இராம்கிங்கர் பைஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராம்கிங்கர் பைஜ் (Ramkinkar Baij) (பிறப்பு: 1906 மே 26 - இறப்பு: 1980 ஆகஸ்ட் 2) இவர் ஓர் இந்திய சிற்பி மற்றும் ஓவியராவார். நவீன இந்திய சிற்பத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும், சூழ்நிலை நவீனத்துவத்தின் முக்கிய நபராகவும் இருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

இந்தியாவில் மேற்கு வங்காளத்தின் நவீன மாநிலமான பாங்குரா மாவட்டத்தில் பொருளாதார ரீதியாக மிதமான குடும்பத்தில் பைஜ் பிறந்தார். அந்த வகையில் பார்த்தால், இவர் பொதுவாக ஒரு வங்காளி, பலரும் நினைப்பது போல ஒரு ஆதிவாசி அல்ல. பைஜ் என்ற குடும்பப்பெயர் போய்டா (பைத்யா) மற்றும் போயோஜோவிலிருந்து பெறப்பட்டது. இவரது குடும்பப்பெயரான பொரமணிக் என்பது 1925 இன் ஆரம்பத்திலேயே இவரால் கைவிடப்பட்டது. எனினும், இவரது கலை படைப்புகள் பல கிராமப்புற வாழ்க்கைத் பாதிப்பைக் கொண்டுள்ளன. இவரது பல கலை படைப்புகள் கிராமப்புற தலித் அல்லது ஆதிவாசி ( சந்தால்) சமூகங்களின் வாழ்க்கை முறைகளால் ஈர்க்கப்பட்டுள்ளன. சாந்திநிகேதனைச்சுற்றி இவரது பணிகள் சார்ந்திருந்தது.

தனது இளம் வயதிலேயே இராம்கிங்கர் இந்திய பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட இந்திய சுதந்திர போராளிகளின் உருவப்படங்களை வரைந்தார். இவரது 16 வயதில் புகழ்பெற்ற பத்திரிகையாளர் இராமானந்தா சாட்டர்ஜி என்பவரின் கவனிப்பில் வர் ஆரம்பித்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இராம்கிங்கர் சாந்திநிகேதனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தில் நுண்கலை மாணவராக சேர்ந்தார். [1] பல்கலைக்கழகத்தில் பட்டயச் சான்று பெற்ற பிறகு சிற்பத் துறைக்குத் தலைமை தாங்கினார். இராம்கிங்கரின் புகழ்பெற்ற சிற்ப சீடர்களில் பிரபாசு சென், சாங்கோ சவுத்ரி, அவ்தார் சிங் பன்வார், மதன் பட்நகர், தர்மணி, பல்பீர் சிங் காட், இராஜுல் தரியல் மற்றும் சூசன் கோசு ஆகியோர் அடங்குவர். [2]

வாழ்க்கை மற்றும் வேலைகள்[தொகு]

சாந்திநிகேதன் வளாகத்தில் இராம் கிங்கர் பைஜ் உருவாக்கிய புத்தர் சிலை.
Art work of Ramkinker baij.jpg

