மேரி கோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேரி கோம்
Mary Kom - British High Commission, Delhi, 27 July 2011.jpg
2011 இல் இந்தியாவிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் மேரி கோம் பேசிய போது.
புள்ளிவிபரம்
பிரிவு54 கிலோகிராம்கள் (119 lb)
உயரம்158.49 cm (5 ft 2.40 in)
தேசியம்இந்தியர்
பிறப்பு1 மார்ச்சு 1983 (1983-03-01) (அகவை 38)
பிறந்த இடம்கங்காதேய், சிசிபூர் வட்டம், மணிப்பூர், இந்தியா
சுய விபரம்
வாழ்க்கைத் துணைகருங் ஓங்கோலர் கோம்

மேரி கோம் (Mary Kom(இயற்பெயர்: மேன்க்டே சன்ங்நேஜாங்க மேரி கோம் (Mangte Chungneijang Mary Kom; பிறப்பு: மார்ச் 1, 1983),இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்[1][2]. இவர் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப்பதக்கம் வென்ற முதலாவது இந்தியாவின் வீராங்கனை ஆவார். 2012 லண்டன் கோடை கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தெரிவு செய்யப்பட்ட இந்தியாவின் ஒரேயொரு குத்துச்சண்டை வீராங்கனை இவராவார். இதில் 51 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.[3]. AIBA (சர்வதேச குத்துச்சண்டை அமையம்) இன் தரப்படுத்தலில் இவர் உலகப் பெண் குத்துச்சண்டை வீரர்களில் 4 ஆவது இடத்தில் காணப்படுகிறார்.[4] 2013 ஆம் ஆண்டில் தனது சுயசரிதையை வெளியிட்ட மேரி கோம் , ‘அன்பிரேக்கபிள்’ (unbreakable) என்று அதைப் பெயரிட்டுள்ளார்.[5]

சாதனைகள்[தொகு]

சர்வதேச வெற்றிவாகைகள்[6]
ஆண்டு இடம் எடைப் பிரிவு போட்டி நடந்த இடம்
2001 இரண்டாம் 48 2011 பெண்களுக்கான உலக குத்துச்சண்டைப் போட்டிகள் ஐக்கிய அமெரிக்கா பென்சில்வேனியா, அமெரிக்கா
2002 முதலாம் 45 2002 பெண்களுக்கான உலக குத்துச்சண்டைப் போட்டிகள் துருக்கி துருக்கி
2002 முதலாம் 45 விட்ஸ் அங்கேரி அங்கேரி
2003 முதலாம் 46 ஆசிய பெண் குத்துச்சண்டைப் போட்டி இந்தியா இசார், இந்தியா
2004 முதலாம் 46 பெண் குத்துச்சண்டை உலகக் கோப்பை நோர்வே நோர்வே
2005 முதலாம் 46 ஆசிய பெண் குத்துச்சண்டைப் போட்டி சீனக் குடியரசு தாய்வான்
2005 முதலாம் 46 2005 பெண்கள் உலக அமெச்சூர் குத்துச்சண்டை போட்டிகள் உருசியா பதோல்ஸ்கு, உருசியா
2006 முதலாம் 46 2006 பெண்கள் உலகச் குத்துச் சண்டைப் போட்டி இந்தியா புதுதில்லி, இந்தியா
2006 முதலாம் 46 வீனசு பெண்கள் குத்துக் கோப்பை டென்மார்க் டென்மார்க்
2008 முதலாம் 46 2008 ஏஐபிஏ பெண்கள் உலகச் குத்துச் சண்டைப் போட்டி சீனா சீனா
2008 இரண்டாம் 46 ஆசிய பெண் குத்துச்சண்டைப் போட்டி இந்தியா குவகாத்தி, இந்தியா
2009 முதலாம் 46 ஆசிய உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் வியட்நாம் அனோய், வியட்நாம்
2010 முதலாம் 48 2010 ஏஐபிஏ பெண்கள் உலகச் குத்துச் சண்டைப் போட்டி பார்படோசு பார்படோசு
2010 முதலாம் 46 ஆசிய பெண் குத்துச்சண்டைப் போட்டி கசக்கஸ்தான் கசக்ஸ்தான்
2010 மூன்றாம் 51 2010 ஆசிய விளையாட்டுக்களில் குத்துச்சண்டை சீனா சீனா
2011 முதலாம் 48 ஆசிய பெண்கள் கோப்பை சீனா ஹைக்கோ, சீனா
2012 முதலாம் 51 ஆசிய பெண் குத்துச்சண்டைப் போட்டி மங்கோலியா உலன் பதோர், மொங்கோலியா
2012 மூன்றாம் 51 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஐக்கிய இராச்சியம் இலண்டன், ஐக்கிய ராச்சியம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்[தொகு]

2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கசக்ஸ்தான் வீராங்கனை ஷெகரேபேகோவாவை வீழ்த்தித் தங்கப் பதக்கம் பெற்றார்.

விருதுகள்[தொகு]

  1. அர்ஜுனா விருது - 2004
  2. பத்மசிறீ விருது - 2006
  3. ராஜுவ்காந்தி கேல் ரத்னா விருது - 2009
  4. 2010-ம் வருடத்தின் சிறந்த விளையாட்டு வீராங்கனை - சஹாரா விளையாட்டு விருதுகள்.

உசாத்துணைகள்[தொகு]

  1. Kumar, Priyanka (8 March 2012). "மேரி கோம்: குத்துச்சண்டை வீராங்கனை, தாய்". IBN Live. Archived from the original on 10 மார்ச் 2012. https://web.archive.org/web/20120310171529/http://ibnlive.in.com/news/mc-mary-kom-boxer-mother-icon/237176-5-23.html. பார்த்த நாள்: 9 August 2012. 
  2. "For Mary Kom, life comes second to Olympic dream". First Post. 23 May 2012. http://www.firstpost.com/blogs/for-mary-kom-life-comes-second-to-olympic-dream-318356.html. பார்த்த நாள்: 9 August 2012. 
  3. "Olympics: Mary Kom loses SF 6-11, wins bronze". IBN Live. மூல முகவரியிலிருந்து 9 ஆகஸ்ட் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 8 Aug 2012.
  4. "AIBA World Women's Ranking". AIBA. பார்த்த நாள் 5 June 2012.
  5. "மேரி கோமின் சுயசரிதை வெளியீடு". தீக்கதிர்: pp. 8. 18 திசம்பர் 2013. Archived from the original on 2014-01-18. https://web.archive.org/web/20140118125515/http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 20 திசம்பர் 2013. 
  6. "AIBA Women’s World Boxing Championships Qinhuangdao 2012 Athletes Biographies". International Boxing Association. பார்த்த நாள் 3 June 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_கோம்&oldid=3229833" இருந்து மீள்விக்கப்பட்டது