நிறவெப்பநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
CIE 1931 x, y நிறத்தன்மை வெளி, பல்வேறு வெப்பநிலைகளிலுள்ள (பிளாங்கியன் வரை பாதை) கரும்பொருள் ஒளி மூலங்களின் நிறங்கள், இடைத்தொடர்புடைய நிறவெப்பநிலை ரேகைகளை காண்பிக்கிறது.

நிறவெப்பநிலை (color temperature) என்பது கட்புலனாகும் ஒளியின் ஒரு பண்பு ஆகும். இது ஒளி அமைப்பு, ஒளிப்படப்பிடிப்பு, ஒளிநாடா, வெளியீடு, உற்பத்தி, வான இயற்பியல், பிற துறைகளில் முக்கியமான பயன்பாடுகளை கொண்டுள்ளது. ஒரு ஒளி மூலத்தின் நிறவெப்பநிலை என்பது ஒளி மூலத்தினை ஒத்த சாயலில் ஒளி வீசும் ஒரு இலட்சிய கரும்பொருள் கதிர்த்தியின் வெப்பநிலை ஆகும். நிறவெப்பநிலை வழக்கமாக தனிவெப்பநிலையின் அலகான கெல்வினால் குறிப்பிட்டப்படும். அலகு குறியீடு K யை கொண்டிருக்கும்.

குறைந்த நிறவெப்பநிலைகள் (2,700-3,000 K) சூடான நிறங்கள் (மஞ்சள் கலந்த வெள்ளையிலிருந்து சிவப்பு வரையான நிறங்கள்) என்றும் 5,000 K இற்கு மேற்பட்ட நிறவெப்பநிலைகள், குளிர் நிறங்கள் (நீலங்கலந்த வெள்ளை) என்றும் அழைக்கப்படுகின்றன.[1]

வெவ்வேறு ஒளியமைப்பை வகைப்படுத்தல்[தொகு]

வெப்பநிலை மூலம்
1,700 K தீக்குச்சி சுடர்
1,850 K மெழுகுவர்த்தியின் சுடர், சூரியன் மறைதல் / சூரிய உதயம்
2,700–3,300 K இழை மின்விளக்கு
3,000 K மென்மையான வெள்ளை நிறமுள்ள புளோரசன்டு விளக்குகள்
3,200 K ஸ்டுடியோ விளக்குகள் போன்றவை
3,350 K ஸ்டுடியோ "CP" ஒளி
4,100–4,150 K நிலவொளி,[2] செனான் இழை விளக்கு
5,000 K கீழ்வானத்தின் பகலொளி
5,000 K புளோரசன்டு குளாய் விளக்குகள் அல்லது குளிர் வெண்ணிறமான குறுகிய புளோரசன்டு விளக்குகள் (CFL)
5,500–6,000 K செங்குத்து பகலொளி, மின் ஃபிளாஷ் ஒளி
6,500 K பகலொளி, மேகமூட்டம்
6,500–9,300 K LCD அல்லது CRT திரை
15,000–27,000 K தெளிந்த நீல வடக்கு வானம்
இந்த வெப்பநிலைகள் வெறுமனே கருதுகோளானவை, கணிசமான மாறுபாடுகள் இருக்கலாம்.

ஒர் இலட்சிய கரும்பொருளில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சின் நிறவெப்பநிலை கெல்வினில் அதன் மேற்பரப்பு வெப்பநிலை என வரையறுக்கப்படுகிறது, அல்லது மாற்றாக நுண் தலைகீழ் கெல்வின் (Mired) இல் கணிக்கலாம். இது ஒளி மூலங்களை ஒப்பிடுவதற்கான ஓர் நியம வரையறையை வழங்குகிறது.[3]

வெப்பமான மேற்பரப்பு வெப்ப கதிர்வீச்சை வெளியிடுகின்றது ஆனால் அது ஒரு இலட்சிய கரும்பொருள் கதிர்த்தியல்ல, இங்கு ஒளியின் நிறவெப்பநிலை மேற்பரப்பின் உண்மையான வெப்பநிலை இல்லை. ஒரு இழை மின்விளக்கின் ஒளி வெப்ப கதிர்வீச்சு ஆகும். தோராயமாக விளக்கு ஒரு சிறந்த கரும்பொருள் கதிர்த்தி, அதன் நிறவெப்பநிலை இழை வெப்பநிலை அடிப்படையில் இருக்கும்.

