ஒளிப்படவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒளிப்படவியல் (Photography) என்பது, ஒளிப்படத் தகடு அல்லது மின்னணு உணரி போன்ற ஒளியுணர் ஊடகத்தின் மீது ஒளியை விழச்செய்து படங்களைப் பதிவு செய்யும் வழிமுறையைக் குறிக்கும். ஒரு பொருளினால் தெறிக்கப்படும் அல்லது அதிலிருந்து வெளிவிடப்படும் ஒளி, உணர்திறன் கொண்ட வெள்ளி ஹாலைட்டை அடிப்படையாகக் கொண்ட வேதியியற் பூச்சின் மீது அல்லது ஒரு மின்னணு ஊடகத்தின்மீது ஒரு வில்லையினூடாகச் சென்று படும்போது, அப்பொருட் தோற்றம் குறித்த தகவல் வேதியியல் அல்லது மின்னணு முறையில் சேமிக்கப்படுகிறது. இது ஒளிப்படக் கருவியின் மூலம் நிகழ்த்தப்படுகிறது. ஒளிப்படவியல், வணிகம், பொழுதுபோக்கு போன்றவை உட்பட்ட பல துறைகளில் பயன்படுகின்றது. விளம்பரம், பதிப்புத்துறை, பத்திரிகைத் துறை போன்றவற்றில் இதற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. ஒளிப்படத்துறையை ஒரு கலை முயற்சியாகவும் பார்க்க முடியும்.

சொல்லிலக்கணம்[தொகு]

1834 இல் பிரான்சிய ஓவியரும் கண்டுபிடிப்பாளருமாகிய கேர்குளிஸ் புளோரன்ஸ் தன்னுடைய நாட்குறிப்பில் போட்டோகிராபி (photographie) என தன்னுடைய செயன்முறையினை விபரித்திருந்தார்.[1] சேர் யோன் கார்சல் 14 மார்ச்சு 1839 அன்று ஒளிப்படவியல் என அர்த்தம் கொடுக்கும் "photography" என்ற சொல்லினைப் பாவித்தார். ஆயினும் 25 பெப்ருவரி 1839 இல் செருமனிய செய்தித்தாள் யோகான் வென் மால்டர் ஏற்கனவே அச்சொல்லினை பாவித்ததாகக் குறிப்பிட்டது.[2]

ஒளிப்படவியல் எனும் ஆங்கிலப் பதம் கிரேக்கச் சொல்லான φωτός (phōtos), φῶς இன் ஆறாம் வேற்றுமை (phōs), "ஒளி"[3] மற்றும் γραφή (graphé) "கோடுகளால் சுட்டிக்காட்டல்" or "வரைதல்",[4] ஆகியவற்றின் கருத்தான "ஒளியினால் வரைதல்" என்பதிலிருந்து உருவாகியது.[5]

உசாத்துணை[தொகு]

  1. Boris Kossoy (2004). Hercule Florence: El descubrimiento de la fotografía en Brasil. Instituto Nacional de Antropología e Historia. ISBN 968-03-0020-X. http://books.google.com/books?id=wCoQAAAACAAJ. 
  2. Eder, J.M (1945) [1932]. History of Photography, 4th. edition [Geschichte der Photographie]. New York: Dover Publications, Inc.. பக். 258–259. ISBN 0-486-23586-6. 
  3. φάος, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus
  4. γραφή, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus
  5. Online Etymology Dictionary
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிப்படவியல்&oldid=1869148" இருந்து மீள்விக்கப்பட்டது