கே. ஜி. சுப்ரமணியன்
கே. ஜி. சுப்ரமணியன் | |
---|---|
![]() 2008 இல் சுப்ரமணியன் | |
பிறப்பு | 1924[1] கூத்துப்பறம்பு, கேரளம், இந்தியா |
இறப்பு | 29 சூன் 2016[2] வடோதரா, குசராத்து, இந்தியா | (அகவை 92)
கல்வி | விஸ்வபாரதி பல்கலைக்கழகம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | விஸ்வபாரதி பல்கலைக்கழகம் |
பணி | ஓவியர், சிற்பி, சுவர் ஓவியர், அச்சுப்பணி, எழுத்தாளர், கல்வியாளர் |
அரசியல் இயக்கம் | சூழ்நிலை நவீனத்துவம், பரோடா குழு [3] |
விருதுகள் | பத்மசிறீ, காளிதாஸ் சம்மன் விருது, பத்ம பூசண், பத்ம விபூசண் |
கல்பாத்தி கணபதி கே. ஜி. சுப்பிரமண்யன் (Kalpathi Ganpathi K.G. Subramanyan) (1924 – 29 ஜூன் 2016) ஒரு இந்திய கலைஞராவார். இவருக்கு 2012இல் பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது . [4]
வாழ்க்கை[தொகு]
சுப்ரமண்யன் 1924இல் இந்தியாவின் கேரளாவில் கூத்துபறம்பு [5][6] என்ற கிராமத்தில் பிறந்தார். [7] ஆரம்பத்தில் சென்னை, மாநிலக் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார். [7] சுதந்திர போராட்டத்தில் இவர் தீவிரமாக ஈடுபட்டார். மேலும் இவர் காந்திய சித்தாந்தத்திற்கு பெயர் பெற்றவர். இவர் சிறையில் அடைக்கப்பட்டக் காரணத்தால் பிரிட்டிஷ் ஆட்சியின் போது அரசு கல்லூரிகளில் சேர தடை விதிக்கப்பட்டார். 1944ஆம் ஆண்டில் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் கலை பீடமான கலா பவனில் கல்வி கற்க சாந்திநிகேதனுக்கு சென்றபோது ஒரு கலைஞராக இவரது வாழ்க்கையின் திருப்புமுனை வந்தது. நவீன இந்திய கலையின் முன்னோடிகளான நந்தலால் போஸ், பெனோட் பிஹாரி முகர்ஜி மற்றும் இராம்கிங்கர் பைஜ் ஆகியோரின் கீழ், சுப்பிரமணியன் 1948 வரை அங்கு படித்தார்.
1951 இல் பரோடாவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பலகலைகழகத்தின் நுண்கலை பீடத்தில் விரிவுரையாளரானார். 1956 இல் பிரிட்டிஷ் அமைப்பின் அறிஞராக இலண்டனில் ஸ்லேட் கலைப்பள்ளியில் சிலகாலம் படிக்கச் சென்றார். ஓவியப் பேராசிரியராக பணியாற்ற பரோடாவுக்குச் சென்றார். 1966ஆம் ஆண்டில் நியூயார்க்கில் ராக்ஃபெல்லர் கூட்டாளராக சிலகாலம் பணியாற்றினார். [8] 1980 ஆம் ஆண்டில், விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் தான் படித்த பள்ளியான கலா பவனில் கற்பிப்பதற்காக மீண்டும் சாந்திநிகேதனுக்குச் சென்றார். ஓவியப்பேராசிரியராக பணியாற்றி 1989 இல் ஓய்வு பெற்றார்.
சுப்ரமண்யன் தனது மகள் உமாவுடன் பரோடாவில் தனது வாழ்க்கையின் பிற்பகுதிகளில் வசித்து வந்தார். இவர் 29 ஜூன் 2016 அன்று இறந்தார். [2]
கலை பாணிகள் மற்றும் தாக்கங்கள்[தொகு]
சுப்பிரமண்யன் கேரளாவைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைகள், கோழிக்கோட்டு ஓவியம், வங்காளம் மற்றும் ஒடிசாவிலிருந்து பட்டசித்ரம், அத்துடன் இந்திய அரசவை ஓவியங்கள் ஆகியவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார்.
