார். அறுபதாண்டுகளாகத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகப் பணி ஆற்றிய காரணத்தால் கின்னஸ் புத்தகத்தில் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது.

இளமைக் காலம்[தொகு]

ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நிடுபிரலு என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். தொடக்கக் கல்வியைத் தம் சொந்த ஊரிலும் பின்னர் குண்டூரில் ஆந்திர கிறித்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பையும் கற்று முடித்தார். பிறகு இங்கிலாந்துக்குச் சென்று ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் ஆய்வுப்பட்டம் பெற்றார். இந்தியா திரும்பியதும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொருளியல் துறைப் பேராசிரியராகப் பணி ஆற்றினார். 1930 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி சென்னைக்கு வந்தபோது என்.ஜி. ரங்கா அவரைச் சந்தித்தார். அச்சந்திப்பின் விளைவாக இந்திய விடுதலை உணர்ச்சிப் பெற்றார். சட்டமறுப்பு இயக்கம் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டார்.

உழவர்கள் போராட்டம்[தொகு]

1933 ஆம் ஆண்டில் ஆந்திராவில் உழவர்கள் போராட்டத்தைத் தலைமைத் தாங்கி நடத்தினார். இந்திய விடுதலைப் போராட்டத்துடன் விவசாயிகள் உரிமைகளுக்காகவும் அனைத்திந்திய அளவில் போராடினார். பன்னாட்டுத் தொழிலாளர் கழகம், உணவு மற்றும் வேளாண்மைக் கழகம் ஆகியவற்றின் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.

அரசியல்[தொகு]

லோக் சபா காலம் தொகுதி கட்சி
2வது லோக் சபா 1957–1962 தெனாலி காங்கிரசு கட்சி
3வது 1962–1967 சித்தூர் சுதந்திரக் கட்சி
4வது 1967–1970 ஸ்ரீகாகுளம் சுதந்திரக் கட்சி
7வது 1980–1984 குண்டூர் காங்கிரசு
8வது 1984–1989 குண்டூர் காங்கிரசு
9வது 1989–1991 குண்டூர் காங்கிரசு

விருதுகளும் சிறப்புகளும்[தொகு]

என்.ஜி. ரங்காவுக்கு 1991 ஆம் ஆண்டில் பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது. 2001 இல் இவருடைய உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இவர் பெயரில் விவசாயத்துக்கான விருது ஒன்று புதியதாக நிறுவப்பட்டது. மேலும் குண்டூரில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டு கவுரவித்தார்கள்.

மேற்கோள்[தொகு]

http://www.gandhitopia.org/profiles/blogs/professor-n-g-ranga-a-great பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொகினேனி_ரங்க_நாயுகுலு&oldid=3771898" இலிருந்து மீள்விக்கப்பட்டது