நுண்கலை
Jump to navigation
Jump to search
நுண்கலை (fine art) பயன்பாட்டைக் குறித்துக் கவனம் கொள்ளாத ஓர் அறிவார்ந்த தூண்டலாகவும் அழகின் வெளிப்பாடாகவும் அமைந்த கலை வடிவமாகும்.[1] இன்று நுண்கலைகளின் வகைகளில் காட்சிப்படுத்தப்படும் கலை வடிவங்களான ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை,ஒளிப்படக்கலை ,பதிப்புக்கலை மற்றும் நிகழ்த்து கலை வடிவங்களான இசை, நடனம், நாடகம் போன்றன முன்னணியில் உள்ளன. ஆயினும் பெரும்பாலான நேரங்களில், குறிப்பாக அருங்காட்சியகங்களில், நுண்கலைகள் என்று குறிப்பிடப்படுவன கலை வடிவங்களான ஓவியம்,சிற்பம் போன்றவற்றையே ஆகும்.[2][3]