நினைவு நிகழ்ச்சி[தொகு]
கே. ஜி. சுப்பிரமண்யனின் ஏராளமான நினைவு நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. ஆர். சிவக்குமார் அவர்களால் புது தில்லி நவீன கலைக்கூடத்தில் நடத்தப்பட்ட "கே.ஜி. சுப்பிரமண்யன், ஒரு நினைவு" என்ற நிகழ்ச்சி நான்காவதும் பெரியதும் ஆகும் . [9]
கௌரவங்களும் விருதுகளும்[தொகு]
- 1963: பிரேசிலின் சாவோ பாலோ பின்னேல் வழங்கிய மெடாலியன் கெளரவம்
- 1965: லலித் கலா அகாதடமியின் தேசிய விருது
- 1968: புது தில்லி, முதல் சர்வதேச முத்தரப்பு தங்கப் பதக்கம்
- 1975: பத்மஸ்ரீ, இந்திய அரசு [10]
- 1991: ககன்-அபான் புரஸ்கார், விஸ்வ-பாரதி பல்கலைக்கழகம், சாந்திநிகேதன்
- 1992: டி.லிட். (கௌரவ டாக்டர் பட்டம்), இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம், கொல்கத்தா
- 2006: இந்திய அரசு வழங்கிய பத்ம பூசண் விருது [10]
- 2009: திஷிகோட்டம் விருது சாந்திநிகேதன், விஸ்வ-பாரதி பல்கலைக்கழகம்,
- 2011: சில்சார்,அசாம் பல்கலைக்கழகம், வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம்
- 2012: இந்திய அரசு வழங்கிய பத்ம விபூசண் விருது [10]
- 2015: திருபாய் தாக்கர் சவ்யாசாச்சி சரஸ்வத் விருது [11]
மாணவர்கள்[தொகு]
இவரது மாணவர்களில், பூபன் காகர், குலாம் ரசூல் சந்தோஷ், குலாம் முகமது சேக், ஹாகு ஷா, ஜெயந்த் பாரிக், ஜோதி பட், ஜோத்ஸ்னா பட், லக்ஷ்மா கவுட், மிருணாளினி முகர்ஜி, நீலிமா ஷேக், ராஜீவ் லோகன், ரத்தன் பரிமூ, ரேகா ரோத்விட்டியா, சாந்தி தவே, தோட்டா வைகுந்தம், விவன் சுந்தரம் ஆகியோர் இருந்தனர்.
குறிப்புகள்[தொகு]
- ↑ Tuli, N. (2004). Masterpieces & museum quality III: Indian contemporary paintings with rare books & vintage film memorabilia. OSIAN's. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781890206703. https://books.google.com/books?id=OQHqAAAAMAAJ. பார்த்த நாள்: 9 March 2017.
- ↑ 2.0 2.1 "Modern art pioneer KG Subramanyan, 92, passes away in Vadodara on 29 June". First Post. 29 June 2016. http://www.firstpost.com/living/modern-art-pioneer-kg-subramanyan-92-passes-away-in-vadodara-on-29-june-2863592.html.
- ↑ "His name is listed as Baroda Group of Artists' fifth annual exhibition of paintings by". Asia Art Archive.
- ↑ "Padma Awards". pib. 27 January 2013. 27 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Tuli, N. (2002). Masterpieces and museum-quality Indian modern & contemporary paintings. Osian's. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788190124751. https://books.google.com/books?id=h5nrAAAAMAAJ. பார்த்த நாள்: 9 March 2017.
- ↑ Subramanyan, K.G. (1999). Sketches, Scribbles, Drawings. Seagull Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170461500. https://books.google.com/books?id=lfnVAAAAMAAJ. பார்த்த நாள்: 9 March 2017.
- ↑ 7.0 7.1 "K.G. Subramanyam". contemporaryindianart.com. 18 அக்டோபர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 மார்ச்சு 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "K. G. Subramanyam". contemporaryindianart.com. 18 அக்டோபர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 மார்ச்சு 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The quintessential Indian artist". frontline.in. 9 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 10.0 10.1 10.2 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. 15 October 2015 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 21 July 2015 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ "K G Subramanyan awarded Savyasachi Award". The Times of India. 28 June 2015. 15 July 2010 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- K G Subramanyan Paintings
- "K G Subramanyan Profile,Interview and Artworks"
- 20th Century Museum of Contemporary Indian Art
- Subramanyan on "Artnet"
- The Quintessential Indian Artist" "Frontline"[தொடர்பிழந்த இணைப்பு]
- Centre for International Modern Art
- K. G. Subramanyan video at Web of Stories
- Children's books by K G Subramanyan
- K. G. Subramanyan : Artist Profile and Artworks on 'Artisera'