சாந்திநிகேதன் கலைப் பள்ளியின் அதிகாரியான பேராசிரியர் ஆர். சிவ்குமார் [3] [4] எழுதினார், "இராம்கிங்கர் பைஜ் 1906 மே 25 அன்று மேற்கு வங்காளத்தின் பாங்குராவில் சிறிய பொருளாதார மற்றும் சமூக நிலைப்பாட்டைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். திறமை மற்றும் உறுதியின் காரணமாக, இந்திய கலையில் மிகவும் புகழ்பெற்ற ஆரம்பகால நவீனத்துவவாதிகளில் ஒருவராக திகழ்ந்தார். ஒரு சிறுவனாக இருந்தபோது, ​​உள்ளூர் கைவினைஞர்களையும், படத்தை தயாரிப்பவர்களையும் பார்த்து வளர்ந்தார்; மேலும் சிறிய களிமண் உருவங்களையும் ஓவியங்களையும் உருவாக்கினார். இவரது திறமை, அற்புதமானது, மேலும் இவரது வயது காரணமாக, உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்த்தார். இது 1925 ஆம் ஆண்டில், புதிய இந்திய கலை இயக்கத்திற்கான தேசிய வெளியீட்டாளரும் பிரபலமற்ற ஒன்றுக்கு ஆதரவாக வாதிடும் ஒரு கலைஞருமான இராமானந்தா சாட்டர்ஜியின் ஆலோசனையின் பேரில் சாந்திநிகேதனில் உள்ள கலைப் பள்ளியான கலா பவானாவுக்கு இவர் வழிநடத்தப்பட்டார். சாந்திநிகேதனில், நந்தலால் போஸின் வழிகாட்டுதலின் கீழ், இரவீந்திரநாத் தாகூரால் வடிவமைக்கப்பட்ட அதன் விடுதலையான அறிவுசார் சூழலால் ஊக்குவிக்கப்பட்ட இவரது கலைத் திறன்களும் அறிவார்ந்த எல்லைகளும் புதிய ஆழத்தையும் சிக்கலையும் பெற்றன. கலா ​​பவானில் தனது படிப்பை முடித்தவுடனேயே இவர் அதன் ஆசிரியரானார். மேலும் நந்தலால் மற்றும் பெனோட் பெகாரி முகர்ஜி ஆகியோருடன் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் நவீன கலைக்கான மிக முக்கியமான மையமாக சாந்திநிகேதனை உருவாக்குவதில் தீர்க்கமான பங்கு வகித்தார்."

ஆளுமை[தொகு]

சாந்திநிகேதனில் உள்ள இராம்கிங்கரின் மாணவரான, சிற்பி கே. எஸ். இராதாகிருட்டிணன் வெண்கலத்தில் உருவாக்கிய இவரது மார்பளவு உருவப்படம் இந்தியாவின் போபாலில் உள்ள நவீன கலை அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் காணப்படுகிறது.

சொந்த வாழ்க்கை[தொகு]

இராம்கிங்கர் தனது வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தார். ஆனால் இவர் இராதராணி தாசி என்பவருடன் வாழ்ந்தார். இவர் தனது வாழ்க்கையில் எந்தவிதமான பிணைப்புகளையும் கொண்டிருக்க விரும்பவில்லை. பெற்றோரின் வற்புறுத்தலையும் மீறியும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் சாந்திநிகேதனில் இருந்தபோது, இந்த வகையான வாழ்க்கை முறைக்காக இவருக்குத் தெரிந்தவர்களால் இவர் விமர்சிக்கப்பட்டார். இவர் ஒரு மெல்லிசைக் குரலும் நல்ல இசை உணர்வும் கொண்டிருந்தார். தாகூர் பாடலையும் உலாலோங்கிட்டியையும் பாடுவதை இவர் விரும்பினாலும், சத்யஜித் ரே (திரைப்பட தயாரிப்பாளர்) வழங்கிய மேற்கத்தியப் பாடல்களையும் கேட்டார். இவர் குழந்தைகளைப் போலவே விலங்குகளையும் விரும்பினார். இவர் இராதராணி மற்றும் அவரது மருமகன் திபக்கர் பைஜ் ஆகியோரை தனது சட்ட வாரிசுகளாக ஆக்கியுள்ளார். தனது 19 வயதில் சாந்திநிகேதனுக்கு வந்த இவர் இறக்கும் வரை அங்கேயே இருந்தார்.

இறப்பு[தொகு]

1980 மார்ச் 23, அன்று, பைஜ் பி.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் புரோஸ்டேட் சுரப்பியின் நோயால் அவதிப்பட்டு வந்தார். இவர் ஆகஸ்ட் 2 அன்று கொல்கத்தாவில் காலமானார். இவரது உடல் சாந்திநிகேதனில் இவரது மருமகனால் தகனம் செய்யப்பட்டது. இவர் மருத்துவமனையில் தங்கியிருந்தபோது தனது கடைசி சிற்பமான துர்கமூர்த்தியை உருவாக்கினார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்கிங்கர்_பைஜ்&oldid=2979129" இருந்து மீள்விக்கப்பட்டது