குவிய விகிதம்
ஒளியியலில், குவிய விகிதம் (Focal ratio, f-ratio, f-stop, அல்லது relative aperture[1]) என்பது, ஒளியியல் தொகுதி ஒன்றின் நுழைவுத் துளைக்கும், வில்லையின் குவியத் தூரத்துக்கும் இடையிலான விகிதம் ஆகும். எளிமையாகச் சொல்வதானால், குவிய விகிதம் என்பது, குவியத் தூரத்தை, ஒளித் துளையின் விட்டத்தால் வகுக்க வரும் எண்ணாகும். ஒளிப்படவியலில் முக்கியமான ஒரு கருத்துருவான வில்லை வேகம் என்பதன் கணிய அளவான இது அலகில் எண் ஆகும்.
குறியீடு
[தொகு]குவிய விகிதம் f/# பெரும்பாலும், N ஆல் குறிக்கப்படுகிறது. இத் தொடர்பு பின்வருமாறு அமையும்.
இங்கே குவியத் தூரமும், ஒளித்துளையின் விட்டமும் ஆகும். "f/#" என்பதை ஒரே குறியீடாக எழுதுவது வழக்கு. "f/#" க்கான குறிப்பிட்ட பெறுமதி எண் குறியை ஒரு பெறுமானத்தால் பதிலிடுவதன் மூலம் குறிக்கப்படும். எடுத்துக் காட்டாக, குவியத்தூரம், ஒளித்துளை விட்டத்திலும் 16 மடங்கு ஆயின், குவிய விகிதம் f/16 அல்லது .
உசாத்துணை
[தொகு]- ↑ Smith, Warren Modern Lens Design 2005 McGraw-Hill