புளோரசண்டு விளக்குகள் போன்ற பல பிற ஒளி மூலங்கள், முதன்மையாக வெப்ப கதிர்வீச்சு தவிர்ந்த பிற செயன்முறைகள் மூலமாகவே ஒளியை உமிழ்கின்றன. இந்த உமிழப்படும் கதிர்வீச்சு ஒரு கரும்பொருள்-நிறமாலை வடிவில் அமையாது. இந்த மூலங்கள் ஒரு தொடர்புடைய நிறவெப்பநிலை (சிசிடி) என வழங்கப்படும். சிசிடி எனபது மனித நிற புலனுணர்வு மிக நெருக்கமாக விளக்கில் இருந்து வரும் ஒளிக்கு பொருந்தும் ஒரு கரும்பொருள் கதிர்த்தி நிறவெப்பநிலை ஆகும். அத்தகைய ஒரு தோராய மதிப்பீடு இழை மின்விளக்கின் ஒளிக்கு தேவையில்லை ஏனென்றால் இழை மின்விளக்கின் சிசிடி எளிதாக ஒர் கரும்பொருள் கதிர்த்தி வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி உள்ளது.

சூரியன்[தொகு]

சூரியன் வானில் கடக்கும்பொழுது, அது அதன் நிலையை பொறுத்து, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் தோன்றலாம். ஒரு நாளில் சூரியனின் நிறம் மாற்றமடைதல் முக்கியமாக ஒளிச்சிதறலின் விளைவினால் ஆகும், கரும்பொருளின் கதிர்வீச்சில் ஏற்படும் மாற்றங்களால் அல்ல. வானம் நீல நிறமாக தோன்றுவது வளிமண்டலத்தில் சூரிய ஒளியின் ரேலி சிதறல் காரணமாக ஏற்படுகிறது இது சிவப்பு ஒளியை விட நீல ஒளி அதிகமாக சிதறுவதால் ஏற்படுகிறது. பகலொளியானது நிறவெப்பநிலை 6,500 K (D65 பார்க்கும் தரநிலை) அல்லது 5,500 K (பகல்-சீரான புகைப்பட சுருள் தரநிலை) உடைய கரும்பொருளை ஒத்த நிறமாலையை கொண்டுள்ளது.

கரும்பொருள் கோட்பாட்டின் அடிப்படையில் நிறங்களில் சிவப்பு குளிர்ந்த, குறைவான வெப்பநிலைகளில் ஏற்படும் போது நீலம் உயர் வெப்பநிலையில் ஏற்படுகிறது. இது "சிவப்பு" "சூடான", மற்றும் "நீலம்" "குளிர்மையான" நிறங்கள் எனும் கலாச்சார கோட்பாடுகளிற்கு முரணானவை. [4]

நிறவெப்பநிலையின் பயன்பாடுகள்[தொகு]

ஒளியமைப்பு[தொகு]

Color temperature comparison of common electric lamps
பொதுவான மின்விளக்குகளின் நிறவெப்பநிலைகளிற்கு இடையிலான ஒப்பீடு.

கட்டடங்களின் உட்புறங்களிற்கான ஒளியமைப்பில் ஒளிர்வின் நிறவெப்பநிலையை கணக்கிலெடுத்தல் முக்கியமானது. எடுத்துக்காட்டாக வெப்பமான (அதாவது குறைந்த நிறவெப்பநிலை) ஒளி ஓய்வெடுப்பதனை ஊக்குவிக்க பொது இடங்களில் பயன்படுத்தப்படுகையில் குளிர்மையான (அதாவது உயர் நிறவெப்பநிலை) ஒளி அலுவலகங்களில் கவனத்தை மேம்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

கூடுதல் வாசிப்பு[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறவெப்பநிலை&oldid=3218590" இருந்து மீள்விக்கப்பட்டது